என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 வாலிபர்கள் கைது
- ஜெயங்கொண்டம் அருகே இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 வாலிபர்கள் கைது செய்யபட்டனர்
- ஏரிக்கரை புதருக்குள் 3 வாலிபர்கள் மறைந்திருந்து பெண் குளிப்பதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் தண்டலை கிராமத்தில் ஊருக்கு மத்தியில் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்-பெண் இருபாலரும் குளித்து வருகின்றனர். இந்த நிலையில் மதிய நேரத்தில் 35 வயது இளம் பெண் ஒருவர் தனியாக அந்த ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரிக்கரை புதருக்குள் 3 வாலிபர்கள் மறைந்திருந்து அந்தப் பெண் குளிப்பதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டுள்ளார். உடனே அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
பின்னர் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தண்டல் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (23), தினேஷ் (21), விமல் (19) ஆகிய வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர்களின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அந்தப் பெண் குளிப்பது வீடியோவில் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






