என் மலர்
அரியலூர்
- லாரி மோதி ஆட்டோ டிரைவர் பல
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சூர்யா(25).ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று இரவு காட்டுமன்னார்கோவிலில் உள்ள மாமியார் வீட்டிற்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை கச்சிபெருமாள் கிராமத்தை சூர்யா டூவீலரில் கடந்த போது எதிரே வந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக டூவீலர் மீது மோதியது. இதில் சூர்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு வந்த உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் எஸ் ஐ திருவேங்கடம் இறந்த சூரிய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் இறந்து போன சூரியாவுக்கு ராஜலட்சுமி(24) என்ற மனைவி 7 மாத கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய வாலிபர் மாயமானார்
- தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த பிரித்விராஜ் மகன் ஜனா(21) இவர் அரியலூர் அரசு கலை கல்லூரியில் பி ஏ தமிழ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஜனா படிப்பை தொடராமல் பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் தங்கிருந்து வந்தார். கடந்த 8ம் தேதி ஜனா வீட்டில் இருந்தவர்களிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் ஜனா கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து ஜனா தந்தை பிரித்விராஜ் உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்கு பதிந்து மாயமான ஜனாவை தேடி வருகிறார்.
- ஜெயங்கொண்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
- தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ தடுப்பு போலி ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது. மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. தற்செயலாக வீடுகளில் தீவிபத்து ஏற்படும் அப்போது எண்ணெயினால் ஏற்படும் தீயை எவ்வாறு அனைப்பது. சமையல் எரிவாயுவினால் ஏற்படும் எரிவாயு கசிவு அதனால் ஏற்படும் தீ இவைகளை எவ்வாறு கையாள்வது தீயை கட்டுப்படுத்தி அணைப்பது, தீ ஏற்பட்ட வீடுகளில் இருந்து மக்களை எவ்வாறு வீட்டிலிருந்து வெளியே கொண்டு வருவது போன்றவைகளைப் பற்றி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செயல்முறைகள் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி காண்பித்தனர். இந்த போலி ஒத்திகை நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் வீரர்கள் செய்து காண்பித்தனர்.
- பாப்பாங்குளம் கிராமத்தில்சேற்றுக் குழியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது
- தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் பசுமை நகரில் வசிக்கும் கண்ணன் ரேவதி என்பவர் அவருடைய பசு மாடு அருகில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட தண்ணீர் உள்ள பில்லர் குழியில் தவறி விழுந்தது. உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமாவளவன் செந்தில்குமார் மணிகண்டன் ராஜா பார்த்திபன் ரவிச்சந்திரன் மணிவண்ணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து பில்லர் குழியில் இருந்து பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். அந்த பகுதி மக்கள் தீயணைப்பு மற்றும் பணித்துறை யினருக்கு நன்றி தெரிவித்தனர்.
- ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.41 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
- அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 622-க்கு விலை போனது.
அரியலூர் :
பெரம்பலூர் விற்பனைக்குழுவிற்குட்பட்ட அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனைக்கூடத்தில் பருத்தி கொள்முதலுக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அரியலூர் மாவட்டமின்றி, பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், சேலம், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் நன்கு உலர வைத்து கொண்டு வந்திருந்த பருத்தியை நல்ல விலை கோரி கொள்முதல் செய்தனர்.
இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 622-க்கு விலை போனது. குறைந்த பட்சமாக பருத்தி குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 889-க்கும், சராசரி விலையாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 509-க்கும் விலை போனது. மறைமுக ஏலத்தில் மொத்தம் 648.46 குவிண்டால் பருத்தி 280 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. மறைமுக ஏலம் மூலம் ரூ.41 லட்சத்து 13 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை செய்து கொடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு, வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் ஜெயங்கொண்டம் வேளாண்மை விற்பனை கூடத்தில் பருத்திக்கான மறைமுக ஏலம் நடைபெறும். அதனால் விவசாயிகள் அவசரப்படாமல் தங்களின் பருத்தியை நன்கு வெடிக்க வைத்து எடுக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி பருத்தியை நன்கு உலர வைத்து வருகிற புதன்கிழமை மாலை 6 மணிக்குள் விற்பனைக்கு எடுத்து வர வேண்டும் என்று விற்பனை கூட அதிகாரிகள் விவசாயிகளை கேட்டு கொண்டுள்ளனர்.
- ஆண்டிமடம் பகுதியில் புலிகள் சுற்றி திரிந்தனர்
- பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்து, பெரிய ஆத்துகுறிச்சி கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே விஸ்வநாதன் மகன் பாலகிருஷ்ணன் என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது விநோத சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அந்த இடத்தில் இரண்டு புலிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். நடுங்கிய அவர் அந்த இடத்தில் இருந்து தனது மாடுகளை வேக வேகமாக ஒட்டிக் கொண்டு வெளியில் வந்து விட்டார்.
புலிகள் இரண்டும் அருகில் உள்ள கரும்பு வயல் வெளியில் சென்றுள்ளதையும் அவர் கண்டுள்ளார். இது குறித்து ஊர் முக்கியஸ்தர்களிடம் அவர் தெரிவித்ததை தொடர்ந்து, அந்த பகுதி ஊர் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் புலி நடமாடுவது குறித்து அறிவிக்கப்பட்டது. மேலும் போலீஸ் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினரும், போலீசாரும் கால் தடத்தை வைத்து ஆய்வு மேற்கொண்டு, புலி எந்த பக்கம் போய் இருக்கும் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். புலிகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கை நடைபெற்று கொண்டிருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
- ரேஷன் கடை விற்பனையாளரை மிரட்டியவர் கைது செய்யபட்டார்
- போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள காட்டகரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகள் துர்கா தேவி (வயது 25). இவர் மீன்சுருட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் கொல்லாபுரம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த இளையராஜா (40) என்பவர் ஆதார் இல்லாத நபரின் ரேஷன் கார்டுக்கு பொருட்களை கேட்டு துர்கா தேவியை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த கைரேகை எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மேலும் அவர் துர்கா தேவியை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து துர்கா தேவி அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்தவர் பலியானார்
- இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து சூரிய மணல் சாலையில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சூசையப்பர் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் வில்சன் ராஜ் (வயது 35) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து சூசையப்பர் பட்டினம் சென்று கொண்டிருந்தபோது நடந்து சென்றவர் மீது எதிர்பாராத விதமாக மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வில்சன் ராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நடந்து சென்றவர் பலத்த காயத்துடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இதையடுத்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் இறந்த வில்சன் ராஜ் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி படுகாயமடைந்தார்
- புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் கா.அம்பாபூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையன். இவரது மகன் செல்வராஜ் (வயது 48). இவர் விளாங்குடி-ஒரத்தூர் சாலையில் உள்ள நெல் குடோனில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் ஒரு லாரியில் நெல் மூட்டைகளை ஏற்றி விட்டு அடுத்த லாரியில் நெல் மூட்டையை ஏற்றுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த லாரியில் சரியாக அடுக்கப்படாமல் இருந்த நெல் மூட்டைகள் சரிந்து செல்வராஜ் மீது விழுந்தது. இதில் செல்வராஜ் படுகாயமடைந்தார். பின்னர் இவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து செல்வராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இது குறித்து செல்வராஜ் கயர்லாபாத் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- அதிக தூக்க மாத்திரைகளை தின்றவர் இறந்தார்.
- இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், திருமானூர் திடீர் குப்பம் பகுதிைய சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது 21). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதிக தூக்க மாத்திரைகளை தின்ற அவர், மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 512 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
- 512 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே4 லட்சத்து 11 ஆயிரத்து 910-க்கு தீர்வு காணப்பட்டது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஜெயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி நடந்த இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை அரியலூரில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவின்படி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கர்ணன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மற்றும் நீதித்துறை நடுவர் அறிவு ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர். மேலும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மனோகரன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் லதா, கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேசன் மற்றும் நீதித்துறை நடுவர் ராஜசேகரன் மற்றும் வழக்கறிஞர் வேல்முருகன் ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர்.
செந்துறையில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் ஆக்னேஸ் ஜெபகிருபா மற்றும் பாலு ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர். இதில் 1,238 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதில், மொத்தம் 512 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே4 லட்சத்து 11 ஆயிரத்து 910-க்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான அழகேசன் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அலுவலர்கள் செய்திருந்தனர். அரசு வக்கீல்கள், போலீசார், அரசு அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- நடுவலூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.
அரியலூர் :
ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்யராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- நடுவலூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், கோட்டியால், சவரியார்பட்டி, அழிசுக்குடி, அணிக்குறிச்சி, சுந்தரேசபுரம், கொலையனூர், கோரைகுழி, காசான்கோட்டை, உல்லியகுடி, காரைக்காட்டான்குறிச்சி, சாத்தாம்பாடி, ஸ்ரீபுரந்தான் (மேற்கு பகுதி), அறங்கோட்டை, கோவிந்தபுத்தூர், முட்டுவாஞ்சேரி, பூவந்திக்கொல்லை, கார்குடி, பாளையங்கரை, நடுவலூர், புதுபாளையம், புளியங்குழி, விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், சிலுப்பனூர், சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, வாழைக்குழி, பெரியதிருக்கோணம், உடையவர்தீயனூர், செங்குழி, நாகமங்கலம், அம்பலவர்கட்டளை மற்றும் துணை மின் நிலையத்திற்கு அருகில் உள்ள கிராம பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






