என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது-கே.எஸ்.அழகிரி பேட்டி
    X

    தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது-கே.எஸ்.அழகிரி பேட்டி

    • தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது என கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்தார்
    • தமிழ்நாட்டில் எக்ஸ்பிரஸ் சாலை இதுவரை ஒன்றுக்கூட கொண்டு வரப்படவில்லை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர், கயர்லாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் தெரிவித்ததாவது: காமராஜர் ஆட்சிக் காலத்தில் திருச்சியில் பெல் நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் பல்வேறு அணைகள் கொண்டு வரப்பட்டது. இதே போல் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் சேலம் இரும்பு உருக்கு ஆலை மற்றும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

    ஆனால் தற்போது மத்தியில் ஆட்சியுள்ள பா.ஜ.க. தமிழகத்துக்கென எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை.கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எம்ய்ஸ் மருத்துவமனை கிடப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் எக்ஸ்பிரஸ் சாலை இதுவரை ஒன்றுக்கூட கொண்டு வரப்படவில்லை. ஆனால் உத்திரபிரதேசத்தில் 10 எக்ஸ்பிரஸ் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் விகிதாச்சார அடிப்படையில் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது.

    ஒடிசா ெரயில் விபத்துக்கு காரணம் ெரயில்வே வாரியம் சரியாக செயல்படாதது தான். தண்டவாளங்கள் சரியில்லை, சிக்னல்கள் முறையாக பராமரிக்காமல் விடுவதால் சிக்னல்கள் பழுதாகி போகின்றன. இதுவே விபத்துக்கான காரணமாகும். இதனை ெரயில்வே தொழிற்சங்கங்கள் தெளிவாக எடுத்து கூறியுள்ளது. வணிகத்துக்கான மின்கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. அதனை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். இதில் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×