என் மலர்
கடலூர்
- கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது.
- காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.
கடலூர்:
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிக கனமழை கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் கீரப்பாளையம் குமராட்சி குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இன்று முதல் மீண்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர் இதனை தொடர்ந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் காலை நேரங்களில் பனிப்பொழிவு இருப்பதால் கடும் குளிர் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருவதையும் காணமுடிந்தது மேலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை, சுட்டெரிக்கும் வெயில், தற்போது காலை நேரங்களில் பனிப்பொழிவு போன்றவற்றால் பொதுமக்கள் சீதோசன மாற்றம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காலை நேரங்களில் ஒருபுறம் வெயிலும் மற்றொரு புறம் குளிர்ந்து காற்றும் வீசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காலை நேரங்களில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும் காணமுடிந்தது.
- கடந்த சில நாட்களாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் பலத்தமழை பெய்தது.
- இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள டி.புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். அவரது மனைவி நிர்மலா (வயது 49). இவர்களது மகன் அய்யப்பன். கடந்த சில நாட்களாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் பலத்தமழை பெய்தது. இதன் காரண மாக சோமசுந்தரத்தின் வீடு மழையில் நனைந்திருந்தது. சம்பவத்தன்று சோமசுந்தரம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.
அப்போது கனமழை காரணமாக வீட்டுசுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் இடிபாடு களுக்குள் சிக்கினர். அவர்கள் வேதனையால் அலறிதுடித்தனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ள வர்கள் ஓடி வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா நேற்று நள்ளிரவு இறந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து டி.புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்டரக்கோட்டை சக்தி நகரில் சாராய விற்பனையில் பிரபாகரன் ஈடுபட்டார்.
- சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார்,சப்இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் இன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி அருகே கண்டரக்கோட்டை சக்தி நகரில் சாராய விற்பனையில் ஈடுபட்டபிரபாகரன், வரது மனைவி பிரபாகரன் மனைவி ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஏராளமான சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிதம்பரம்:
கடலூர் அருகே உள்ள வேலங்கிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 65). அவரது மனைவி சுமதி. இவர்களது மகள் புஷ்பரோகிணி (19).
இவர் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார். இவருக்கும் பெரியாண்டிகுழி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் வருகிற 20-ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.
இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் புஷ்ப ரோகிணி கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த சுந்தர மூர்த்தி தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் புஷ்பரோகிணி கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக அக்கம் பக்கம் விசாரிக்கையில் புஷ்பரோகிணிக்கு வேலங்கிபட்டு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் (20) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் காதலனுடன் சென்றுள்ளார்.
இந்த தகவலை அறிந்த சுந்தரமூர்த்தி, சுமதி ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுபற்றி வெளியே தெரிந்தால் ஊர் மக்கள் கேவலமாக பேசுவார்களே என்று வேதனையடைந்தனர். எனவே தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை கணவன்-மனைவி 2 பேரும் அதே பகுதியில் உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான வயலில் அமர்ந்து விஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் கணவன்-மனைவி 2 பேரும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கினர்.
அப்போது அந்த வழியாக சென்ற விவசாயிகள் 2 பேர் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசாரும் அங்கு விரைந்தனர். அப்போது மயங்கி கிடந்த கணவன்-மனைவியை பார்த்தபோது 2 பேரும் இறந்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதுபற்றி அறிந்த சுந்தர மூர்த்தியின் மகன் சந்திரசேகரன் அங்கு விரைந்தார். தனது தாயும், தந்தையும் இறந்துகிடப்பதை பார்த்து கதறிதுடித்தார். உடனே 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
- அய்யப்ப பக்தர்கள் அதி காலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலூர்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம்1-ம் தேதி முதல் 60 நாட்கள்நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதனையடுத்து கார்த் திகை முதல் நாளை முன்னிட்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவில், காமராஜர் நகர் சக்தி விநாயகர் கோவில், சோமேஸ்வரன் கோவில், ஆகிய திருக்கோவில்களில் நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து விரதமிருக்கக்கூடிய அய்யப்ப பக்தர்கள் அதி காலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் மாலை அணிந்து சுவாமியே சரணம் அயயப்பா என்ற பக்தி கோசங்கள் முழங்க விரதத்தை தொடங்கினர். இதனால் கோவில் பகுதி முழுவதும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- பூரனாங்குப்பம் சந்திப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார்.
- எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே பூரனாங்குப்பம் சந்திப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த தவளக்குப்பம் போலீசார் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவர்யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவ உள்ளது.
- மீன்பிடி உபகரணங்களை மேடான பகுதிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட மீன்வள த்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது . மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவ உள்ளது. கடல் காற்றானது 45 முதல் 65 கி.மீ வேகத்தில் வீசும் என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது. ஆகவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் நாளை (18-ந் ) தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாது அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் ஏற்கனவே கடலில் உள்ள தங்கு கடல் படகுகள் அருகாமையில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரைதிரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் 19, 20 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படகு, மீன்பிடி வலை மற்றும் இயந்திரம் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை மேடான பகுதிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- சபரிமலைக்கு மாலை போடக்கூடாது என பெற்றோர் கண்டித்ததால் துறைமுக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
- நீண்டநேரம் கதவு திறக்காததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கடலூர்:
மயிலாடுதுறை அருகே உள்ள மல்லிகொல்லையை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் சீலன் (வயது 23). இவர் பரங்கிப்பேட்டை கீைரக்கார தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி பரங்கிப்பேட்டை துறைமுக பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் நேற்று தனது பெற்றோரிடம் செல்போ னில் நான் சபரிமலைக்கு மாலைபோட போகிறேன் என்று கூறி னார். அதற்கு பெற்றோர் இந்த ஆண்டு மாலை போட வேண்டாம். அடுத்த ஆண்டு சபரிமலைக்கு செல்லலாம் என தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த சீலன் தனது அறைக்கு வந்தார்.
அங்கு நைலான் கயிற்றால் மின்விசிறி யில் தூக்குபோட்டு தற்கொ லை செய்தார். நீண்டநேரம் கதவு திறக்காததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுபற்றி பரங்கிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ேபாலீசார் அறைகதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் தூக்கில் தொங்கி ய சீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பரங்கிப்பே ட்டை விரைந்தனர்.
- 10 கிராம் எடையுள்ள போலி தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ. 31 ஆயிரம் பெற்று சென்றுள்ளார்
- வினோத் அந்த பெண்ணை பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம்புலியூர் கிராமத்தில் அடகு கடை கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இதனை வினோத் நடத்திவருகிறார். கடந்த 10-ந் தேதி இந்த கடைக்கு வந்த பெண் ஒருவர் தனது குழந்தைகள் வளையல்கள் என பொய் சொல்லி 10 கிராம் எடையுள்ள போலி தங்க வளையல்களை அடமானம் வைத்து ரூ. 31 ஆயிரம் பெற்று சென்றுள்ளார் பின்னர் வினோத் அதனை மாற்றி அருகில் உள்ள வங்கியில் அடகு வைக்க முயன்றபோது அது போலி நகை என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அதே பெண்மணி மீண்டும் வேறுஒரு போலி நகையை வைக்க மீண்டும் அதே அடகு கடைக்கு வந்தார். அப்போது அந்த நகையை சோதித்த பார்த்த போது அது போலி நகை என தெரியவந்தது. உடனே உரிமையாளர் வினோத் அந்த பெண்ணை பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் இந்த பெண்ணுடன் மேலும் 2பேர் வந்து உள்ளனர். பிடிபட்ட பெண்ணின் பெயர் சத்யா(வயது38)சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததுபின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த பெண்ணுடன் வந்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- வேப்பூர் அருகே 3 டன் ரேசன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
- திடீரென ஒருவர் வண்டியில் இருந்து தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், வண்டியில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.
கடலூர்:
வேப்பூர் போலீஸ் ஏட்டு ஞானசேகரன் தலைமையிலான போலீசார், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் கூட்டுரோடு அருகே வாகண தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த மகேந்திரா பிக்கப் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். திடீரென ஒருவர் வண்டியில் இருந்து தப்பி ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், வண்டியில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் வேப்பூர் அருகே பெரியநெசலூரைச் சேர்ந்தவர் சசிக்குமார், (வயது37) என்பவர் ரேசன் அரிசி கடத்தல் ஏஜெண்டாக இருப்பதும், 3 டன் ரேசன் அரிசியை கடத்தி செல்வதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து, இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, சசிக்குமாரை கைது செய்தனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக காவலாளி வாய்க்காலில் தவறி விழுந்து பலியானார்.
- இதுபற்றி அவர்கள் தீவிரமாக துப்புதுலக்கினர்.
சிதம்பரம், நவ.17-
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமாரமங்கலம் ராதாநகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இந்த ஆடுகள் காணாமல்போனது. எனவே ராமசாமி ஆடுகளை தேடி இரவு நேரத்தில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராமசாமியின் மகன் கார்த்திகேயன் தனது தந்தையை தேடினார். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மருநாள் குமாரபுரம்-நடராஜபுரம் வடிகால் வாய்க்காலில் ஒருவர் பிணமாக கிடப்பதாக அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இது பற்றி அவர்கள் தீவிர மாக துப்புதுலக்கினர். இந்த தகவல் கார்த்திகேயனுக்கு எட்டியது. அவர் உடனடியாக வடிகால் வாய்க்கால் பகுதிக்கு சென்றார். அப்போது தனது தந்தையின் உடலை போலீசாருக்கு அடை யாளம் காட்டினார். அண்ணாமலை பல்க லைக்கழக காவலாளியான ராமசாமி வடிகால் வாய்க்காலில் தவறிவி ழுந்தபோது தலையில் அடிபட்டுள்ளது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- பால் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.
- 5 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் குடிமை பொருள் வழங்க ல்குற்றப்புலனாய்வுத்துறை போலீசார்ப ண்ருட்டி,புதுப்பேட்டை சிறுகிராமத்தில்இ ன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போதுஅந்தவழியாக வந்த பால் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில்மூட்டை, மூட்டையாக ரேசன்அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரி ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்திருவண்ணாமலை மாவட்டம்நாச்சியார் பேட்டை மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த சரவணன் (34) என்பது தெரியவந்தது. அவர்திருவண்ணாமலையி ல்கள்ளச்ச ந்தையில்விற்பனைசெய்ய 5 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்துசரவணனை போலீசார் கைது செய்து 5 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மற்றும் பால் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.






