மாமல்லபுரத்தில் நவீன விளையாட்டு திடல் புதிய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நவீன வசதிகளுடன் விளையாட்டு திடல் அமைய உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உடன் இருந்தனர்.
மாமல்லபுரத்தில் நவீன விளையாட்டு திடல் புதிய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை அருகே அரசுக்கு சொந்தமான 46 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இந்த இடத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நவீன வசதிகளுடன் விளையாட்டு திடல் அமைய உள்ளது. இந்த இடத்தை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.

விளையாட்டு திடல் இடத்தின் வரைபடம், கட்டுமான டிசைன், மண்ணின் தரம், நீர் வழித்தடம், மின் வழித்தடம், சுகாதாரம், அணுமின் நிலைய கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை அனைத்து துறை அதிகாரிகளுடன் அவர் மேற்கொண்டார்.

அப்போது தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப செயலாளர் குமரகுருபரன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com