என் மலர்tooltip icon

    கடலூர்

    • ராஜபாண்டியன் பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார்.
    • கிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணி அளவில்பரி தாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்த வர் ராஜபாண்டியன் (40)விவசாயி. இவர் நேற்று இரவுதாழம்பட்டி லிருந்து பண்ருட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். பண்ருட்டி -கும்பகோ ணம் சாலை பணிக்கும் குப்பம் அருகே வந்து கொண்டி ருந்தபோதுபண்ருட்டியிலிருந்துசாத்திப்பட்டு சென்றுகொண்டிருந்த

    மற்றொரு மோட்டார் சைக்கிள் ராஜபாண்டியன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த ராஜபாண்டியன் பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணி அளவில்பரி தாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் தெரிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், ஏட்டு கோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆஞ்சநேயர்கோவிலை இடித்து தள்ளியதை எதிர்த்து அகல் விளக்கு ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    • உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் கடை வீதியில் அமைந்துள்ள சகஜானந்தா சிலை அருகில் சிவன் குலத்தார் அறக்கட்டளை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள காகிதப்பட்டறைஊராட்சியில்பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர்அங்கிருந்த ஆஞ்சநேயர்கோவிலை இடித்து தள்ளியதைஎதிர்த்து சிவன் குலத்தார் அறக்கட்ட ளை நிர்வாகிகள் கையில் அகல் விளக்கு ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில்மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ், நிர்வாகிகள் இள வரசன், சரவணன், மோகன், ஜெயபால் மற்றும்10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

    • சிறு தேர்களை தச்சுத் தொழிலாளர்கள் சுமார் 1 மாதம் முன்பே தயார் செய்து விற்பனை செய்வார்கள்.
    • அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஆடிப் பெருக்கு பண்டிகையின் நடைமுறைகளை சொல்லி கொடுக்க வேண்டும்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் ஆடிப்பெருக்கு பண்டிகையை அருகில் உள்ள ஏரிகளின் படுகைகளில் கொண்டாடுவது வழக்கம். அப்போது சிறுவர்கள், சிறுமிகள் சப்பரத்தட்டி என்னும் சிறு தேரினை வண்ண, வண்ண காகிதங்கள் கொண்டு அலங்கரித்து ஓட்டி விளையாடுவார்கள். அதற்கான சிறு தேர்களை தச்சுத் தொழிலாளர்கள் சுமார் 1 மாதம் முன்பே தயார் செய்து விற்பனை செய்வார்கள்.

    ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் சப்பரத்தட்டி ஓட்டுவது மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும். இதனால் திட்டக்குடியில் தச்சுத்தொழிலாளர்கள் தற்போது விதவிதமான சிறு தேர்களை தயார் செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். அளவு மற்றும் கலைநயத்தை பொறுத்து ஒரு தேர் ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனை செய்கின்றனர். சிறுதேர் தயாரிக்கும் தச்சுத்தொழிலாளர்களிடம் விற்பனை குறித்து கேட்டபோது, கடந்த காலங்கள் போல் சிறுவர், சிறுமிகளுக்கு சப்பரத்தட்டி ஓட்டுவது தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளான சப்பரத்தட்டி ஓட்டுதல் போன்ற விளையாட்டுகளை சொல்லித்தந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஆடிப் பெருக்கு பண்டிகையின் நடைமுறைகளை சொல்லி கொடுக்க வேண்டும்.

    மாலை வேளையில் அலங்கார தேவதைகளாக பெண்கள், குழந்தைகள் குடும்பத்துடன் செல் வது தெருவே திருவிழா கோலத்துடன் கோலா கலமாக திகழும். மேலும் இந்த அலங்கார சப்பரங்களை சிறுவர்கள் இழுத்து செல்வதும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அடுத்த தலைமுறைகளில் சப்பரத்தட்டி என்ற பொருள் தெரியாமல் போய்விடும். அதுமட்டுமின்றி இது போன்று பண்டிகைகலால் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை ஊக்கப்ப டுத்தும் விதமாக அரசு பாரம்பரிய பண்டிகைகளை அரசு விழாவாக கொண்டாடி தமிழ் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வளர்க்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

    • ஜீப்பை புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஒட்டி வந்தார்.
    • கட்டுப்பாட்டை இழந்த ஜீப் கவிழ்ந்தது.

    கடலூர்: 

    கடலூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீபிரியா. இவர் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். ஜீப்பை புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஒட்டி வந்தார். இரவு 8.20 மணியளவில் ஜீப் பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் கவிழ்ந்தது. இதில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா , சப்- இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் ஒரு போலீசார் உள்ளிட்ட 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த போலீசார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • கடலூர் மாவட்டத்தில் 3 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
    • காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, கடலூர் மாவட்டத்தில் 3 சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 12.8.2023, 23.9.2023 மற்றும் 25.11.2023 ஆகிய நாட்களில் சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்வாக, 12.8.2023 (சனிக்கிழமை) அன்று கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த பல முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 -ம்வகுப்பு, 10 -ம்வகுப்பு, 12 -ம்வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியினை உடைய வர்களும் கலந்துக்கொண்டு பயன்பெற லாம். எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் 12.8.2023 (சனிக்கிழமை) நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • என்.எல்.சி. தலைவர் வசிக்கும் வீட்டை நோக்கி குடும்பத்துடன் பட்டினியுடன் பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நெய்வேலி:

    நெய்வேலியில் உள்ள என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோ சர்வ் சொசைட்டி தொழிலாளர்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பணிநிரந்தரம் செய்யும் வரை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 26-ந்தேதி முதல் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களது போராட்டம் இன்று 9-வது நாளாக நீடித்தது. இதில் சங்கத்தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமையில் பொதுச்செயலாளர் செல்வமணி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை இந்திய காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஏ.எஸ்.இளஞ்செழியன் சந்தித்து போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த நிலையில் தொழிற் சங்க சிறப்பு தலைவர் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இரவு-பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் போராட்டக்களத்தில் இருந்து நேரு சாலையில் உள்ள என்.எல்.சி. தலைவர் வசிக்கும் வீட்டை நோக்கி குடும்பத்துடன் பட்டினியுடன் பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் 2-வது சுரங்கம் உள்ளது.
    • 2 கன்வேயர் பெல்ட்டுகள் உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நெய்வேலி:

    நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கரியை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இங்கிருந்து தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மின்சாரம் அனுப்பப்பட்டு வருகிறது.

    நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் 2-வது சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலமாக மின் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த கன்வேயர் பெல்ட்டில் மதியம் 12 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. 2 கன்வேயர் பெல்ட்டுகள் உரசியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தீ அருகில் இருந்த எந்திரத்துக்கும் பரவியது. இதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

    என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் இந்த தீ விபத்து நடந்துள்ளது.

    இதுகுறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சேகர் கூறும்போது, ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. எங்கள் போராட்டம் காரணமாக அனுபவம் இல்லாத தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடைபெறுவதால், சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

    • நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏற்கனவே 10½ கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறுக்கு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது.
    • முதலில் பகலில் மட்டுமே நடைபெற்று வந்த பணி தற்போது இரவு-பகலாக நடந்து வருகிறது.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்கிறது.

    தற்போது நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்து நிலக்கரி வெட்டி எடுக்க என்.எல்.சி. முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சுரங்கம்-2-ல் இருந்து 60 மீட்டர் தூரத்தில் உள்ள பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    ஏனெனில் மழைக்காலங்களில் சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுவதை தடுக்கவும், சுரங்கத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறு அமைப்பது அவசியம் என்று என்.எல்.சி. கருதியது.

    இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏற்கனவே 10½ கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பரவனாறுக்கு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள 1½ கிலோ மீட்டர் தூரம் மட்டும் வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி, ஆதனூர், மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது. அந்த விளைநிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி என்.எல்.சி. நிர்வாகம் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் பயிர்களை அழித்து புதிய பரவனாறுக்காக வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கியது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 28-ந்தேதி என்.எல்.சி. அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், அன்றைய தினம் மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் பணி தொடங்கியது. முதலில் பகலில் மட்டுமே நடைபெற்று வந்த பணி தற்போது இரவு-பகலாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று 8-வது நாளாக பணிகள் நடைபெறுகிறது. பணிகள் வேகமாக நடப்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பழனிசாமி சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் பணியாற்றினார்.
    • ராசாப்பாளையம் அருகில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மனப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை என்கிற பழனிசாமி (வயது 55). மின்வாரிய அதிகாரி. இவர் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் பணியாற்றினார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கண்டரக்கோட்டையில் இருந்து பண்ருட்டிக்கு சென்றார்.ராசாப்பாளையம் அருகில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விரைந்து பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரவனாறு நிரந்தர மாற்று வடிகால் பாதை அமைக்கம் பணி கடந்த 26-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • தோண்டப்பட்ட மண் என்.எல்.சி. சுரங்கம்-2 பகுதிக்கு செல்கிறது

    நெய்வேலி,ஆக,2-

    கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், வளையாமாதேவி பகுதியில் பரவனாறு மாற்றுப்பாதை அமைக்கும் பணியில் அகற்றப்படும் மண், சுரங்கம்-2 மேல்மண் கொட்டும் இடத்தில் கொட்டப்படுவதாக என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தெரிவித்தது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளையமாதேவி பகுதியில் பரவனாறு நிரந்தர மாற்று வடிகால் பாதை அமைக்கம் பணி கடந்த 26-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    என்.எல். சி. சுரங்க நீர், அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் நீர் மற்றும் அருகே உள்ள கிராமங்களில் இருந்து வெளியேறும் நீரையும் கையாளும் வகையில் நிரந்தர மாற்றுப்பாதையானது அமைக்கப்படுகிறது. இந்த பணியில் தோண்டப்பட்ட மண் அருகே உள்ள வயல்களில் கொட்டி பயிர்களைச் சேதப்படுத்துவதாக வதந்தி பரப்பப்படுகிறது. தோண்டப்பட்ட மண் என்.எல்.சி. சுரங்கம்-2 பகுதியில் மேல் மண் கொட்டும் இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    • 3 சுயதொழில் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • வங்கிக் கடனுதவி அதிகபட்சமாக 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது -

    படித்த வேலைவா ய்ப்பற்ற இளைஞர்கள் அரசு மானியத்துடன் வங்கி கடன் பெற்று சுயதொழில் தொடங்கிட படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் , புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற 3 சுயதொழில் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் குறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் தமிழக அரசு மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் நடைமுறைபடுத்தி வருகிறது. இந்த சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் ரூ.5 கோடி வரையிலான வங்கிக் கடனுதவி அதிகபட்சமாக 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் குறித்து தொழில் முனைவேர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் வங்கி கடன் பெற்று பயனடையும் பொருட்டு கீழ்குறிப்பிட்ட நாட்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திட்ட விளக்கவுரை மற்றும் அனைத்து திட்டங்களின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது தொடர்பான விளக்கமும், கூட்டம் நடைபெறும் இடத்தி லேயே விண்ணப்பி க்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

    இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 4-ந்தேதி காலை பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம், மாலை குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம், 11-ந்தேதி காலை வட்டார வளர்ச்சி அலுவலகம், காட்டுமன்னார்கோவில், மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், குமராட்சி, 18-ந்தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், புவனகிரி, மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், கீரப்பாளையம், 25-ந்தேதி வட்டார வளர்ச்சி அலுவலகம், நல்லூர், மதியம் வட்டார வளர்ச்சி அலுவலகம், மங்களூர் பகுதியில் கூட்டம் நடைபெறுகிறது. 

    கூட்டத்தின் போது கீழ்குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் அசல் மற்றும் 2 நகல்கள் எடுத்து வருமாறும் கேட்டுக்கொள்ள ப்படுகிறது. கல்வித்தகுதி சான்றிதழ் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் வங்கிகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். எனவே, மகளிர் இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர், ஆதிதி ராவிடர், மாற்றுதிறனாளிகள் ஆகிய அனைவரும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
    • 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.

    கடலூர்:

    ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் வழிபாடு, விஷேச பூஜைகள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வடக்குதிட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத வழிபாடு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று இரவு வடக்குதிட்டை பகுதியை சேர்ந்த சந்தோஷ் தரப்பை சேர்ந்தவர்களும் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் தரப்பை சேர்ந்தவர்களும் கோவிலுக்கு வந்தனர். அப்போது 2 தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இந்த மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். 

    இதை பார்த்த கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் இதுகுறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த மோதல் குறித்து சந்தோஷ் புவனகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சரண்ராஜ், பழனிவேல், காளிதாஸ், செந்தமிழ் செல்வன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். பின்னர் சரண்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ், சக்திவேல், ஆகாஷ், சுபாஷ் ஆகியோர் மீதும் மொத்தம் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×