என் மலர்tooltip icon

    அரியலூர்

    • தா.பழூர் அருகே காளி ஆட்டம் திருவிழா நடைபெற்றது
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அருள்பாலிக்கும் காளியம்மன் கோவிலில் கடந்த 24-ம் தேதி காளி ஆட்டம் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து காளியம்மன் சிரசு, காளி நடனம் ஆடுபவர் தலையில் வைக்கப்பட்டு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. காளியம்மன் கோவிலில் இருந்து அம்மன் புறப்பட்டு படுகள குழியில் படுத்திருக்கும் தொழிலாளியை எழுப்பிவிட்டு அங்கு பக்தர்களுக்கு குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து விநாயகர் கோவில் முன்பு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் காளியம்மன் நடனம் ஆட திருவிழா களைகட்டத் தொடங்கியது. காளியம்மன் மயிலாட்டம், பாம்பாட்டம் ஆகிய நடனங்களை ஆடியது பக்தர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. காளியம்மன் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக சென்று நடனமாடி பக்தர்களுக்கு ஆசி வழங்கி தீபாராதனையை ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதி நாளான நேற்று காளியம்மன் ஊஞ்சலில் அமர்ந்து ஆடி நடனமாடும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மின்னல் தாக்கியதில் தென்னை மரம் சேதம் அடைந்தது.
    • மீன்சுருட்டி பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்தது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து பெய்த இந்த மழையின் போது காற்று, இடி, மின்னல் ஏற்பட்டது. இதில் காடுவெட்டி வடக்கு தெருவில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மனைவி அரசிளங்குமாரி (வயது 45) என்பவரின் வீட்டின் முன்பு இருந்த தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மீன்சுருட்டி, பாப்பாக்குடி, காடுவெட்டி, இறவாங்குடி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

    • ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் எள், கடலை, உளுந்து, கொப்பரை தேங்காய் உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளனர்.ஆனால் தற்போது வரை கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டதால் திடிரென வந்த மழையில் விவசாய பொருட்கள் நனைந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்திய ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை கண்டித்து திருச்சி-சிதம்பரம் சாலையில் மழையில் நனைந்தபடி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கொள்முதல் செய்த பொருட்களுக்கு உண்டான தொகையும் விவசாயிகளுக்கு தராமல் காலதாமதம் செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராஜா சோமசுந்தரம் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாத், முத்துக்குமார், பெரியசாமி உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் தீர்வு காணும் வரை சாலை மறியல் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் ஒருங்கிணைந்த அலுவலகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஆண்டிமடம் அருகே வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமை எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் திருக்களப்பூர் ஊராட்சியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன், ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி (வட்டார ஊராட்சி), ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் பத்மநாபன், திருக்களப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி, ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பம் செல்வமணி, ஊராட்சி செயலாளர் மாயகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி உதயகுமார், கழக முன்னோடி பழனிவேல், கிளைக் கழக செயலாளர்கள் திருநாவுக்கரசு, ராமாமிர்தம், வேணுகோபால், ரங்கநாதன், ஆபிரகாம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • தா.பழூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
    • போட்டியில் சுமார் 650 மாடுகள் பங்கேற்றன

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மற்றும் மரிய சூசை ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கடலூர், மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 650 மாடுகள் பங்கேற்றன. மாடுகளை பிடிக்க 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நடுவலூர் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் போட்டியை கண்டுகளித்தனர். இதில் பிடிபடாத காளைகளுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், சேர், டேபிள், குவளை, குடம், தங்கநாணயம், டிவி, பண முடிச்சுகள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. இதில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
    • கள்ளச்சாராயம், கஞ்சா, சிறார் கூட்டு பாலியல் வன்முறையை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் அரசு கொறடாவும், மாவட்ட செயலாளருமான தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசும்போது, கள்ளச்சாராயம், கஞ்சா, சிறார் கூட்டு பாலியல் வன்முறையை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அ.தி.மு.க. நிர்வாகிகள், அனைத்து அணி பொறுப்பாளர் கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், அனைத்து மக்கள்நலப்பிரதிநிதிகளும் கண்டனஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.

    • ஜெயங்கொண்டம் அருகே மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணை குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 22-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடம் புறப்பாடு நடைபெற்று, வேத பாராயணம், தேவாரம் திருமுறை பதிகங்கள் பாடப்பட்டு, பக்தி சிரத்தையுடன் சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். இந்த நிகழ்வில் அனைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஜெயங்கொண்டம் அருகே 2-வது திருமணம் செய்த டிரைவர் கைது செய்யபட்டார்
    • இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் ரங்கசாமி (வயது29). டிராக்டர் டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் காமராசவல்லி கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் தமிழ்ச்செல்வி (21) என்பவரை ரங்கசாமி குடும்பத்தினர் நேரில் சென்று திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வியிடம் தனக்கு திருமணம் நடந்ததை கூறாமல் மறைத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழ்செல்வியை அழைத்துச் சென்று அவசர அவசரமாக கடந்த 22-ம் தேதி திருமணம் செய்துள்ளார்.

    இந்நிலையில் ரங்கசாமிக்கு திருமணமானது தமிழ்ச்செல்விக்கு தெரியவந்தது. இதைப்பற்றி தமிழ்ச்செல்வி ரங்கசாமியிடம் கேட்டபோது தகாத வார்த்தைகள் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தமிழ்ச்செல்வி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார். மேலும் ரங்கசாமியின் முதல் மனைவிக்கும், ரங்கசாமிக்கும் இதுவரை விவாகரத்து ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கீழ மைக்கேல்பட்டி புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது
    • இவ்விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு புனித வனத்து சின்னப்பருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே பிரசித்தி பெற்ற புனித வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி அருட்தந்தை இன்னோசென்ட் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினசரி திருப்பலி, நவநாள் திருப்பலி, தவ நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழா தொடங்கிய நாள் முதல் விருந்து உபசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதற்காக காட்டுக்குள் உள்ள முந்திரி மரங்களுக்கு கீழே கறி விருந்து சமைத்து உறவினர்களை அழைத்து விருந்து உபசரிப்பது நடைபெற்றது.

    இதில் விருந்தினர்கள் மட்டுமின்றி ஆலயத்திற்கு வரும் யார் வேண்டுமானாலும் அந்த விருந்தில் கலந்து கொண்டு உணவு உண்ணலாம். காட்டு திருவிழா என்று அழைக்கப்படும் வனத்து சின்னப்பர் ஆலய திருவிழாவில் பாரம்பரிய மனம் மாறாமல் பல ஆண்டுகளாக இந்த விருந்தோம்பல் நடைபெற்று வருவது இந்த விழாவின் சிறப்பு ஆகும்.விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலை திருப்பலி மற்றும் பெருவிழா திருப்பலியும், இரவு தேவ நற்கருணை ஆசீர்வாதமும் நடந்தது.

    இரவு 12 மணியளவில் ஆடம்பர தேர்பவனியை குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி, அருட்தந்தைகள் ஜான் கென்னடி, சதீஷ் ஏசுதாஸ் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட சப்பரத்தில் புனித வனத்து சின்னப்பர், ஆரோக்கிய அன்னை மற்றும் சம்மனசு ஆகியோர் எழுந்தருளினர்.இவ்விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்துகொண்டு புனித வனத்து சின்னப்பருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

    பின்னர் வாணவேடிக்கை மற்றும் பேண்டு வாத்தியம் முழங்க திருத்தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தா.பழூர் செல்லும் சாலை வழியாக கீழ மைக்கேல் பட்டி புனித மைக்கேல் அதிதூதர் ஆலய வாயிலை சென்றடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கீழமைக்கேல்பட்டி பங்கு தந்தை அடைக்கலசாமி மற்றும் ஊர் நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.

    • விவசாயிடம் வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யபட்டார்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்,

    இரும்புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் ராசாங்கம் மகன் பசுபதி(எ) தமிழரசன். விவசாயியான இவர், அப்பகுதி முருகன் கோயில் முன்பு நின்று கொண்டிருந்ததார். அப்போது அங்கு வந்த 2 பேர், தமிழரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில், இரும்புலிக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிந்து, பெரம்பலூர் மாவட்டம், கொளத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (36), மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வம்(34) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் பெண் ஊராட்சி துணைத் தலைவரின் கையெழுத்து அதிகாரத்தை மாவட்ட கலெக்டர் மாற்றி கொடுத்ததை கண்டித்தும், வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கியதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து துணை தலைவர் மாலதி ராஜேந்திரன் ஆதரவாக தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தா.பழூர் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடையார் பாளையம் ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் திருச்சி ரோட்டு தெருவில் ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி கணபதி ேஹாமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 4 நாட்கள் 6 கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் மஹாபூர்னாகுதி, மகா தீபாரதனை நடைபெற்று புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது.வேத விற்பன்ன ர்கள்மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கை அதிர,கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள், ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர்.விழா ஏற்பாடுகளை முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் க.வெங்ட்ராமன், தர்மகர்த்தா சூரியநாராயண், நாட்டார்கள் இளங்கோவன், தர்மன், மற்றும் விழா திருப்பணி குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.



    ×