என் மலர்
நீங்கள் தேடியது "Viduthalai Chiruthai Katchi"
- சாதி பெருமை அரசியல்தான் இதுபோன்ற கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது.
- தமிழ்நாடு உட்பட மாநில அரசுகளும் இதனை கண்டு கொள்ளவில்லை.
நெல்லையில் ஆணவப் படுகொலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை செய்யும் என பெரிதும் நம்புகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக சாதிய மற்றும் மதவாத சக்திகள் சாதிப்பெருமிதத்தை ஒரு அரசியலாக உயர்த்திப் பிடித்து, இதுபோன்ற கொலைகளை ஊக்கப்படுத்துகின்றார்கள்.
அவர்கள் பரப்பும் சாதி பெருமை அரசியல்தான் இதுபோன்ற கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது.
தேசிய அளவில் ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்காக பலரும் குரல் எழுப்பினாலும், ஒன்றிய அரசு இந்த கோரிக்கையை பொருட்படுத்தவில்லை.
தமிழ்நாடு உட்பட மாநில அரசுகளும் இதனை கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசி உள்ளார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.
மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என ஏற்கனவே பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என அவர் பேசி உள்ளார். திடீரென பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.
திருமாவளவனின் வீடியோ பகிரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. திருமாவளவனின் பேச்சு அரசியல் நிலைப்பாடு மட்டுமே என்று தெரிவித்தார்.
- திடீரென பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- திருமாவளவனின் பேச்சு அரசியல் நிலைப்பாடு மட்டுமே என்று வன்னியரசு விளக்கம் அளித்து இருந்தார்.
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என ஏற்கனவே பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.
அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என அவர் பேசி உள்ளார்.
திடீரென பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருமாவளவனின் பேச்சு அரசியல் நிலைப்பாடு மட்டுமே என்று அக்கட்சியின் துணைப் பொது செயலாளர் வன்னியரசு விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் தனது வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நீக்கி உள்ளார்.
- சில மணிநேரங்களில் வீடியோ எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
- வீடியோ குறித்து தனக்கு எதுவும் தெரியாது.
மதுரை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் எக்ஸ் வலைதளத்தில் இன்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் திருமாவளவன் ஆட்சியில் அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென பேசி இருந்தார். இந்த வீடியோ மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே சில மணிநேரங்களில் அந்த வீடியோ எக்ஸ் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதற்கிடையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வந்த வி.சி.க. தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் ஆட்சி அதிகாரம் குறித்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் வீடியோ குறித்து தனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய எக்ஸ் தளத்தில் தவறுதலாக பதிவு செய்திருக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எங்களின் நிலைபாடு நீண்ட காலமாக உள்ளது என்றார்.
- ஆதவ் அர்ஜூனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து கூறிவருவதாக அவர் மீது அவரது சொந்த கட்சியினரே புகார் கூறி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பேசும் பொருளாக மாறின. மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சிக்கு நெருடலான சூழலை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆதவ் அர்ஜூனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து அக்கட்சியின் உயர்மட்ட குழு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனாவை விசிக கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்வதென முடிவெடிக்கப்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து விசிக சார்பில் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆதவ் அர்ஜூனா விசிக கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1. கட்சியின் துணை பொதுச்செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது.
2. இது குறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள்,மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீநான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உத்தரவின் பேரில் வாடகை கார்களை இயக்க ஏற்கனவே இருந்தவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் அமர்த்தப்பட்டதாக தெரிகிறது.
- இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இதில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று வர 2 வாடகை கார்களை பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உத்தரவின் பேரில் வாடகை கார்களை இயக்க ஏற்கனவே இருந்தவர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் அமர்த்தப்பட்டதாக தெரிகிறது.
இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கோபி நாயினார் தலைமை தாங்கினார். வக்கீல்கள் ஜீவா, இளங்கோ, ராமமூர்த்தி, மதன், ஆல்பர்ட், தென்னரசு உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களிடம் வட்டார மருத்துவ அலுவலர் பால மணிகண்டன், ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுகாதார பணிகளில் துணை இயக்குனரை சந்தித்து இதுகுறித்து முறையிடுமாறு ஆலோசனை வழங்கினர். இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






