என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாவட்டத்தில் இன்று முதல் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள 76 ஆயிரத்து 500 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் 12 வயது முதல் 14 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் மீரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி மற்றும் நகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் பாலாஜி, அகஸ்டின் பிரபாகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரசன்னா, செந்தில்குமாரி, சங்கீதா, சுபாஷிணி, சரிதா, இளைஞரணி துணை செயலாளர் ஜெயசீலன், வெங்கடேசன், பாஸ்கர்,பிரவின், சரத், அருள் ஜீவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே கீழ் காங்கேயன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40) கூலித்தொழிலாளி திருமணமானவர். மேலும் நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்தனர். உடனே மணிகண்டனை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் முத்தாண்டி குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலை எல்.என்.புரம் வ.உ.சி நகரில் அமைந்துள்ளது பிரசன்ன மாரியம்மன் கோவில்.
நேற்று இரவு கோவில் நிர்வாகி சுரேஷ்குமார் வழக்கம் போல இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது இதை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மர்ம நபர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வழியாக சென்றனர். போலீசாரின் விசில்சத்தம் கேட்டவுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். இதனால் உண்டியலில் இருந்த சிறிய அளவு நகை பணம் தப்பியது.
இன்று காலையில் கோவிலை திறப்பதற்காக வந்த கோவில் தர்மகர்த்தா சுரேஷ் குமாருக்கு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர்பண்ருட்டி போலீசில் புகார் செய்தார் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் புஷ்ப ராஜ்,ரங்கநாதன் மற்றும் போலீசார்போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர்நேரில்சென்று சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படைஅமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அம்பேத்கார் நகர் தியாகு (16) பிரகாஷ் (21), ஆர்.எஸ்.மணிநகர் அசார் (21) ஆகியோர் உண்டி யலை உடைத்து கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 3பேரையும் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிதம்பரம் அருகே பெரியகுப்பம் பகுதியில் தனியார் ஆயில் மில் உள்ளது. இந்த பகுதியில் காப்பர் கம்பி திருடியதாக அன்னவெளி கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரை கைது செய்யப்பட்டார்.
தப்பி ஓடிய கந்தவேல் என்பவரை புதுச்சத்திரம் போலீசார் தேடி வருகிறார்கள்.
சிதம்பரம் பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை அமோகமாக நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சிதம்பரம் டவுன் போலீசார் சிதம்பரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பாவு சந்து பகுதியில் சென்றபோது 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உஷாரான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை போட்டனர். சோதனையில் அவர்களிடம் லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது. லாட்டரி டிக்கெட் விற்றதாக கந்தன், காமராஜர் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:
சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று நள்ளிரவு பண்ருட்டி வந்தது. பண்ருட்டியில் பிரேக் டவுன் ஆனதால் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அந்தபஸ்சை பழுதுபார்க்கும் பணிவிரைவாக தொடங்காததால் பஸ்சில் வந்த பயணிகள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து பணிமனையில் இருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு பண்ருட்டி 4 முனை சந்திப்பில் கொண்டு வந்து இறக்கி விட்டனர். பாதி வழியில் பயணிகளை இறக்கி விடப்பட்டதால் பயணிகள் தவித்தனர்.
நள்ளிரவு 2 மணி அளவில் பண்ருட்டி4 முனை சந்திப்பில் சாலையின் குறுக்கே திரண்டு நின்றுஅந்த பஸ் டிரைவர், கண்டக்டரை சிறைபிடித்து மறியல் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் நிலவியது. போக்குவரத்தும் பாதித்தது.
தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிவழியில் தவித்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அந்த வழியாக வந்த வேறொரு பஸ்சில் அவர்களை அனுப்பி வைத்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரத்து இருக்கும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. அதன் பின்னர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் தொடர்ந்து நீர்மட்டம் சரிய தொடங்கியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். சென்னைக்கு அனுப்ப கூடிய குடிநீர் அளவும் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. இன்று 591 கனஅடி நீர் ஏரிக்கு வருகிறது. காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 43.10 அடியாக உள்ளது.
கடந்த வாரம் சென்னை மாநகர் குடிநீருக்காக 65 கனஅடி நீர் மட்டுமே அனுப்பப்பட்டது. தற்போது 70 கன அடியாக நீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக சென்னை மாநகருக்கு தண்ணீர் அனுப்பப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பூலாம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி வேல். இவரது மகன் அபிசுந்தர் (வயது 17).
சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த அபிசுந்தர் கடந்த வாரம் ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற அபிசுந்தர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டு பேசியபோது அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மறுமுனையில் பேசினார். அபிசுந்தரின் செல்போன் அதே பகுதியில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் அருகே கிடந்தது என்று கூறினார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த அபிசுந்தரின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது அபிசுந்தர் அந்த கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இது குறித்து வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிணற்றில் இறங்கி அபிசுந்தரின் உடலை மீட்டனர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அபிசுந்தரின் உடலில் காயங்கள் உள்ளது. எனவே அவரை யாரோ கொலை செய்து கிணற்றில் வீசி உள்ளனர் என்று அவரது உறவினர்கள் கூறினர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்வரை அபிசுந்தரின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வாலிபர் அபிசுந்தரின் மரணம் தொடர்பாக திட்டக்குடி அருகே உள்ள நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த 5 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அபிசுந்தரின் குடும்பத்துக்கும் அதே ஊரைச்சேர்ந்த இளையராஜா, அண்ணாதுரை ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனால் சம்பவத்தன்று தனியாக வந்த அபிசுந்தரை கழுத்தை நெரித்து சரமாரியாக முகத்தில் தாக்கி கொலை செய்து அவரை கிணற்றில் வீசியுள்ளனர். இதையடுத்து இளைய ராஜா, அண்ணாதுரை, பாண்டியன், மணிமேகலை, பெரியம்மான் மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தந்த வாக்குமூலத்தில் மேற்கண்ட தகவல்களை கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் சம்பவத்தன்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.
இதுதொடர்பாக மஞ்சக்குப்பம் கிராம அதிகாரி ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்து இறந்துபோன நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன முதியவரின் உடல் கடலூர் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பணிமனையில் இருந்து அரசு டவுன் பஸ் வழக்கம் போல் மங்களூர் சென்று விட்டு இன்று காலை திட்டக்குடி நோக்கி வந்தது அப்போது ராமநத்தத்தில் இருந்து ஏறிய மாணவர்கள் பஸ்சில் பயணிக்கும் போது மாணவிகளிடம் பிரச்சினை ஏற்படுத்தியதாவும், படிக்கட்டில் தொங்கியவாறு வருவதாக புகார் எழுந்தது. இதனை டிரைவர், கண்டக்டர் அவ்வாறு தொங்க கூடாது என எச்சரித்து பஸ் உள்ளே செல்லுமாறு கூறியுள்ளனர்.
ஆத்திரமடைந்த மாணவர்கள் தவறான வார்த்தைகளை உச்சரித்து டிரைவர், கண்டக்டரை திட்டினர். உடனே பஸ் டிரைவர் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு பஸ்சை நிறுத்தினார். தகவலறிந்து வந்த டிஎஸ்பி சிவா மாணவர்களிடம் இது போல் பேசக்கூடாது, பஸ் படிகட்டில் பயணிக்கக் கூடாது என எச்சரித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






