என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து மூதாட்டி சாவு
- பாம்பு கடித்து மூதாட்டி இறந்தார்
- இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் காலனி தெருவை சேர்ந்த அழகுமுத்து என்பவரின் மனைவி பெரியம்மாள்(வயது 60). இவர் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது. பெரியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெரியம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






