என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்தவர் பலி
- ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்தவர் பலியானார்
- இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து சூரிய மணல் சாலையில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சூசையப்பர் பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் வில்சன் ராஜ் (வயது 35) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து சூசையப்பர் பட்டினம் சென்று கொண்டிருந்தபோது நடந்து சென்றவர் மீது எதிர்பாராத விதமாக மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வில்சன் ராஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நடந்து சென்றவர் பலத்த காயத்துடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இதையடுத்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் இறந்த வில்சன் ராஜ் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






