என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சென்னை சாலை எல்.என்.புரம் வ.உ.சி நகரில் அமைந்துள்ளது பிரசன்ன மாரியம்மன் கோவில்.
நேற்று இரவு கோவில் நிர்வாகி சுரேஷ்குமார் வழக்கம் போல இரவு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது இதை நோட்டமிட்டுக் கொண்டிருந்த மர்ம நபர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வழியாக சென்றனர். போலீசாரின் விசில்சத்தம் கேட்டவுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். இதனால் உண்டியலில் இருந்த சிறிய அளவு நகை பணம் தப்பியது.
இன்று காலையில் கோவிலை திறப்பதற்காக வந்த கோவில் தர்மகர்த்தா சுரேஷ் குமாருக்கு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் நகை கொள்ளை போனது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர்பண்ருட்டி போலீசில் புகார் செய்தார் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் புஷ்ப ராஜ்,ரங்கநாதன் மற்றும் போலீசார்போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர்நேரில்சென்று சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படைஅமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அம்பேத்கார் நகர் தியாகு (16) பிரகாஷ் (21), ஆர்.எஸ்.மணிநகர் அசார் (21) ஆகியோர் உண்டி யலை உடைத்து கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 3பேரையும் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






