என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்றி வளர்ப்போர்"

    • பன்றிகள் வளர்ப்போர் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • பல லட்சம் மதிப்பிலான பன்றிகளை பறிமுதல் செய்து கொண்டு செல்கின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அதன் சுற்றுவட்டார பகுதி களில் பன்றிகள் வளர்ப்போர் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்ப ங்கள் வசித்து வருகின்ற னர் இவர்களின் நிரந்தர தொழில் பன்றி வளர்ப்பு ஆகும். இந்த நகர்ப்புற பகுதி களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒரு குடும்பத்திற்கு 10 வீதம் என்ற பன்றிகள் வளர்த்து வரும் நிலையில் கடந்த 3 நாட்களாக காட்டு மன்னார்கோவில் நகர்ப்புற பகுதிகளிலும் கிராமப்புற பகுதிகளிலும் இவர்களு டைய வளப்பினமான பன்றிகளை வெளியூரில் இருந்து பல லட்சம் மதிப்பிலான பன்றிகளை பறிமுதல் செய்து கொண்டு செல்கின்றனர்.

    இது ஏன் எதற்காக என்று உரிமையாளர்கள் கேட்டால் அரசின் உத்தரவு நாங்கள் மாவட்ட கலெக்டரின் கடிதங்களாலும் பேரூராட்சி ஊராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பெயரால் நாங்கள் உங்களுடைய பன்றிகளை பிடித்து செல்கி றோம் என கூறி சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பன்றிகளை ஏற்றி சென்று ள்ளனர்.

    இதுகுறித்து பன்றி வளர்ப்போர் கூறுகையில் பன்றிகளை பிடித்து செல்வதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதித்து வருகிறது. எனவே இதனை தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் எங்க ளுக்கு அரசு உறுதுணை யாக இருந்து எ ங்களின் வாழ்வாதாரத்தை மேம்ப டுத்த வேண்டும். அப்படி நடக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் விரை வில் நடைபெறும் என்றனர்.  

    இதனை தொடர்ந்து மனு கொடுப்பதற்காக காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி அலுவலகத்தில் பன்றிகள் வளர்ப்போர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×