என் மலர்
உள்ளூர் செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே பெண்ணுடன் சென்ற வாலிபர்களை கத்திமுனையில் மிரட்டி வழிப்பறி
- கத்திமுனையில் அவர்களை மிரட்டி செல்போன் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
மதுராந்தகம்:
விழுப்புரம் மாவட்டம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(27). இவர் உறவினரான பவானி (22), முருகன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளல் சென்னையிவல் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இரண்டு மோட்டார் சைக்கிளில் அவர்கள் சென்றனர்.
அச்சரப்பாக்கம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் திடீரென ஏழுமலை,பவானி, முருகன் ஆகியோரை வழிமறித்தனர். மேலும் கத்திமுனையில் அவர்களை மிரட்டி செல்போன் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிளை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
Next Story






