search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரத்தில் தினமும் புராதன சின்னங்களை இரவிலும் மின்னொளியில் ஜொலிக்க வைக்க முடிவு
    X

    மாமல்லபுரத்தில் தினமும் புராதன சின்னங்களை இரவிலும் மின்னொளியில் ஜொலிக்க வைக்க முடிவு

    • சிறப்பு அதிகாரி சால்வ்குர்ணி குழுவினர் அனைத்து புராதன சின்னங்களிலும் விளக்குகளை எரிய விட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் புராதன சின்னம் பகுதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபரும், இந்திய பிரதமர் மோடியும் வந்தபோது, இங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் பகுதிகளை இரவிலும் பார்த்து ரசிக்கும் வண்ணம், அலங்கார மின்விளக்கு அமைக்கப்பட்டது. பின்னர் ஓரிரு வாரங்களில் அவை நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே புராதன சின்னங்களை பார்வையிட ஜி-20 மாநாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வந்த போது அவர்கள் ரசிக்க மின் விளக்குகள் பழுது நீக்கி கூடுதல் விளக்குகள் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து புராதன சின்னங்களை பார்வையாளர்களுக்கு தொடர்ந்து தினமும் குறிப்பிட்ட நேரம் வரை அல்லது விடுமுறை நாட்களில் மட்டும் இரவு நேரத்தில் மின்னொளியில் பார்த்து ரசிக்க தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து நேற்று இரவு டெல்லியில் இருந்து மாமல்லபுரம் வந்த தொல்லியல்துறை சிறப்பு அதிகாரி சால்வ்குர்ணி குழுவினர் அனைத்து புராதன சின்னங்களிலும் விளக்குகளை எரிய விட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அதற்கான மின் கட்டண விபரம், கூடுதல் காவலாளி நியமனம், தொடர் பாதுகாப்பு, நுழைவு கட்டணம் உள்ளிட்ட விபரங்களை கேட்டரிந்து சென்றார். எனவே விரைவில் இரவிலும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை தினமும் அல்லது விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னொளியில் சுற்றுலா பயணிகள் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×