என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கோவை சட்டகல்லூரிக்கு வரவில்லை என்றால் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை.
    • இன்று நடந்த விழாவில் 1,034 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    வடவள்ளி,

    தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் கோவை அரசு சட்ட கல்லூரி சார்பில் கோவை சட்டக்கல்லூரியில், 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முதன்மை விருந்தினராக கோவை அரசு சட்ட கல்லூரி முன்னாள் மாணவரும், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கு தழிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் துணை வேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், தமிழ்நாடு சட்ட கல்வி இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினார். கோவை அரசு சட்ட கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    இன்று நடந்த விழாவில் 1,034 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 700 பேர் நேரில் வந்து பெற்று கொண்டனர்.

    விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எஸ்.விஸ்வநாதன் பேசியதாவது:-

    கோவை சட்டகல்லூரிக்கு வரவில்லை என்றால் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. நான் இந்த நிலைமைக்கு வந்ததற்கு இந்த கல்லூரி தான் காரணம்.

    சட்ட பட்டம் வந்து விட்டது. அவ்வளவு தான் என்று எண்ண விட வேண்டாம். இப்போது தான் உங்களுக்கு வாழ்க்கையே ஆரம்பமாகிறது. வாழ்கையை எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். நான் உங்கள் முன் நீதிபதியாக இல்லாமல் நண்பராக இருந்து சொல்கிறேன்.

    நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்பது நம் கையில் தான் உள்ளது. நேரத்தை வீணாக்காதீர்கள். நேரம் கிடைக்கும் போது எல்லாம் நல்ல புத்தகங்களை எடுத்து படியுங்கள். அது எப்போதாவது பயன்படும்.

    வக்கீல் தொழில் என்பது மிக கடினமான தொழில். அதில் ஊறிவிட்டால் நமக்கு அது ஒரு அமிர்தம் போன்றதாக காணப்படும். நீதிபதியிடம் உங்கள் தரப்பு வாதங்களை பனிவுடன் எடுத்து வையுங்கள். இளைய வக்கீல்களாகிய நீங்கள் வரும் காலங்களில் உங்களுக்கு என்று சில திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள்.

    நான் அரசு பஸ்சில் தான் நீதி மன்றத்திற்கு சென்றேன். உங்கள் மனதில் சரி என்று பட்டதை மறைத்து கொள்ளாமல் தைரியமாக வெளியில் பேசுங்கள். பொய் வழக்கு என்று தெரிந்தால் அதனை எடுத்து வாதிட வேண்டாம். வக்கீல் தொழிலில் வானம் கூட எல்லையாகாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசும் போது, சட்டம், அரசு, நீதித்துறை என நாட்டின் 3 துறைகளோடு, 4-ம் துறையான பத்திரிகையும் சேர்ந்து செயல்பட்டால் நாடு சிறப்பாக செயல்படும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு மிக எளிதாக கிடைக்ககூடிய படிப்பு சட்ட படிப்பு.

    கோவை கல்லூரியில் யானை பிரச்சனை இருப்பதாக கூறிய நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், சட்டபடிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு 95-க்கு கீழ் கட்டாப் மதிப்பெண் வைக்க கோரிக்கை வைத்து உள்ளோம் என்றார்.

    • மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வைத்து திடீரென இளம்பெண் பூச்சி மருந்ைத கரைத்து குடித்தார்.
    • இருக்ைக அருகில் இருந்தவர் இளம்பெண்ணை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    கோவை,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கரடிபள்ளத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவரது கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் இளம் பெண்ணுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குன்னூரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இது காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர்.

    கோவையில் வீடு வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்தநிலையில் வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை இளம்பெண் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாலிபர் இளம்பெண்ணுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தார்.

    இதன் காரணமாக இளம்பெண் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனையடுத்து அவர் வாலிபரை பிரிந்து சொந்த ஊருக்கு செல்வது என முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று இளம்பெண் கோவையில் இருந்து குன்னூருக்கு புறப்பட்டார். இதற்காக அவர் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சென்றார். மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வைத்து திடீரென அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து பூச்சி மருந்ைத கரைத்து குடித்தார். பின்னர் பஸ்சில் ஏறி குன்னூக்கு சென்றார். பஸ்சில் இருக்கையில் இருந்த அவர் மயங்கினார்.

    இதனை பார்த்த அருகில் இருந்தவர் இளம்பெண்ணை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்துமாரி, தனது கணவரிடம் முன்தொகை பணத்தை தன்னிடம் தந்தால் மட்டுமே கையெழுத்து போட வருவதாக தெரிவித்தார்.
    • வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை வால்பாறை அய்யர்பாடி முதல்பிரிவை சேர்ந்தவர் சபரிகிரி (வயது41). கூலித்தொழி லாளி. இவரது மனைவி முத்துமாரி.

    இவர்களுக்கு அந்த பகுதியில் நிலம் ஒன்று இருந்தது. அந்த நிலத்தை சபரிகிரி வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

    நிலத்தை விற்பதற்காக நிலத்தை வாங்குபவரிடம் இருந்து முன்தொகை வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

    இதனை முத்துமாரி அறிந்து கொண்டார். இந்த நிலையில் சபரிகிரி நிலத்தை கிரயம் செய்து கொடுக்க முடிவு செய்து, தனது மனைவியை கையெழுத்து போட வருமாறு அறிவுத்தினார்.

    அப்போது முத்துமாரி, தனது கணவரிடம் முன்தொகை குறித்து கேட்டுள்ளார். மேலும் முன்தொகை பணத்தை தன்னிடம் தந்தால் மட்டுமே கையெழுத்து போட வருவதாக தெரிவித்தார்.

    இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த, சபரிகிரி தனது மனைவியிடம் நீ கையெழுத்து போடவரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

    கணவர் சும்மா சொல்கிறார் என நினைத்து முத்துமாரி இருந்தார். சிறிது நேரத்தில் சபரிகிரி வீட்டில் இருந்த டீசலை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது. வலியால் துடித்த அவர் அலறி சத்தம் போட்டார். இதனை பார்த்ததும் முத்து மாரி அவரை காப்பாற்று வதற்காக ஓடி சென்றார். அப்போது, அவர் மீதும் தீ பற்றியது.

    2 பேரும் தீயில் சிக்கி, அபய குரல் எழுப்பினர். அவர்களது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் தீயை அணைத்து, தீயில் சிக்கி காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின் 2 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு 2 பேரும் தீவிர சிகிச்ைச பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சபரிகிரி பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த அவரது மனைவி முத்துமாரிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வால்பாறை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
    • கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டு இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான இணையதள வழி கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.

    7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

    தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நாளை (16-ம் தேதி) வரை நடக்கிறது. இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 18-ம் தேதி நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கான இணையவழி முதல்கட்ட கலந்தாய்வு வரும் 17-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது.

    கலந்தாய்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 20-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடக்கிறது. பொதுப்பிரினருக்கான நகர்வு முறை மற்றும் இணையதள வழி 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 26-ம் தேதி மற்றும் 27-ம் தேதிகளில் நடக்கிறது.

    பொதுப்பிரிவில் இணையதள வழி இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28-ம் தேதி மற்றும் 29-ம் தேதி நடக்கிறது. இணையதள வழி கலந்தாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நித்தீஷ் பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
    • அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கருவலூரை சேர்ந்தவர் மணியன். இவரது மகன் நித்தீஷ் (வயது 15).

    இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று நித்தீஷ் மாலை 5 மணியளவில் பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கைப்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அறிவியல் ஆசிரியை, மாணவர் விளையாடுவதை பார்த்தார்.

    பின்னர் அவர் நித்தீஷின் அருகே சென்று அவரது சட்டையை பிடித்து இழுத்து வந்து பள்ளிக்கு வெளியே விட்டார். அனைத்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை இப்படி நடந்து கொண்டதால் மாணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

    வீட்டிற்கு சென்ற நித்தீஷ் ஆசிரியையின் இந்த செயலால் மிகுந்த மனவேதனை அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் தங்களது மகனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நித்தீஷை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 10 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் போக்குவரத்து துறையினர் சோதனை நடத்தினர்.
    • மொத்தம் 24 வாகனஙகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கோவை,

    கோவை, திருப்பூரில் பல இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையில் வாடகை வாகனங்களில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதாக புகார்கள் எழுந்தன.

    இதையடுத்து 10 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் போக்குவரத்து துறையினர் சில தினங்களுக்கு முன்பு பல இடங்களில் சோதனை நடத்தினர்.மொத்தம் 462 வாகனங்களை சோதனையிட்டதில் 13 பள்ளி வாகனங்கள், 33 ஆட்டோக்கள், 17 மேக்ஸி கேப், 23 டாக்சிகள் என மொத்தம் 115 வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை மண்டல போக்கு வரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆட்டோவில் 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் எனில் 5 பேர் வரை அனுமதிக்கப்படுவர். 12 வயதுக்கு அதிகமாக குழந்தைகள் எனில் 3 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    அதேபோல மேக்ஸி கேப் வாகனத்தில் 12 வயதுக்கு கீழ் இருந்தால் 12 பேரும், 12 வயதுக்கு மேல் இருந்தால் 18 பேர் வரையும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.பள்ளி வாகனங்களை பொருத்த வரை இருக்கைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கையானது மாறும்.

    இந்த எண்ணிக்கையை விட கூடுதலாக மாணவர்களை ஏற்றி சென்றதற்காக 115 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.3.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 வாகனஙகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் போன்றவற்றை விளக்க உள்ளார்கள்.
    • ஈஷா கடந்த 6 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது.

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் புதுக்கோட்டையில் நாளை (ஜூலை 16) நடத்தும் மாபெரும் விவசாய கருத்தரங்கை மாண்புமிகு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. மெர்சி ரம்யா அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளார்.

    காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் நாளை நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் கூறியதாவது:

    இக்கருத்தரங்கில் சமவெளியில் மிளகு, ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற பயிர்களை வெற்றிகரமாக பயிர் செய்துள்ள விவசாயிகளும், இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். கண்டியண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் பீரன் ஆகியோர் கலந்து கொண்டு சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் போன்றவற்றை விளக்க உள்ளார்கள்.

    இக்கருத்தரங்கு சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மிளகு விவசாயி செந்தமிழ்ச் செல்வன் அவர்களது மிளகுத் தோட்டத்தில் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மிளகு சாகுபடி செய்து வரும் இவர், தேக்கு, பலா, கிளைரிசிடியா, செங்கல் தூண் மற்றும் இரும்பு வலைகளிலும் மிளகு வளர்த்து வருகிறார். இரண்டு ஏக்கரில் மிளகு சாகுபடி செய்து வருடத்திற்கு நான்கு லட்சம் லாபம் ஈட்டுகிறார்.

    மரப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர் வருமானம் பெறும் வழிமுறைகளை காவேரி கூக்குரல் இயக்கம் அறிமுகப்படுத்தி வருகிறது. மரப்பயிர்களில் ஊடுபயிராக காய்கறிகள், சிறுதானியங்கள், நறுமணப்பயிர்கள் மற்றும் கிழங்கு வகைகளை பல விவசாயிகள் செய்து வருகிறார்கள்.

    இதனால் மரப்பயிர்களின் அறுவடை வரை வருமானத்திற்கு காத்திருக்காமல் ஊடுபயிர்கள் மூலமே தொடர் வருமானம் பெறுகிறார்கள். பெரும்பாலான நறுமணப் பயிர்கள் மரங்களுக்கு கீழே குளிர்ச்சியான சூழ்நிலையில் வளரக்கூடியதாக உள்ளதால் சரியான சூழ்நிலையை உருவாக்கி மர விவசாயிகள் அதிக வருமானம் பெற இயலும்.

    ஈஷா கடந்த 6 ஆண்டுகளாக சமவெளியில் மிளகு சாகுபடி பயிற்சியை நடத்தி வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் எடுத்து வருகின்றனர். மிளகு மட்டுமல்லாது மற்ற நறுமணப்பயிர்களும் சமவெளியில் நன்கு வளர்வதால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சியை காவேரி கூக்குரல் நடத்துகிறது.

    விவசாயிகள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்து அறிந்துகொண்டு, சாகுபடி செய்வதன் மூலம் அவர்களது வருமானத்தை உயர்த்திக் கொள்ளமுடியும். பயிற்சியில் கலந்து கொள்ள 94425 90079 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்து அறிய 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நல்ல அரசு.
    • வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்க வேண்டும்.

    கோவை:

    தே.மு.தி.க. பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நூலகம் திறப்பது நல்ல விஷயம், அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கத்தக்க விஷயம். அனைத்து ஊர்களில் திறந்தாலும் நல்லது தான்.

    தி.மு.க. தேர்தலுக்கு முன்பு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றார்கள். ஆனால் வெற்றி பெற்ற பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறுவது கண்டிக்கத்தக்க விஷயம்.

    தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நல்ல அரசு. எனவே வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்க வேண்டும்.

    கேப்டன் (விஜயகாந்த்) நன்றாகவும், சிறப்பாகவும் இருக்கிறார். முக்கியமான நேரங்களில் தொண்டர்களை கட்டாயம் அவர் சந்திப்பார். தே.மு.தி.க.வை பொருத்தவரை எங்களுடைய பணிகளை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் எங்களுடைய உட்கட்சி தேர்தல் முடிந்து விட்டது. இதற்கு அடுத்து செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்டவற்றை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும். இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படும். அந்த முடிவை தலைவர் உரிய முறையில் அறிவிப்பார். மக்கள் எந்தக் கூட்டணியை ஏற்று கொள்கிறார்கள், யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    தற்போது என்னுடைய இளைய மகனின் அடுத்த படத்திற்கான பட பூஜைக்காக வந்துள்ளேன். அவரது பட பூஜை பாலக்காட்டில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள தான் நான் வந்துள்ளேன். விஜய பிரபாகரனின் இசைக்கச்சேரி இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் மும்பையில் வருகிற நவம்பர் 25-ந் தேதி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவு பெற்று தற்போது 19-ம் ஆண்டில் இந்த நீலகிரி மலை ரெயில் காலடி எடுத்து வைத்துள்ளது.
    • ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் கூடுதல் பெட்டிகளுடன் இன்று இயக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள டர்பனில் நடைபெற்ற வேர்ல்ட் ஹெரிடேஜ் கமிட்டி இந்தியாவில் புகழ்பெற்ற மலை ரெயில்களில் ஒன்றான நீலகிரி மலை ரெயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கியது.

    யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவு பெற்று தற்போது 19-ம் ஆண்டில் இந்த நீலகிரி மலை ரெயில் காலடி எடுத்து வைத்துள்ளது.

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் கோரிக்கையினை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலைரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் கூடுதல் பெட்டிகளுடன் இன்று இயக்கப்பட்டது. இதனை மத்திய மந்திரி எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக யுனோஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும், ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பயணச்சீட்டு மைய கட்டிடத்தையும் மத்திய மந்திரி எல்.முருகன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் ரெயில்வே வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுக்கு பின் ரெயில்வே நிர்வாகம் அசுர வளர்ச்சி பெறும்.

    கடந்த தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க ஆட்சியில் 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழகத்திற்கு 9 புதிய ரெயில் திட்டங்கள் மற்றும் வழித்தடங்களை கொண்டு வந்துள்ளோம். அம்ருத் திட்டம் மூலம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ரெயில் நிலையத்தில் எக்ஸ்லேட்டரும் அமைக்கப்பட உள்ளது. மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ரூ.50 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேட்டுப்பாளையம்-கோவை இடையே தற்போது 8 பெட்டிகளுடன் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக பெட்டிகள் இணைத்து 12 பெட்டிகளுடன் ரெயிலை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., ஏ.கே.செல்வராஜ், சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, சேலம் கோட்ட உதவி மேலாளர் சிவலிங்கம், வணிக மேலாளர் பூபதி ராஜ், முதுநிலை கோட்ட எந்திரவியல் பொறியாளர் பரிமளக்குமார், பாஜக மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், மேட்டுப்பாளையம் முன்னாள் நகர் மன்ற தலைவர் சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை, ஆலாங்கொம்பு, பகத்தூர், கிச்சகத்தியூர், திம்மராயம்பாளையம், சென்னம்பாளையம், வெள்ளிக்குப்பம்பாளையம், வச்சினம்பாளையம், மூக்கனூர், மூலத்துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நெசவு செய்யப்படும் பட்டு மென்பட்டு, காட்டன், கோரா காட்டன் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி ரகங்கள் பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

    எனினும் மூலப்பொருள்களின் நிலையில்லாத விலை, விசைத்தறியில் கைத்தறி ரகங்கள் நெசவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போதைய சூழ்நிலையில் கைத்தறி நெசவுத்தொழில் மிகவும் நலிவடைந்து நெசவாளர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெசவு செய்யக்கூடாது, மூலப்பொருட்களின் விலையினை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். நெசவாளர்களுக்கான தனி வங்கி, நெசவாளர்களுக்கான நிரந்தர உறுப்பினர் அடையாள அட்டை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ராமர் கோவில் அருகே சிறுமுகை அனைத்து கைத்தறிப்பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் இன்று காலை கைத்தறி நெசவாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர். இதற்கு தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.

    பேரணியில் கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெசவு செய்யக்கூடாது. மூலப்பொருள்களின் விலையினை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன. இப்பேரணியானது ராமர் கோயிலில் துவங்கி நால்ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தியேட்டர் மேடு பகுதியில் நிறைவடைந்தது. பின்னர் கைத்தறி நெசவாளர்கள் சார்பில் அவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றக்கோரி பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

    பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் சிறுமுகை அனைத்து கைத்தறிப்பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் தண்டபாணி உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உட்பட கைத்தறி நெசவாளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சரவணன் வாரம் ஒருமுறை மனைவியை பார்க்க செல்வது வழக்கம்.
    • ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள காட்டுமடத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற ஜெகதீஸ் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கலையரசி. சரவணன் ஆழியாறு அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.

    இவர் வாரம் ஒருமுறை மனைவியை பார்க்க செல்வது வழக்கம். அதன்படி சரவணன் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் மனைவியை பார்ப்பதற்காக புறப்பட்டார்.

    மேட்டார் சைக்கிள் எஸ்.நல்லூர் அருகே சென்ற போது ரோட்டின் நடுவே இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கியது. அப்போது நிலைதடுமாறிய சரவணன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சரவணனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் சரவணனை டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • என்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
    • மாணவியின் பெற்றோர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் பிரிவை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பேஷன் டெக்னாஜி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    மாணவி தினசரி வீட்டில் இருந்து கல்லூரி வாகனத்தில் கல்லூரிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் மாணவி செல்போன் மூலமாக தனது தாயை தொடர்பு கொண்டார். அப்போது அவர் தான் தனக்கு பிடித்த மான நபரை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். இதற்காக ராமேசுவரம் சென்று கொண்டு இருக்கிறேன். எனவே என்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தாயிடம் கூறி விட்டு சென்ற மாணவியை தேடி வருகிறார்கள்.

    ×