என் மலர்tooltip icon

    அரியலூர்

    • சுண்ணாம்புகல் சுரங்க விரிவாக்கம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது
    • அரியலூர் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது:

    அரியலூர்,

    அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டால்மியா சிமெண்ட்நநிறுவனத்திற்கு சொந்தமான சுண்ணாம்பு கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள்செங்கமுத்து, கல்லங்குறிச்சி தமிழரசன், சமூக ஆர்வலர் சங்கர், இளவரசன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், மண்டி செல்வராஜ், ஏகேஎம் மெயின்ஸ் கதிர்கணேசன், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் மகாலிங்கம், அதிமுக பாஸ்கர், திமுக பாலு, விடுதலைசிறுத்தைகள் கட்சி பாலசிங்கம், சிமெண்ட் ஆலை அதிகாரிகள், அரசுஅலுவலர்கள், சமூகஆர்வலர் கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தி ல்குமார், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பேசிய அனைவரின் கருத்துக்களை கலந்து ஆலோசித்துநட வடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும், பொதுமக்கள் நலன்கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும், பொது மக்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு புதுடில்லியில் உள்ள மத்திய சுற்றுசூழல் வனத்துறை மற்றும்பருவநிலை மாறுபாடு அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஆனி ேமரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    • செந்துறை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
    • பல்வேறு அலங்காரங்களில் மாரியம்மன் நாள் தோறும் பக்தர்களுக்கு அருள் பாளித்து வந்தார்.

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஒரு ஆண்டு தேர் திருவிழாவும் மற்றொரு ஆண்டு தீமிதி திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து நாள்தோறும் மாரியம்மன் வீதி உலாவும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. பல்வேறு அலங்காரங்களில் மாரியம்மன் நாள் தோறும் பக்தர்களுக்கு அருள் பாளித்து வந்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9 ஆம் நாள் தேர்த்திருவிழா நேற்று காலை தொடங்கியது. முன்னதாக தேர் கட்டும் பணிகள் நிறைவு பெற்றதும் விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளைந்த மா, பலா, முந்திரி ஆகியவற்றை தேரில் கட்டி அலங்கரித்தனர்.அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தேரை இழுத்து சென்றனர். தேரோடும் 4 வீதிகளில் தேர் வலம் வந்தது. கடும் வெயில் காரணமாக மதியம் தேர் பாதி வழியில் திருத்தப்பட்டது. பின்னர் மாலை தேர் வடம் பிடிக்கப்பட்டு மீண்டும் கோவில் சன்னதியை வந்தடைந்தது. இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் திருவிழாவை கண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

    • அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    அரியலூர்,

    அரியலூர் ராம்கோ சிமென்ட் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமை வகித்து பேசுகையில், 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது, மீறி ஓட்டினால் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனம் பறிமுதல் செய்து 3 மாத சிறை தண்டணை விதிக்கப்படும்.

    மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம், கைப்பேசி பேசியபடி வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம், தலை கவசம் அணியாமல் வாகனம் ஒட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஐ.டி.ஐ. மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது
    • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் அத்துறை சார்ந்த விவரங்களை எடுத்துரைத்தனர்.

    அரியலூர்,

    அரியலூர் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா மாணவர்கள் குறித்து அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பயற்சியை தொடக்கி வைத்து பயிற்சியின் நோக்கம் மற்றும் அதன் பணிகள் குறித்து விளக்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா பயிற்சி வகுப்பை பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்தும், 10, 11, 12-ம் வகுப்பில் பள்ளி செல்லாதவர்கள் மற்றும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து கள ஆய்வு செய்து அவர்கள் உடனடியாக தேர்வு எழுதுவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் அத்துறை சார்ந்த விவரங்களை எடுத்துரைத்தனர்.

    • தா.பழூர் அருகே வயலுக்கு சென்ற பெண்ணை தாக்கியுள்ளனர்
    • இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி இன்பஜோதி (வயது 38). சம்பவத்தன்று இன்பஜோதி தனது வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது அருகிலுள்ள வயலில் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் மனைவி சித்ரா என்பவரை பொற்பதிந்தநல்லூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் துரையப்பன் (63), இவரது மகன் முருகன் (38) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை தட்டிக்கேட்ட இன்பஜோதியையும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இன்பஜோதியை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இதுகுறித்து இன்பஜோதி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த்மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்
    • பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவை யான சான்றிதழ்களை தொடர்ந்து விரைவாக வழங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவ லகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை பார்வையிட்டு, பணிகள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பிற பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றவும் சம்மந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அரியலூர் வட்டாட்சியர் அலுவல கத்தினை பார்வையிட்டு, அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும், ஆன்லைன் பட்டா மாறுதல் மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவை யான சான்றிதழ்களை தொடர்ந்து விரைவாக வழங்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன்மு ன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு, அரசின் திட்டங்கள் அனைத்து பொதும க்களையும் விரைவாக சென்று சேரும் வகையில் அலுவலர் கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

    • ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் கோடாலி கிராம மக்கள் தனி ரேஷன் கடை கேட்டு குடும்ப அட்டைகளை ஒப்படைத்தனர்
    • இது தொடர்பாக அப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை பழுதடைந்தது. அதனை இடித்து அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஏற்கனவே இருக்கும் ரேஷன் கடை ஒரு தரப்பினருக்கு உரிய இடத்தில் இருப்பதாகவும் எனவே ஊருக்கு பொதுவான இடத்தில் ரேஷன் கடையை கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி மற்றொரு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக அப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனை வலியுறுத்தும் வகையில் நேற்று திடீரென புதிய ரேஷன் கடை அமைத்து தரக்கோரி ரேஷன் கார்டுகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்த மக்களுக்கு அரிசி பைகளை வழங்கி பா.ம.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு மாநில பா.ம.க. துணைத் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட தேர்தல் பணிக்குழு உறுப்பினர் குமணன், உதயநத்தம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜ்மோகன், உதயநத்தம் மற்றும் கோடாலி பகுதிகளை சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது சுமார் 270 குடும்பத்தினருக்கு அரிசி வழங்கப்பட்டது. இதில் பா.ம.க. மாநில துணைத்தலைவர் திருமாவளவன் பேசியது: மிக எளிமையாக தீர்க்கப்பட்டு இருக்க வேண்டிய மக்கள் பிரச்சனை தற்போது போராடி பெற வேண்டிய நிலைக்கு சென்றுள்ளது.ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த மக்களிடம் இதுவரை அதிகாரிகள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தவோ, தீர்வு காணவோ முயற்சி செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • உடையார்பாளையத்தில் மது விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • போலீசார் அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் எஸ்.ஐ. திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு காலனி தெருவை சேர்ந்த சூர்யா (25) என்பவர், இடையார் சாலையில் உள்ள டாஸ்மாக் பார் அருகே மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்துள்ளனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே மாளிகை மேடு மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் அரண்மனை காலத்து மதில் சுவர் கண்டுபிடிக்கபட்டது
    • தமிழ்நாட்டில் 202-21 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாளிகை மேட்டில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மீண்டும் வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 202-21 ஆம் ஆண்டிற்கான தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்று கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அகழாய்வு பணிகள் நிதி ஒதுக்கப்பட்டு முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

    அந்த வகையில், கங்கைகொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில் சோழ பேரரசனால் முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்குப் பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகை மேடு பகுதியில் கடந்த 2021 மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின.இந்த பணியின் போது பழங்கால கூரை ஓடு, பானை, சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினால் ஆன ஓடுகள், இரும்பிலான ஆணிகள், சீனக் கலை நயமிக்க மணிகள் போன்ற பொருள்கள் மற்றும் சிறிய கட்டிடங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

    அவை தொல்லியல் துறையினரால் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவரும், பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக வடிகாலமைப்பு போன்ற மதில் சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த பணியில் நாள் ஒன்றுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முதற்கட்ட பணியில் 30-க்கு 20 என்ற சதுர மீட்டர் அளவில் இந்த அகழாயவு பணி தொடங்கி கடந்த ஆண்டு 2021 செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

    மூன்றாம் கட்ட அகழாய்வு பணியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் கடந்த 6-ந்தேதி துவங்கி வைத்தார். இந்த பணி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. மூன்றாம் கட்ட அகழாய்வு பணிக்கு ரூ.30 லட்சம் நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று மீண்டும் வாய்க்கால் போன்ற மதில் சுவர் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்காக 315 சென்டிமீட்டர் நீளமுள்ள 45 சென்டிமீட்டர் அகலம் உள்ளது. மீண்டும் தோண்ட தோண்ட இதனுடைய நீளம் முழுமைாக தெரியக்கூடும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

    • அரியலூரில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உறுதி அளித்தார்
    • பள்ளிக் கல்வித்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றி, தற்போது கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டராக ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்காக வேளாண்மை, கல்வி மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர், இருப்பிடம், உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம் ஆகியவைகளுக்கு முக்கியத்தும் வழங்கி, மக்கள் நலனுக்காக தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், அனைத்தும், அனைவருக்கும் தங்குதடையின்றி தகுதியுடைய நபர்களுக்கு சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.2005ம் ஆண்டு குருப்-1 தேர்வில் வெற்றி பெற்ற ஆனிமேரி ஸ்வர்ணா, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வருவாய் கோட்டாட்சியராகவும், கருர் மாவட்டம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் பதவி உயர்வு பெற்று மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் உறுப்பினர் செயலாளராகவும், டாஸ்கோ மற்றும் சிட்கோ பொதுமேலாளராகவும், பள்ளிக் கல்வித்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை மற்றும் இணை செயலாளராகவும் பணியாற்றி, தற்போது கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

    • அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் சாதி சான்றிதழ் வழங்க கோரி கிராம மக்கள் பள்ளி குழந்தைகளுடன் மனு அளித்தனர்
    • ஜாதி சான்றிதழ் வழங்கி, குழந்தைகள் உயர்கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. அப்போது, அரியலூர் ரயில்வே நிலையம் அருகேயுள்ள எருத்துக்காரன் பட்டியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், தங்களின் பள்ளி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டரிடம் மனு அளித்தனர். அரியலூர் அடுத்த எருத்துக்காரன் பட்டி கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளாக 40 குடும்பங்களை சேர்ந்த இந்து கணிக்கர் ஜாதியை சேர்ந்தவர்கள் வசித்து வருவதாகவும், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை.

    எனவே, மதுரை, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் தங்கள ஜாதி மக்களுக்கு வழங்கி உள்ளது போல, இந்து கணிக்கர் (எஸ்டி) என ஜாதி சான்றிதழ் வழங்கி, குழந்தைகள் உயர்கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். பள்ளிக்குழந்தைகளுடன் மனு அளிக்க அவர்கள் வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • ஜெயங்கொண்டம் அருகே இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • காண்டிப தீர்த்தம் எடுத்து வந்து யாக சாலையில் பூஜை நடைபெற்றது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பழைய திருச்சி ரோடு தெருவில் உள்ள ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு மகா பூர்ணகுடி, மகா தீபாராதனை, புறப்பாடு மற்றும் மங்கள இசை வேதபாரானியம், மூன்றாம் கால பூஜை மறறும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நூதன அஸ்தமன ஆறு கால யாகம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் காண்டிப தீர்த்தம் எடுத்து வந்து யாக சாலையில் பூஜை நடைபெற்றது. ெதாடர்ந்து சப்த கன்னிகளுக்கு பூஜை செய்யப்பட்டது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் வெங்கட்ராமன், சூரிய நாராயணன், இளங்கோவன், நாட்டார் சேதுராமன் மேலும் விழா குழு நண்பர்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×