என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drunkard"

    • பூரனாங்குப்பம் சந்திப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார்.
    • எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே பூரனாங்குப்பம் சந்திப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த தவளக்குப்பம் போலீசார் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவர்யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    உரிய பதில் அளிக்காவிட்டால், கடையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கமாட்டேன் என டாஸ்மாக மாவட்ட மேலாளரை மிரட்டும் தொனியில் பேசினார்.

     திருப்பூர் :

    திருப்பூர் 15வேலம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சிவக்கொழுந்து ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த கடையில் மதுபாட்டில் வாங்கிய நபர் ஒருவர், தான் வாங்கிய மதுபாட்டிலுக்கு ரசீது வேண்டும் . எதற்காக கூடுதல் விலைக்கு மதுபாட்டிலை விற்பனை செய்கிறீர்கள் என்றார்.

    உரிய பதில் அளிக்காவிட்டால், கடையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கமாட்டேன் என டாஸ்மாக மாவட்ட மேலாளரை மிரட்டும் தொனியில் பேசினார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×