என் மலர்
கோயம்புத்தூர்
- முகமூடி அணிந்த மர்ம நபர் கண்காணிப்பு காமிராவை அடித்து உடைத்து துணிகரம்
- கோட்டூர் போலீசார் வழ்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் தொழிற்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு முக மூடி அணிந்த மர்ம நபர் வந்தார்.அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தார். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். அப்போது ஆள் நடமாட்டம் இருந்ததால் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழ்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஸ்ரீசித்தர் சக்திநகர் அறக்கட்டளை நிறுவனர் சிவஜோதி சித்தரையா தலைமையில் வழிபாடு
- அக்னியில் அம்மன் உருவம் தெரிந்த காரணத்தால் பக்தர்கள் பரவசம்
குனியமுத்தூர்,
கோவையை அடுத்த கோவைப்புதூரில் பத்திரகாளி அம்மன், கருப்பராயர், குரு சக்தி நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று இரவு பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அத்தகைய நாளில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.அதே போன்று இந்த மாதமும் அமாவாசை நாளாகிய நேற்று இரவு ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.ஸ்ரீ சித்தர் சக்தி நகர் அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்ரீ சிவஜோதி சித்தரையா தலைமையில் நடைபெற்ற இந்த அமாவாசை பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அக்னியில் அம்மன் உருவம் தெரிந்த காரணத்தால் பக்தர்கள் உடனே பரவசம் அடைந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்
- கருமத்தம்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் பழனிச் சாமி (வயது 62). இவர் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் விசைத்தறி கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை தொழிலாளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று மாலை சுமார் 6:30 மணி அளவில் விசைத்தறி கூடத்தின் மேல் பகுதியில் திடீரென மின்க சிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.இதனை பார்த்த விசைத் தறி தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். அவிநாசி மற்றும் சூலூர் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில் சூலூர் தீயணைப்பு நிலைய அதி காரி வேலுச்சாமி தலை மையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 3 நவீன விசைத்தறி கூடங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த நூல் பண்டல்கள் உள்பட ஒரு கோடி மதிப்புள்ளான பொருட்களும் தீயில் எரிந்து சாம்பல் ஆனது.
இதுகுறித்து விசைத்தறி கூட மேலாளர் லோகநாதன் கூறுகையில், தொழிலா ளர்கள் வழக்கமாக பணியில் ஈடுபட்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தொழிலா ளர்களை வெளியேறி தீய ணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான விசைத்தறி மற்றும் மூலப் பொருட்கள் எரிந்து சேத மாகி உள்ளது என தெரி வித்தார். இந்த தீவிபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு வசிக்கும் பொது மக்கள் கூறுகையில், கரு மத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் விசைத்தறிக்கூடங்கள், நூல் மில்கள், தொழில் கூடங்கள் அதி களவில் உள்ளன. எனவே இந்த பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
சூலூர், அவிநாசி மற்றும் கோவை ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள், பஞ்சு நூல்கள் முற்றிலும் எரிந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைகின்றன. எனவே கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- வேறு ஒருவருடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம்
- காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 39 வயது வாலிபர். இவர் காரமடை போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதா வது:-
எனக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கணவரை இழந்த எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 35 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்ேதாம்.
இளம்பெண் சமையல் வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவருக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் என்னுடன் பழகுவ தையும், தனிமையில் இருப்பதையும் தவிர்த்து வந்தார். மேலும் இளம் பெண் புதிதாக பழக்கமான வாலிபரை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சம்ப வத்தன்று நான் அவரது வீட்டிற்கு செ ன்று என்னை ஏமாற்றி விட்டு இன்னொ ருவருடன் ஏன் பழகுகிறாய் என கேட்டேன். எங்களுக்கு இடையே தக ராறு ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த இளம்பெண், அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் சேர்ந்து என்னை கிரிக்கெட் மட்டை யால் தாக்கினர்.
இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நான் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். எனக்கு தலையில் 7 தையல் போடப்பட்டு உள்ளனர். எனவே என்னை தாக்கிய இளம்பெண், அவரது சகோதரர், மற்றும் மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகளிர் உரிமைத்தொகை நிலவரம் குறித்து அறிய ஏற்பாடு
- நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்
கோவை,
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற முகாம்கள் மூலம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 விண்ணப் பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 2 லட்சத்து 81 ஆயிரத்து 942 விண்ணப்பங்கள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ள்ளன. தற்போது, வரை வருவாய்த் துறை, மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட துறை அலுவ லர்கள், நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் கலந்தாய்வுக்கு அனுப்பப் பட்ட விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் திட்ட தொடக்க விழா நடக்கிறது. கோவையில் ஈச்சனாரியில் கற்பகம் கலை, அறிவியல் கல்லூரியில் இன்று பிற்பகலில் விழா நடக்கிறது. விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு திட்டத் தின் அட்டைகளை வழங்குகி றார். இவ்விழாவில் 2500 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத் தில் தேர்வு செய்யப்பட்ட குடும்பத் தலைவிகள் பலருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் முதல் கட்டமாக ரூ.1 செலுத்தி புதன் கிழமை சோதனை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்று காலை முதல் பயனா ளிகளின் கணக்கில் ரூ.1000 செலுத்தும் பணி தொடங்கி யுள்ளது. இதனால், இல்லத்த ரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த வர்கள் தங்களது விண்ணப் பத்தின் நிலையை அறிந்து கொள்ள அரசு அலுவல கங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண், விண்ணப்பத்துக்கு தாக்கல் செய்த கைப்பேசி எண் ஆகியவற்றுடன் நேரில் சென்றோ அல்லது பிரத்ய ேக எண்ணை தொடர்பு கொண்டோ தகவல்களை அறிந்து கொள்ளலாம். மேலும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியருக்கு மேல் முறையீடு செய்து கொள்ள லாம் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் 90479 44155, பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகம் 89039 29890, கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 90038 59054, ஆனைமலை 88079 77531, அன்னூர் 88387 18323, கோவை வடக்கு 90871 44755, கோவை தெற்கு 83001 22671, கிணத்துக்கடவு 89034 97949, மதுக்கரை 90422 67589, மேட்டுப்பா ளையம் 90435 18625, பேரூர் 88709 86906, பொள்ளாச்சி 88703 96625, சூலூர் 90034 96085, வால்பாறை 94862 11953.
- ஜெயில் நண்பர்களாக பழகி கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக வாக்குமூலம்
- கொள்ளை அடித்த நகைகளை விற்று அந்த பணத்தில் மது குடித்து ஜாலியாக இருந்தது அம்பலம்
கோவை,
கோவை கருமத்தம்பட்டி கணியூர் அருகே உள்ள கங்காலட்சுமி தோட்டத்தை சேர்ந்தவர் பாப்பா (வயது 73). கடந்த மாதம் 31-ந் தேதி மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டி ற்குள் நுழைந்த மர்மநபர்கள் மூதாட்டியை வெட்டி கொலை செய்து விட்டு அவர் அணிந்து இருந்த 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இதேபோல கோவில்பா ளையம் அருகே உள்ள கீரநத்தத்தை சேர்ந்த சித்த வைத்தியர் செல்வமணி (60) என்பவரை கடந்த 11-ந் தேதி மர்மநபர்கள் அரிவா ளால் வெட்டி கொலை செய்து விட்டு அவரிடம் இருந்து ரூ.500 பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். நடக்க முடியா மல் வீல்சேரை பயன்படுத்தி வந்த செல்வமணி ரூ.15 ஆயிரம் பணத்தை வீல் சேருக்கு அடியில் வைத்து இருந்தார். இதனால் அந்த பணம் தப்பியது.
மர்மநபர்கள் கொலை நடந்த இடத்தில் இருந்த 1 கிலோ மீட்டர் தூரத்தில் பாலத்துக்கு அடியில் செல் போனை வீசி சென்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த 2 கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடித்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர்.
மேலும் அவர்கள் கொலை நடந்த பகுதிகளில் உள்ள செல்போன் டவரை ஆய்வு செய்த போது 2 வாலிபர்களின் செல்போன் எண்கள் 2 கொலைகள் நடந்த பகுதியில் சுற்றி வந்தது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து போலீ சார் விசாரணை நடத்தி மூதாட்டி, வைத்தியர் உள்பட 2 பேரை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரத்தை சேர்ந்த வேலு (29), கே.ஜி. சாவடியை சேர்ந்த சஞ்சீவி (33) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்க ளிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-
எங்கள் மீது வழிப்பறி, கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல் வேறு வழக்குகள் உள்ளது. 2 பேரும் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப் பட்டு கோவை மத்திய ெஜயிலில் அடைக்கப்பட் டோம். ஜெயிலில் இருந்த போது எங்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தோம். அப்போது வெளியே சென்றதும் கூட்டாக சேர்ந்து தனியாக வசிக்கும் முதியவர்களை கொலை செய்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்க திட்டம் போட்டோம்.
அதன்படி நாங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் ஒருவர் பின் ஒருவராக வெளியே வந்தோம். பின்னர் 2 பேரும் கூட்டாக சேர்ந்த புறநகர் பகுதிகளில் வயதானவர்கள் யாராவது தனியாக வசிக்கி றார்களா என நோட்டமிட் டோம். அப்போது தான் கணியூர் கங்காலட்சுமி தோட்டத்தில் 72 வயது மூதாட்டி தனியாக இருப்பது தெரிய வந்தது. எனவே அவரை கொலை செய்து அவர் வீட்டில் உள்ள நககைளை கொள்ளை யடிக்க திட்டம் போட்டோம். அதன்படி கடந்த மாதம் 31-ந் தேதி மூதாட்டியை வெட்டி கொலை செய்தோம். பின்னர் அவர் அணிந்து இருந்த 2 பவுன் நகைகளை பறித்தோம். வீட்டிற்குள் சென்று கொள்ளையடிக்கலாம் என்று உள்ளே சென்ற போது ஆட்கள் அங்கு வந்து விட்டனர். அங்கு இருந்து தப்பிச் சென்றோம்.
பின்னர் கொள்ளைய டித்த நகைகளை விற்று அந்த பணத்தில் மது குடித்து ஜாலியாக இருந்தோம். கடந்த 11-ந் தேதி கீரநத்தம் பகுதிக்கு சென்றோம். அப்போது அங்கு வயதான முதியவர் நடக்க முடியாமல் தனியாக வசிப்பதை பார்த்ேதாம். அவரிடம் நிறை பணம் இருக்கும் என நினைத்து அவரை கொலை செய் தோம். அவரது பாக் கெட்டில் ரூ.500 பணம் மட்டுமே இருந்தது. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்போனை பறித்து தப்பிச் சென்றோம். செல்போனால் போலீசில் சிக்க கூடாது என நினைத்து அந்த செல்போனை சிறிது தூரம் தள்ளி வீசி சென்றோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.
பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்ற னர்.
- வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கழிவுப் பொருட்களை கொட்ட கூடாது என அறிவுறுத்தல்
- மின்வேலிகளை சீரமைக்கவும், நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் தேக்கம் பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மனித வன உயிரின மோதல் குறித்து விழிப்புணர்வு நிகர்ச்சி நடந்தது.
இதற்கு வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமை தாங்கினார். இம்முகாமில் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பது, கிளி உள்ளிட்ட தடை செய்யப் பட்ட விலங்கினங்களை வளர்ப்பது உள்ளிட்டவை சட்டப்படி குற்றம்.
வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இவற்றை மேட்டுப்பாளை யம் வனத்துறையினரிடமோ, காவல்துறையினரிடமோ, பஞ்சாயத்து தலைவரிடமோ ஒப்படைக்க வேண்டும்.
தமிழ்நாடு மின் வேலிகள் விதியின் படி பழைய மின்வேலிகளை புதுப்பிக்க வேண்டும். புதிய மின்வேலி களுக்கு உரிய அனுமதி பெற வேண்டும்.
துப்பாக்கி, நாட்டுவெடி, அவுட்டுக்காய், சுருக்கு கம்பி வலை போன்ற வற்றை பயன்படுத்தி வனப்பகுதியில் முயல், பன்றி, மான் போன்ற வனவிலங்குகளை வேட்டை யாடுவது கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவுட்டுக்காய் தயாரிப்பவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான விவரங்கள் ஏதேனும் தெரிந்தால் வனத்துறையினர் அல்லது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண் டும். மேலும் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் கழிவுப் பொருட்களையோ, கழிவுகளையும் கொட்ட கூடாது.
இதனால் வனவி லங்குகள் ஊருக்குள் நுழைந்து மனித - வன உயிரின மோதல் உருவாகும் சூழல் ஏற்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பொது மக்கள் மற்றும் விவசாயிகள் இடையே கலந்து ஆலோ சிக்கப்பட்டது.
அப்போது பேசிய விவசாயிகள் வனப்பகுதி யில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாத வண்ணம் அகழிகளை ஆழப்படுத்த வேண்டும். அதற்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்.
மின்வேலிகளை சீர மைக்க வேண்டும். மனித - வனவிலங்கு மோதல் ஏற்பட்டால் ஏற்படும் இழப்புகளுக்கு தற்போது அரசால் வழங்கப் படும் நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை. எனவே நிவாரண உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். வனவி லங்குகள் ஊருக்குள் நுழை யாத வகையில் வனத்து றையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் வனத்துறையினர், பொது மக்கள், விவசாயிகள், வன ஆர்வலர்கள், தன்னார்வ லர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொழிலாளி அவரது கள்ளகாதலியின் வீட்டிற்கு சென்ற தங்கினார்.
- மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள புதுக்காட்டை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் கடந்த 15 ஆண்டுகளாக அவரது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 50 வயது கூலித் தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் 2 பேரும் ஜாலியாக இருந்து வந்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொழிலாளி அவரது கள்ளகாதலியின் வீட்டிற்கு சென்ற தங்கினார். சம்பவத்தன்று 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளி அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து கள்ளக்காதலி மீது ஊற்றினார். பின்னர் அவர் மீது தீப்பற்ற வைத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பெண்ணை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது தலைமறைவாக உள்ள தொழிலாளியை தேடி வருகிறார்கள்.
- கட்டுமான நிறுவனம் சம்பந்தமான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்று வீடுகள் மற்றும் தலைமை அலுவலகத்தில் சோதனை செய்தனர்.
- வெளியே இருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.
வடவள்ளி:
கோவை அருகே உள்ள வடவள்ளியில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன. கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்று காலை 11 மணியளவில் 5-க்கும் மேற்பட்ட கார்களில் 25-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்குள் சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்களை அதிகாரிகள் வெளியே விடவில்லை. வெளியே இருந்து யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை.
இதேபோல இந்த கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்கள் 3 பேரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
சோதனையின் போது அதிகாரிகள் எத்தனை இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன? அதில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டு இருக்கிறது? ஒரு வீட்டின் விலை என்ன? அதற்கு ஆகும் செலவு எவ்வளவு?, இந்த வீடுகள் கட்டிக்கொடுக்க பணம் எப்படி வந்தது? வங்கிகளில் கடன் வாங்கி இருந்தால் அதற்கான ஆதாரங்கள் என்ன? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும் வீடுகள் எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது? விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த லாபம் எவ்வளவு? அதற்கு வருமானவரி செலுத்தப்பட்டு உள்ளதா என்பது போன்ற கேள்விகளையும் கேட்டனர். மேலும் கட்டுமான நிறுவனம் சம்பந்தமான ஆதாரங்கள் ஏதாவது இருக்கிறதா என்று வீடுகள் மற்றும் தலைமை அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில் சில முக்கிய ஆதாரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனை நள்ளிரவு 1 மணி வரை 14 மணி நேரம் நடந்தது. பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் யாரும் வெளியே செல்ல முடியாத படியும், யாரும் உள்ளே வர முடியாத படியும் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்தி விட்டு சென்றனர்.
இன்று 2-வது நாளாக காலை 9.30 மணி முதல் கட்டுமான நிறுவனத்தில் தலைமை அலுவலகம் உள்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- மக்கள் சத்தம் போட ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் அங்கும் இங்கும் உலாவியது.
- ஒற்றை காட்டுயானை கிராம பகுதிக்குள் நுழைந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை-பழத்தோட்டம் சாலையில் உள்ள பாரதி நகர் பகுதியில் பகல் நேரத்தில் நுழைந்த ஒற்றை காட்டுயானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகைபழத்தோட்டம் சாலையில் பாரதிநகர், அணணா நகர், ஜீவா நகர், பழத்தோட்டம், பெரியூர், சிறுமுகைப்புதூர், கணேசபுரம், காந்திநகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் பவானி ஆற்றையொட்டி அடர்ந்த வனப்பகுதியோரம் உள்ளது. இந்நிலையில் வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி காட்டெருமை, காட்டுயானை, சிறுத்தை, புலி, கடமான், புள்ளி மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு, விளை நிலங்களுக்கு நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று சிறுமுகை விஸ்கோஸ் பம்ப் ஹவுஸ் பகுதியிலுள்ள முட்புதரில் இருந்து ஒற்றை காட்டுயானை ஒன்று சிறுமுகை-பழத்தோட்டம் வழியாக பாரதிநகர் கிராம சாலைக்கு வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சத்தம் போட ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் அங்கும் இங்கும் உலாவியது.
இதையடுத்து சுமார் 20 நிமிடத்திற்கு பின் மீண்டும் ஒற்றையானை விஸ்கோஸ் பகுதியிலுள்ள அடர்ந்த புதருக்குள் சென்று மறைந்தது. பகல் நேரத்திலேயே ஒற்றை காட்டுயானை கிராம பகுதிக்குள் நுழைந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- எனது தம்பியை கொல்ல 2 முறை முயற்சி நடந்துள்ளது. 3-வது முறையாக நடந்த முயற்சியில் அவர் இறந்துள்ளார்.
- நான் சி.பி.சி.ஐ.டி. முன்பு ஆஜராக கூடாது என்று என்னிடம் ரூ.2 ஆயிரம் கோடி பண பேரம் பேசினர்.
கோவை:
கொடநாடு கொலை வழக்கில் விபத்தில் பலியான கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று கோவையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். முன்னதாக தனபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு சம்மன் அனுப்பினார்கள். அதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன்.
கொடநாடு வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது, என்ன நடந்தது? என எனது தம்பி கனகராஜ் என்னிடம் சொல்லியுள்ளார். அதனை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் சொல்கிறேன். கொடநாடு வழக்கில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை நபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட நபர்கள் வருகிறார்கள்.
கொடநாடு சம்பவத்துக்கு பிறகு எனது தம்பியிடம் பேரம் பேசியபடி அவர்கள் பணம் கொடுக்கவில்லை. அதை கேட்டபோது எனது தம்பியை தாக்கியுள்ளனர். போலீஸ்காரர் ஒருவரும் சேர்ந்து தாக்கியுள்ளார்.
எனது தம்பியை கொல்ல 2 முறை முயற்சி நடந்துள்ளது. 3-வது முறையாக நடந்த முயற்சியில் அவர் இறந்துள்ளார். இதனை நான் அப்போதிலிருந்தே சொல்லி வருகிறேன். இதற்கு நியாயம் கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ.டி. மூலம் இன்று நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.
எனது தம்பி சூட்கேசில் எடுத்து வந்த ஆவணங்களை நான் திறந்து பார்க்கவில்லை. அவன் எடுத்து வந்த 5 பைகளில் 3 பைகளை சங்க கிரியிலும், 2 பைகளை ஆத்தூரிலும் ஒப்படைத்துள்ளான்.
என் மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்கின்றனர். எனக்கு மனநிலை பாதிப்பு என கூறி இருக்கிறார்கள். அப்படி இருந்தால் என்னை மருத்துவ பரிசோதனைக்கு அல்லவா உட்படுத்தி இருக்க வேண்டும்.
ஏற்கனவே சம்பவம் நடந்தபோது என்னிடம் ஊட்டியில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சேலத்தில் விசாரணை நடந்தது. அப்போது என்னை கடுமையான முறையில் தாக்கினர்.
அப்போது ஒன்றரை நாட்கள் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. என்னென்ன வாங்கி எழுதினார்கள் என தெரியவில்லை. இதுதொடர்பாக அப்போது என்னிடம் விசாரித்த உயர் போலீஸ் அதிகாரிகளையும் தற்போது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். நான் தடயங்களை அழித்ததாக என்னை கைது செய்தனர். ஆனால் நான் எந்த தடயத்தையும் அழிக்கவில்லை.
நான் சி.பி.சி.ஐ.டி. முன்பு ஆஜராக கூடாது என்று என்னிடம் ரூ.2 ஆயிரம் கோடி பண பேரம் பேசினர். ஆனால் நான் உடன்படவில்லை. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு 200 சதவீதம் ஒத்துழைப்பு கொடுப்பேன். என்னை கூறு போட்டாலும் உண்மையை சொல்வேன். மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். எதற்கும் தயாராக உள்ளேன். உண்மை கண்டறியும் சோதனைக்கும் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனபாலிடம் கேட்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகளை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தனர்.
- எனது தம்பி என்னிடம் தெரிவித்த சில தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவிக்கிறேன்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. கடந்த 24.4.2017 அன்று இந்த பங்களாவில் இருந்த சில பொருட்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனை தடுக்க வந்த காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார்.
கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கொடநாடு வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையில் இந்த விசாரணை நடக்கிறது. கொடநாடு வழக்கின் முக்கிய தடயங்களை அழித்ததாக கூறி டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்தநிலையில் தனபால், பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் சாவில் மர்மம் உள்ளது என்பது போன்ற பல்வேறு திடுக்கிடும் தக வல்களை தெரிவித்து வருகிறார். இதனால் தனபாலிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கோரினர். தனபாலிடம் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி தேவையில்லை எனவும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரே சம்மன் அனுப்பி விசாரித்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் இன்று காலை 10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி கூறி தனபாலுக்கு சம்மன் வழங்கினர். சம்மனை பெற்றுக்கொண்ட தனபால் இன்று காலை சேலத்தில் இருந்து கோவை வந்தார். கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசார் முன்பு ஆஜர் ஆனார்.
தனபாலிடம் கேட்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகளை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தனர். அந்த கேள்விகளை கேட்டு தனபாலிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அந்த கேள்விகளுக்கு தனபால் அளித்த பதில்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
தனபால் கூறிய தகவல்கள் நம்பகத்தன்மை உள்ளதா, அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் போது தனபால் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தனபால் அளித்துள்ள வாக்குமூலத்தின் பேரில் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக தனபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எனது தம்பி என்னிடம் தெரிவித்த சில தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவிக்கிறேன். எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.






