என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • சண்முகம் என்பவரின் வயலில் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டியபோது, சேற்றில் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது.
    • திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருக்கழுக்குன்றம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது58) டிராக்டர் டிரைவர். அதே பகுதியில் சண்முகம் என்பவரின் வயலில் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டியபோது, சேற்றில் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது.

    இதில் சகதியில் சிக்கி மூச்சு திணறி ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சக்திவேல் கோபத்தில் மனோகரை பிடித்து கீழே தள்ளியதில் மனோகர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

    செங்கல்பட்டு:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா பூண்டி ஊரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). இவர் செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தார்.

    சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பம்மல், முத்தமிழ்நகர், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மனோகர் (65). இவர்கள் இருவரும் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தனர். அப்போது சக்திவேலுக்கும், மனோகருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 31-10-2011 அன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சக்திவேல் கோபத்தில் மனோகரை பிடித்து கீழே தள்ளியதில் மனோகர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மீது செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனார்.

    இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி காயத்ரி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஓரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் வையாபுரி ஆஜரானார்.

    • விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நவீன வசதிகளுடன் விளையாட்டு திடல் அமைய உள்ளது.
    • செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உடன் இருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை அருகே அரசுக்கு சொந்தமான 46 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இந்த இடத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நவீன வசதிகளுடன் விளையாட்டு திடல் அமைய உள்ளது. இந்த இடத்தை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.

    விளையாட்டு திடல் இடத்தின் வரைபடம், கட்டுமான டிசைன், மண்ணின் தரம், நீர் வழித்தடம், மின் வழித்தடம், சுகாதாரம், அணுமின் நிலைய கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை அனைத்து துறை அதிகாரிகளுடன் அவர் மேற்கொண்டார்.

    அப்போது தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப செயலாளர் குமரகுருபரன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உடன் இருந்தனர்.

    • பல்லாவரம்-குன்றத்தூர் சாலை சந்திப்பில் இருந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது.
    • ஜி.எஸ்.டி. சாலையை கடக்க நடந்து செல்பவர்கள் தடுப்புகளை தாண்டி செல்லும் நிலை நீடித்து வருகிறது.

    தாம்பரம்:

    பல்லாவரத்தில் உள்ள மேம்பாலம் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது. தாமபரத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் இந்த மேம்பாலத்தால் நெரிசல் இன்றி சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் பெருமளவு குறைந்து உள்ளது.

    இந்த நிலையில் மேம்பால பணி ஆரம்பிக்கப்பட்ட போது அதன் அருகே பல்லாவரம்-குன்றத்தூர் சாலை சந்திப்பில் இருந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது. இதன்பின்னர் அந்த இடத்தில் சிக்னல் கம்பம் அமைக்கப்படவில்லை.

    மேலும் தாம்பரம் நோக்கி செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் திரும்பி சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அந்த வழியாக நடந்து செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சந்தை சாலை மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் தொடங்கும் ஒருவழி மேம்பாலம், இந்திரா காந்தி சாலை மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் முடிவடைகிறது. ஜி.எஸ்.டி. சாலையை கடக்க நடந்து செல்பவர்கள் தடுப்புகளை தாண்டி செல்லும் நிலை நீடித்து வருகிறது.

    அகற்றப்பட்ட இடத்தில் சிக்னல் கம்பம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து குன்றத்தூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் இந்திரா காந்தி சாலையில் வலதுபுறம் திரும்ப முடியவில்லை. அதேபோல், குன்றத்தூரில் இருந்து வரும் வாகனங்கள் தாம்பரம் நோக்கி ஜி.எஸ்.டி. சாலையில் 1.5 கி.மீ. சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

    இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் கூறும்போது, மேம்பாலம் கட்டுவதற்கு முன்பு போரூர், குன்றத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ஏராளமான வாகனங்கள் சிக்னல் வழியாகச் சென்று வந்தன. தற்போது சிக்னல் இல்லாததால் இந்திரா காந்தி சாலையில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையைக் கடக்க நடந்து செல்பவர்கள் மீது அடிக்கடி வாகனங்கள் மோதி வருகின்றன. போக்குவரத்து சிக்னல் கம்பம் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. காலை, மாலை நேரங்களில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவ-மாணவிகள் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது என்றார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, இந்திரா காந்தி சாலையில் விரைவில் சிக்னல் அமைக்கப்படும் என்றனர்.

    • கத்திமுனையில் அவர்களை மிரட்டி செல்போன் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    விழுப்புரம் மாவட்டம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(27). இவர் உறவினரான பவானி (22), முருகன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளல் சென்னையிவல் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் அவர்கள் சென்றனர்.

    அச்சரப்பாக்கம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் திடீரென ஏழுமலை,பவானி, முருகன் ஆகியோரை வழிமறித்தனர். மேலும் கத்திமுனையில் அவர்களை மிரட்டி செல்போன் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

    • மாடுகளுக்கு கருபிடிப்பை மைக்ரோ கேமரா மூலம் கம்ப்யூட்டர் வழியாக பார்த்து மருந்து கொடுக்கப்பட்டது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருக்கழுக்குன்றம் எம்.என்.குப்பம் பகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல், கருபிடிப்பை மைக்ரோ கேமரா மூலம் கம்ப்யூட்டர் வழியாக பார்த்து அதற்கேற்ப மருந்து கொடுத்தல், குடல்புழு நீக்கம், புரதச்சத்து மருந்து கொடுத்தல், நாய்களுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் முகாமில் செய்யப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போர், பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கபட்டது.

    மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, கால்நடை பராமரிப்பு மண்டல இயக்குனர் ஜெயந்தி, உதவி இயக்குனர் சாந்தி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், ஆர்.டி.அரசு, தமிழ்மணி உட்பட பொதுமக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்  முகாமில் பங்கேற்றனர்.

    • சிறப்பு அதிகாரி சால்வ்குர்ணி குழுவினர் அனைத்து புராதன சின்னங்களிலும் விளக்குகளை எரிய விட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபரும், இந்திய பிரதமர் மோடியும் வந்தபோது, இங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் பகுதிகளை இரவிலும் பார்த்து ரசிக்கும் வண்ணம், அலங்கார மின்விளக்கு அமைக்கப்பட்டது. பின்னர் ஓரிரு வாரங்களில் அவை நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே புராதன சின்னங்களை பார்வையிட ஜி-20 மாநாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வந்த போது அவர்கள் ரசிக்க மின் விளக்குகள் பழுது நீக்கி கூடுதல் விளக்குகள் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து புராதன சின்னங்களை பார்வையாளர்களுக்கு தொடர்ந்து தினமும் குறிப்பிட்ட நேரம் வரை அல்லது விடுமுறை நாட்களில் மட்டும் இரவு நேரத்தில் மின்னொளியில் பார்த்து ரசிக்க தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து நேற்று இரவு டெல்லியில் இருந்து மாமல்லபுரம் வந்த தொல்லியல்துறை சிறப்பு அதிகாரி சால்வ்குர்ணி குழுவினர் அனைத்து புராதன சின்னங்களிலும் விளக்குகளை எரிய விட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அதற்கான மின் கட்டண விபரம், கூடுதல் காவலாளி நியமனம், தொடர் பாதுகாப்பு, நுழைவு கட்டணம் உள்ளிட்ட விபரங்களை கேட்டரிந்து சென்றார். எனவே விரைவில் இரவிலும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை தினமும் அல்லது விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒத்திகை நாளை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
    • கிழக்கு கடற்கரை சாலையில் போலீசாரின் வாகன சோதனை இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது.

    மாமல்லபுரம்:

    பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் நடவடிக்கையாக 'சாகர் கவாச்-2023' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தமிழ்நாடு கடலோர பகுதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியது.

    இதில் கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழ்நாடு போலீசார் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நாளை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    கடல் வழி, சாலை வழியாக மத்திய கடலோர காவல் படை வீரர்கள் பயங்கரவாதிகள் போன்று மாறு வேடத்தில், கையில் டம்மி வெடிகுண்டு, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் ஊடுருவும் போலீசாரை கண்காணித்து அவர்களை பிடிப்பதே இந்த ஒத்திகை ஆகும்.

    பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகையையொட்டி கோவளம், மாமல்லபுரம், பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், கூவத்தூர் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் போலீசாரின் வாகன சோதனை இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது.

    தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் சென்று புதிய படகுகளோ, புதிய மர்மநபர்கள் எவரேனும் வருகிறார்களா? என்று கல்பாக்கம், மாமல்லபுரம், கோவளம் கடல் வழி சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நித்தியானந்தம் செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
    • ஆபாச படத்துடன் செல்போன் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டது கீழவலம் கிராமத்தை சேர்ந்த கஜபதி என்பது தெரிந்தது.

    செங்கல்பட்டு:

    மதுராந்தகம் அருகே உள்ள கீழவலம் கிராமத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவரது செல்போன் எண்ணுடன் ஆபாச படத்தை சேர்த்து சமூக வலைதளத்தில் மர்ம நபர் பதிவு செய்து இருந்தார். இதனை பார்த்து நித்யானந்தம் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து நித்தியானந்தம் செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஆபாச படத்துடன் செல்போன் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டது கீழவலம் கிராமத்தை சேர்ந்த கஜபதி என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொதுமக்கள் மற்றும் பெண்கள் தன்னுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலதளங்களில் பதிவிட வேண்டாம்" என்று தெரிவித்து உள்ளார்.

    • பலத்த காயம் அடைந்த குப்பன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
    • நிலத்தகராறில் பா.ஜனதா பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் (வயது 47). விவசாயி. மேலும் பாரதிய ஜனதா கட்சியில் கிளை தலைவராகவும் இருந்து வந்தார்.

    இவரது வீட்டின் அருகே வசித்து வரும் வேணு மற்றும் அவரது மகன் சரவணன் ஆகியோர் அதே பகுதியில் நிலம் வாங்கி இருந்தனர்.

    இந்த சாலை வழியாக குப்பன் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த இடம் தொடர்பாக குப்பனுக்கும், வேணுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பொது வழி பாதையை வேணு மற்றும் சரவணன் ஆகியோர் டிராக்டர் மூலம் ஊழுததாக தெரிகிறது. இதற்கு குப்பன் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தார்.

    இதனால் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேணு, அவரது மகன் சரவணன் வேணுவின் மனைவி பூங்கா வனம், மற்றும் அவர்களது உறவினரான முனியம்மாள் ஆகியோர் சேர்ந்து குப்பனை கட்டையால் தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த குப்பன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் வேணு, பூங்காவனம், முனியம்மாள் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    நிலத்தகராறில் பா.ஜனதா பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறு வணிகர்களின் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் விக்கிரமராஜாவிடம் கேள்வி எழுப்பினர்.
    • வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் பாதிப்புகள் இனி எங்கும் நடக்காமல் கணிகாணிப்பதாக கூறினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி ஐடியல் பீச் ரிசார்ட்டில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டம் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் சதக்கத்துல்லா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    கோயம்புத்தூரில் திறக்கப்பட்ட "லூலூ மால்" ஹைப்பர் மார்க்கெட், அடுத்தடுத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திறக்கும் நிலையில், சிறு வணிகர்களின் பாதிப்பு குறித்து செய்தியாளர்கள் விக்கிரமராஜாவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அடுத்து சென்னையில் திறக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இங்கு திறக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

    மேலும், வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் பாதிப்புகள் இனி எங்கும் நடக்காது, அதற்கான குழு அமைத்து தீவிரமாக கண்காணிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

    • காலையில் வடமாநில ஊழியர்கள் எழுந்து பார்த்தபோது 4 செல்போன்களும் திருட்டு போனது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சித்திரை குமார் (வயது 40). இவர் மறைமலைநகர் அடுத்த மல்ரோசாபுரம் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் தங்கி 4 வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் இரவு வட மாநில தொழிலாளர்கள் கடையில் இரும்பு ஷட்டரை பூட்டாமல் தூங்கிகொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்து கடையில் இருந்த 4 செல்போன்கள் மற்றும் ரூ.2 ஆயிரத்தை திருடி சென்றனர். காலையில் வடமாநில ஊழியர்கள் எழுந்து பார்த்தபோது 4 செல்போன்களும் திருட்டு போனது தெரியவந்தது.

    இது குறித்து கடை உரிமையாளர் சித்திரை குமார் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ×