என் மலர்
கடலூர்
- மருந்தக உரிமையாளர், அமுதாவின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்து, பெண் சிசு இருப்பதாக கூறினார்.
- 3-வதும் பெண் குழந்தையை பெற்றெடுக்க விரும்பாத அமுதா, கருக்கலைப்பு செய்யுமாறு கூறியுள்ளார்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அமுதா (வயது 27). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அமுதா மீண்டும் கர்ப்பமானார். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா தெரிந்து கொள்ள அமுதா விரும்பினார். இது தொடர்பாக பரிசோதனை செய்ய கடந்த 17-ந்தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூரில் உள்ள தனியார் மருந்தகத்துக்கு சென்றார். அங்கிருந்த மருந்தக உரிமையாளர், அமுதாவின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்து, பெண் சிசு இருப்பதாக கூறினார்.
3-வதும் பெண் குழந்தையை பெற்றெடுக்க விரும்பாத அமுதா, கருக்கலைப்பு செய்யுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த மருந்தகத்திலேயே கருவை கலைப்பதற்கான மாத்திரைகள் அமுதாவிற்கு கொடுக்கப்பட்டது. அதை வாங்கி சாப்பிட்ட அவர், வேப்பூர் அருகே நிராமணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு 2 நாள் தங்கியிருந்த அவருக்கு நேற்று மாலை அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அமுதாவை சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அமுதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 6 மாதத்துக்கு முன்பு ராமநத்தத்தில் உள்ள ஒரு மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்தபோது இளம்பெண் இறந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது வேப்பூர் இளம்பெண்ணும் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சாலை விரிவாக்க பணிகளுக்காக செல்லும் வாகனங்களால் ஏற்படும் அதிக விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடை வீதிகளில் அதிக பாரம் ஏற்றுக் கொண்டு சாலை விரிவாக்க பணிகளுக்காக செல்லும் வாகனங்களால் ஏற்படும் அதிக விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பழுதான சாலைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாமல் ஆங்காங்கே ஏற்படும் பள்ளங்களில் கான்கிரீட் கலவைகளை கொட்டி மீண்டும் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். அதோடு சாலையில் புழுதி பறப்பதால் அந்த பகுதி தூசி மண்டலமாக காட்சி தருகிறது.
எனவே மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இது தொடர்பான தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளும் உடனடியாக காட்டுமன்னார்கோயில் பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்களின் துயரை நேரில் ஆராய்ந்து இந்த சாலைகளை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதேபோல் இந்த சாலைகளை சரி செய்யா விட்டால் சாலை மறியல் நடத்தப் போவதாக இந்திய மனித உரிமை கட்சி மற்றும் சிறுகுறு விவசாய சங்க தலைவர்கள், பகுஜன் ஜமாஜ் கட்சி நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர்.
- திட்டக்குடி பகுதிகளில் அரசு கேபிள் சேவை முடக்கப்பட்டது.
- அரசு இணைப்பை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டார பகுதிகளில் சிறுமுலை, பெருமுலை, திட்டக்குடி, தர்மகுடிகாடு, கோழியூர் ,தொள்ளார்குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் இணைப்பு பெற்று டிவி பார்த்து வருகின்றனர். நேற்று காலை 9 மணி முதல் சுமார் 24 மணி நேரம் அரசு கேபிள் நோ சிக்னல், இணைப்பு கிடைக்கவில்லை இதனால் கேபிள் சேவை முடங்கியதால் பொதுமக்கள் நாட்டு நடப்புகளை அறிய முடியாமலும் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு சேனல்களை பார்க்க முடியாமல் உள்ளதால் அரசு உடனடியாக தொடர்ந்து அரசு இணைப்பை செயல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- நடராஜ தீட்சிதர், பொது தீட்சிதர்கள் அலுவலகம் முன்பு இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
- கோவில் பொது தீட்சிதர்களை கண்டித்து தீட்சிதர் ஒருவரே உண்ணாவிரத போராட்டம் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் தர்ஷன் என்கிற நடராஜ தீட்சிதர். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனகசபை மீது ஏறிய விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே அவருக்கு கோவில் பணி வழங்காமல் இருந்தது.
இந்த நிலையில் தனக்கு கோவில் பணி வழங்கவேண்டும், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், கோவில் தீட்சிதர்களை கண்டித்தும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை நடராஜ தீட்சிதர், பொது தீட்சிதர்கள் அலுவலகம் முன்பு இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது தீட்சிதர்களுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சிதம்பரம் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோவில் பொது தீட்சிதர்களை கண்டித்து தீட்சிதர் ஒருவரே உண்ணாவிரத போராட்டம் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 3 மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்றனர்.
- பெண் முதியவரிடம் அவரது பையை பிடுங்கிக் கொண்டு அதில் உள்ள ரூ. 500 யை எடுத்துக்கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமையில் இயங்கி வரும் வாரச்சந்தையின் பொழுது அதிக அளவில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இதனால் வார சந்தையில் வாராவாரம் இருசக்கர வாகன திருட்டு மற்றும் வழிப்பறி செல்போன் திருட்டு போன்றவை நடைபெற்று வந்தன. நேற்று போலீசார் வாரச்சந்தையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது 3 மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக சென்றனர். இதைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த சிறுப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதனையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அதிவேகமாக விரைந்து கீழ் ஒரத்தூர் வழியாக சென்றனர்.
இதை அறிந்த போலீசார் கீழ் ஒரத்தூர் பகுதியில் உள்ள தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அப்பகுதி ஊர் மக்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதியில் வந்த அந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் அவர்களை பிடித்து வேப்பூர் போலீஸ் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் வேப்பூர் கூட்டு ரோட்டில் வயதான பெண் முதியவரிடம் அவரது பையை பிடுங்கிக் கொண்டு அதில் உள்ள ரூ. 500 யை எடுத்துக்கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு வழக்கில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்குரவாரி கிராமம் மேல தெருவை சேர்ந்த 17 வயது கொண்ட 3 மாணவர்களை ேபாலீசார் கைது செய்தனர்.
- பன்றிகள் வளர்ப்போர் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- பல லட்சம் மதிப்பிலான பன்றிகளை பறிமுதல் செய்து கொண்டு செல்கின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அதன் சுற்றுவட்டார பகுதி களில் பன்றிகள் வளர்ப்போர் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்ப ங்கள் வசித்து வருகின்ற னர் இவர்களின் நிரந்தர தொழில் பன்றி வளர்ப்பு ஆகும். இந்த நகர்ப்புற பகுதி களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒரு குடும்பத்திற்கு 10 வீதம் என்ற பன்றிகள் வளர்த்து வரும் நிலையில் கடந்த 3 நாட்களாக காட்டு மன்னார்கோவில் நகர்ப்புற பகுதிகளிலும் கிராமப்புற பகுதிகளிலும் இவர்களு டைய வளப்பினமான பன்றிகளை வெளியூரில் இருந்து பல லட்சம் மதிப்பிலான பன்றிகளை பறிமுதல் செய்து கொண்டு செல்கின்றனர்.
இது ஏன் எதற்காக என்று உரிமையாளர்கள் கேட்டால் அரசின் உத்தரவு நாங்கள் மாவட்ட கலெக்டரின் கடிதங்களாலும் பேரூராட்சி ஊராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பெயரால் நாங்கள் உங்களுடைய பன்றிகளை பிடித்து செல்கி றோம் என கூறி சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பன்றிகளை ஏற்றி சென்று ள்ளனர்.
இதுகுறித்து பன்றி வளர்ப்போர் கூறுகையில் பன்றிகளை பிடித்து செல்வதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதித்து வருகிறது. எனவே இதனை தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் எங்க ளுக்கு அரசு உறுதுணை யாக இருந்து எ ங்களின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்த வேண்டும். அப்படி நடக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் விரை வில் நடைபெறும் என்றனர்.
இதனை தொடர்ந்து மனு கொடுப்பதற்காக காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி அலுவலகத்தில் பன்றிகள் வளர்ப்போர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- சாலையோர பள்ளத்தில் சரவணன் இருசக்கர வாகனத்துடன் பிணமாககிடந்தார்.
- இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தி வருகிறாார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொளார் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 26). இவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 4நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் பெண்ணாடம் சென்று விட்டு வருவதாக வீட்டில் இருந்தவரிடம் கூறி சென்றவர் இது வரை வீட்டிற்கு வரவில்லை.
இந்த நிலையில் பெண்ணாடத்திலிருந்து தொளார் செல்லும் சாலையோர பள்ளத்தில் சரவணன் இருசக்கர வாகனத்துடன் பிணமாககிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டனர். சரவணனின் முகத்தில் காயங்கள் உள்ளது. எனவே அவரை யாராவது அடித்து கொன்று உடலை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்படி விசாரணை நடத்தி வருகிறாார்கள். சரவணன் உடலை போலீசார் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதனைக்கான அனுப்பி வைத்தனர்.
- சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
- சவுக்கு சங்கர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
கடலூர்:
நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக சமூக ஆர்வலர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் அவரை பார்ப்பதற்காக ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்ததாக கூறி பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
பார்வையாளர்களை அனுமதிக்ககோரி சவுக்குசங்கர் கடலூர் சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அப்போது சிறை அதிகாரிகள் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சவுக்குசங்கர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சவுக்குசங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனவே சவுக்குசங்கர் எந்த நேரத்திலும் விடுதலையாகலாம் என பேசப்பட்டது. ஆனால் இவர் மீது 4 வழக்குகள் இருந்ததால் ஜாமீனில் வெளிவருவதில் சிக்கல் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மீண்டும் சென்னை நீதிமன்றத்தை அணுகினார். அப்போது 4 வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது.
ஆனால் ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்ததால் சவுக்குசங்கர் விடுதலையாவதில் தாமதம் ஆனது.
இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். ஆனால் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
- அம்மா உணவகத்தின் 7 பெண் பணியாளர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- தயிர் சாதத்தை சமைத்து விற்பனை செய்யாமல் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் உழவர் சந்தை அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு பணி புரிந்து வந்த 16 பெண் பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் மாலை பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறினர். மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு அம்மா உணவகம் சாவியை வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்த அம்மா உணவகத்தின் 7 பெண் பணியாளர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் காரணமின்றி எங்களை பணி நீக்கம் செய்தது ஏன்? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரனை நேரில் சந்தித்தனர். அப்போது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வந்த பெண் பணியாளர்களை அரசியல் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் பணியாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் சார்பில் அம்மா உணவகத்தில் பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதில் கடலூர் மாநகராட்சி பகுதியில் இயங்கி வந்த அம்மா உணவகத்தில் துப்புரவு ஆய்வாளர் ஆய்வு செய்தபோது மதியம் விற்பனைக்காக சமைக்கப்பட்ட உணவு அதிகாலையில் சமைத்து சூடான முறையில் இல்லாமலும், தரமற்றதாகவும் இருந்தது. மேலும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் தினமும் அதிகளவில் அம்மா உணவகத்தில் உணவு உண்டு வருகின்றனர். ஆனால் முழு அளவில் கணக்கில் காட்டாமல் மாநகராட்சி கருவூலத்தில் விற்பனையாகும் தொகையை குறைவாக செலுத்தி உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு வரை ஒவ்வொரு அம்மா உணவகத்தில் தினசரி 3600 ரூபாய் செலுத்தி உள்ளார்கள். ஆனால் தற்போது அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் 1000 ரூபாய் மட்டுமே மாநகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர். விதிமுறைகளின் படி அம்மா உணவகங்களில் மதியம் உணவில் கட்டாயமாக தயிர் சாதம் சமைத்து விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் அதிகாரிகள் தெரிவித்தும் தயிர் சாதத்தை சமைத்து விற்பனை செய்யாமல் மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளனர்.
மேலும் சமையல் செய்யும்போது பணியாளர்கள் கட்டாயம் தலையில் தொப்பி அணிந்து, கையுறைகள் அணிந்தும் பணி புரிய வேண்டும். சமையல் கூடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் அம்மா உணவகம் விதிமுறைகளுக்கு மாறாக செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால் இது போன்ற நிகழ்வுகளுக்கு சம்பந்தப்பட்ட சுய உதவி குழு உறுப்பினர்கள் 3 தினங்களுக்குள் எழுத்து மூலமாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் அனைத்து உறுப்பினர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கடலூரில் அம்மா உணவகத்தின் நீக்கப்பட்ட பெண் பணியாளர் தொடர்பாக பல்வேறு சர்ச்சை மற்றும் எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தரமற்ற உணவு சமைத்திருப்பதாகவும், சரியான முறையில் விற்பனை செய்யப்பட்ட பணம் செலுத்தாமல் சுகாதாரமற்ற முறையில் உணவு சமைப்பதாகவும் தெரிவித்து அதற்கு விளக்க கடிதம் கேட்டு நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாநில வரி அலுவலர் அரவிந்தை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு பேச வேண்டும் என கூறி அழைத்து சென்றனர்.
- புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 40).கடலூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் மாநில வரி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அதே அலுவலகத்தில் 30 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் நட்பாக பழகி பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அந்த பெண்ணின் தந்தை குணசேகரன்2 பேரையும் பலமுறை கண்டித்து உள்ளார். சம்பவத்தன்று குணசேகரன் மற்றும் 3பேர் வணிகவரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்தனர். பின்னர் மாநில வரி அலுவலர் அரவிந்தை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு பேச வேண்டும் என கூறி அழைத்து சென்றனர். அப்போது குணசேகரனுக்கும், அரவிந்துக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. . இதில் குணசேகரன் மற்றும் 3 பேர் திடீரென்று மாநில வரி அலுவலர் அரவிந்தை சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவர் அணிந்திருந்த 9 பவுன் செயின் மற்றும் அவரிடம் இருந்த விலை உயர்ந்த 2 ஐபோன் ஆகியவற்றை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அரவிந்த் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கடலூரில் பட்டப்பகலில் வணிகவரித்துறை அலுவலகம் அருகே மாநில வரி அலுவலர் அரவிந்தை தாக்கி நகை மற்றும் ஐபோன் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






