என் மலர்tooltip icon

    அரியலூர்

    • சிறுவர்களுக்கு புகையிலை, குட்கா விற்பனை செய்தவர் கைது செய்யபட்டார்
    • பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு 6 ஆயிரம் ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் எஸ்.ஐ. திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் புகையிலை மற்றும் குட்கா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடரந்து அங்கு விசாரணை நடத்த சென்றபோது த.குடிகாடு கீழத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவி(வயது 52)என்பவர் போலீசாரை கண்டு ஓட முயன்றுள்ளார், அவரை பிடித்து விசாரணை செய்த போது 15 வயது சிறுவர்களுக்கு புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் ரவியை கைது செய்துஅவர் விற்பனைக்காக வைத்திருந்த 6.5 கிலோ புகையிலை, 2.3 கிலோ குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு 6 ஆயிரம் ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • பாம்பு கடித்து மூதாட்டி இறந்தார்
    • இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் காலனி தெருவை சேர்ந்த அழகுமுத்து என்பவரின் மனைவி பெரியம்மாள்(வயது 60). இவர் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. பெரியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெரியம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இரு சக்கர வாகனம் மோதி சிறுமி பலியானார்
    • போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகேயுள்ள சின்னநாகலூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரின் மகள் சாந்தி (வயது 17). இவர், தனது தாய் சித்ராவை (40) மொபட்டில் அழைத்துக் கொண்டு பெரிய நாகலூர்மேட்டுத்தெரு, கல்லங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேட்டு தெரு வளைவில் திரும்பும் போது, எதிரே தத்தனூர் தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர்(26) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற கயர்லாபாத் போலீசார், சாந்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்த சித்ரா, ராஜசேகர் ஆகியோரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 வாலிபர்கள் கைது செய்யபட்டனர்
    • ஏரிக்கரை புதருக்குள் 3 வாலிபர்கள் மறைந்திருந்து பெண் குளிப்பதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் தண்டலை கிராமத்தில் ஊருக்கு மத்தியில் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்-பெண் இருபாலரும் குளித்து வருகின்றனர். இந்த நிலையில் மதிய நேரத்தில் 35 வயது இளம் பெண் ஒருவர் தனியாக அந்த ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரிக்கரை புதருக்குள் 3 வாலிபர்கள் மறைந்திருந்து அந்தப் பெண் குளிப்பதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டுள்ளார். உடனே அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    பின்னர் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தண்டல் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (23), தினேஷ் (21), விமல் (19) ஆகிய வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர்களின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அந்தப் பெண் குளிப்பது வீடியோவில் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    • ஜெயங்கொண்டம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
    • இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மணக்கரை கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு திருச்சி சாலையில் உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் 50-க்கும் மேற்பட்டோர் அலகு குத்தி காவடி எடுத்து கடைவீதி, நான்கு ரோடு, சின்ன வளையம் வழியாக மணக்கரை கிழக்குத் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றடைந்தனர். மேலும் மகா மாரியம்மன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தமிழகத்தில் பூரண மது விலக்கே பா.ம.க.வின் நிலைப்பாடாகும்.
    • வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

    செந்துறை :

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இலைக்கடம்பூர் கிராமத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளனர். இது குறைந்த விற்பனையாகும் கடையா? அல்லது அதிக விற்பனையாகும் கடையா? என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் மது விற்பனை நடைபெறவில்லை, மது திணிப்பு நடைபெற்று வருகிறது. உணர்வுள்ள முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பாரானால், தமிழக இளைஞர்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.

    தமிழகத்தில் பூரண மது விலக்கே பா.ம.க.வின் நிலைப்பாடாகும். டாஸ்மாக்கின் கள்ள சந்தைகளால் தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய கொள்ளை, ஊழல் ஆகும். இதனை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். நல்ல சமூக உணர்வுள்ள அமைச்சரை மதுவிலக்கு துறைக்கு அமைச்சராக நியமனம் செய்ய வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். பா.ஜ.க.விற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும்.

    வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் 53 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் இவ்வகையான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மக்களை வெகுவாக பாதிக்கும். எனவே மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக இலைக்கடம்பூர் கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் நட்டு வைத்த ஆலமரக்கன்று, தற்போது மரமாக வளர்ந்துள்ளதை அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். அப்போது, அனைவரும் மரக்கன்று நட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    • மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வீட்டில் வைத்திருந்த 13 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் தா.பழூர்- சுத்தமல்லி சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 29), மணிவேல் மனைவி செல்வி (46) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல கோடங்குடி கிராமத்தில் சப்- இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் மனைவி சாவித்திரி (65) என்பவர் வீட்டில் வைத்திருந்த 13 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாவித்திரியையும் கைது செய்தனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யபட்டனர்
    • மாமனார், மாமியார் சினேகாவை தினமும் அடித்து கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பாலுசாமி (வயது 35). இவருக்கும் இரும்புலிக்குறிச்சி அருகே உள்ள வாளரை க்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகள் சினேகா (23) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலுசாமி வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்பொழுது ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் மாமனார், மாமியார் சினேகாவை தினமும் அடித்து கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சினேகா வீட்டில் யாரும் இல்லாத ேநரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சினேகாவின் தந்தை நல்லதம்பி இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் டி.எஸ்.பி.ராஜா சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்து சினேகாவின் கணவர் பாலுசாமி, அவரது தந்தை ராஜேந்திரன், தாய் சாவித்திரி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கப்பட்டது
    • வருகிற 12-ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    அரியலூர்,

    அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) டோமினிக் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் அரசு கலை கல்லூரியில் நிகழாண்டில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு இணையதள வாயிலாக விண்ணப்பித்த மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. இன்று தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், நாளை (சனிக்கிழமை) அறிவியல் பாடப்பிரிவுக்கும், வருகிற 12-ம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    முதற்கட்ட கலந்தாய்வுகளில் கலந்து கொண்டு இடம் கிடைக்காத மாணவ, மாணவிகளும், கலந்து கொள்ளாதவர்களும் இந்த 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் இணையதள விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 3 நகல்கள், 3 புகைப்படம், கல்லூரி கட்டணத்துடன் நேரடியாக தங்களது பெற்றோருடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க மகளிர் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்காலம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிகழாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதால் அனைத்து மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம். மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்றிறுக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு அ அல்லது ஆ சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

    மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மேலும் இது குறித்த விவரங்களை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது என கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்தார்
    • தமிழ்நாட்டில் எக்ஸ்பிரஸ் சாலை இதுவரை ஒன்றுக்கூட கொண்டு வரப்படவில்லை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர், கயர்லாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் தெரிவித்ததாவது: காமராஜர் ஆட்சிக் காலத்தில் திருச்சியில் பெல் நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் பல்வேறு அணைகள் கொண்டு வரப்பட்டது. இதே போல் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் சேலம் இரும்பு உருக்கு ஆலை மற்றும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

    ஆனால் தற்போது மத்தியில் ஆட்சியுள்ள பா.ஜ.க. தமிழகத்துக்கென எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை.கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எம்ய்ஸ் மருத்துவமனை கிடப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் எக்ஸ்பிரஸ் சாலை இதுவரை ஒன்றுக்கூட கொண்டு வரப்படவில்லை. ஆனால் உத்திரபிரதேசத்தில் 10 எக்ஸ்பிரஸ் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் விகிதாச்சார அடிப்படையில் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.

    ஒடிசா ெரயில் விபத்துக்கு காரணம் ெரயில்வே வாரியம் சரியாக செயல்படாதது தான். தண்டவாளங்கள் சரியில்லை, சிக்னல்கள் முறையாக பராமரிக்காமல் விடுவதால் சிக்னல்கள் பழுதாகி போகின்றன. இதுவே விபத்துக்கான காரணமாகும். இதனை ெரயில்வே தொழிற்சங்கங்கள் தெளிவாக எடுத்து கூறியுள்ளது. வணிகத்துக்கான மின்கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. அதனை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். இதில் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • னேகாவின் கணவர் பாலுசாமி, அவரது தந்தை ராஜேந்திரன், தாய் சாவித்திரி உள்ளிட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பாலுசாமி (வயது 35). இவரு க்கும் இரும்புலிக்குறிச்சி அருகே உள்ள வாளரை க்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகள் சினேகா (23) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலுசாமி வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்பொழுது ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்ப ட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சினேகா வீட்டில் யாரும் இல்லாத ேநரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சினேகாவின் தந்தை நல்லதம்பி இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருமணமாகி 2 வருடங்களே ஆன நிலையில் ஆர்.டி.ஒ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சினேகாவின் கணவர் பாலுசாமி, அவரது தந்தை ராஜேந்திரன், தாய் சாவித்திரி உள்ளிட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×