என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறுமுகை பழத்தோட்டம் சாலையில் பகல் நேரத்தில் கிராமத்தில் நுழைந்த ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதி
- மக்கள் சத்தம் போட ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் அங்கும் இங்கும் உலாவியது.
- ஒற்றை காட்டுயானை கிராம பகுதிக்குள் நுழைந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை-பழத்தோட்டம் சாலையில் உள்ள பாரதி நகர் பகுதியில் பகல் நேரத்தில் நுழைந்த ஒற்றை காட்டுயானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகைபழத்தோட்டம் சாலையில் பாரதிநகர், அணணா நகர், ஜீவா நகர், பழத்தோட்டம், பெரியூர், சிறுமுகைப்புதூர், கணேசபுரம், காந்திநகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் பவானி ஆற்றையொட்டி அடர்ந்த வனப்பகுதியோரம் உள்ளது. இந்நிலையில் வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி காட்டெருமை, காட்டுயானை, சிறுத்தை, புலி, கடமான், புள்ளி மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு, விளை நிலங்களுக்கு நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று சிறுமுகை விஸ்கோஸ் பம்ப் ஹவுஸ் பகுதியிலுள்ள முட்புதரில் இருந்து ஒற்றை காட்டுயானை ஒன்று சிறுமுகை-பழத்தோட்டம் வழியாக பாரதிநகர் கிராம சாலைக்கு வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சத்தம் போட ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் அங்கும் இங்கும் உலாவியது.
இதையடுத்து சுமார் 20 நிமிடத்திற்கு பின் மீண்டும் ஒற்றையானை விஸ்கோஸ் பகுதியிலுள்ள அடர்ந்த புதருக்குள் சென்று மறைந்தது. பகல் நேரத்திலேயே ஒற்றை காட்டுயானை கிராம பகுதிக்குள் நுழைந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






