என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
மது பாட்டிலுக்கு பில் கேட்டு டாஸ்மாக் அதிகாரியை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுபிரியர்
உரிய பதில் அளிக்காவிட்டால், கடையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கமாட்டேன் என டாஸ்மாக மாவட்ட மேலாளரை மிரட்டும் தொனியில் பேசினார்.
திருப்பூர் :
திருப்பூர் 15வேலம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சிவக்கொழுந்து ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த கடையில் மதுபாட்டில் வாங்கிய நபர் ஒருவர், தான் வாங்கிய மதுபாட்டிலுக்கு ரசீது வேண்டும் . எதற்காக கூடுதல் விலைக்கு மதுபாட்டிலை விற்பனை செய்கிறீர்கள் என்றார்.
உரிய பதில் அளிக்காவிட்டால், கடையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கமாட்டேன் என டாஸ்மாக மாவட்ட மேலாளரை மிரட்டும் தொனியில் பேசினார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






