என் மலர்
அரியலூர்
ஆண்டிமடம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராம மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபாபதி (வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் ராங்கியம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் இறந்து கிடந்துள்ளார்.
அவ்வழியே சென்றவர்கள் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் விரைந்து வந்து சபாபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சபாபதி மீது மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது அருந்த பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததால் கை, கால்களை கட்டி காதுகளில் விஷம் ஊற்றி மாமியார்- மகனுடன் சேர்ந்து கணவரை ஆசிரியை கொலை செய்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளியை சேர்ந்தவர் சேகர் என்கிற ராஜசேகர்(வயது 47). டிரைவரான இவருக்கு திருமணமாகி சுகுணா (37) என்ற மனைவியும், ரவிவர்மன் (19), ராகேஷ்வர்மன் என்ற 2 மகன்கள் உள்ளனர். மனைவி சுகுணா பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரவிவர்மன் ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். ராகேஷ்வர்மன் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
ராஜசேகரின் தந்தை முருகேசன் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இறந்துவிட்டார். ராஜசேகரின் தாய் செல்வி (65) கணவர் முருகேசனுக்கு வரும் ஓய்வூதியத்தை கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்.
ராஜசேகர் தினமும் மது குடிப்பதற்காக தாய் மற்றும் மனைவியிடம் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சில நேரங்களில் வீட்டிலுள்ள பொருட்களை எடுத்து சென்று விற்பனை செய்து குடித்து வந்து ஊர் பொதுமக்களிடம் தகராறு செய்தும் வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் தாமாகவே வீட்டினுள் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வியும், சுகுணாவும் ரவிவர்மனிடம் கூறி அழுதுள்ளனர். இதனால் மூவரும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு மூவரும் சேர்ந்து ராஜசேகரை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) அவரது வாய் மற்றும் காதுகளில் ஊற்றி கொலை செய்தனர். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜசேகரை அவரது மகன் ரவிவர்மன் கை, கால்களை கட்டியதாகவும், மனைவி சுகுணா வாயிலும், காதிலும் பூச்சி மருந்தை (விஷம்) ஊற்றியதாகவும், மீதமுள்ள மருந்தை தாய் செல்வி வாங்கி வாய் மற்றும் காதுகளில் ஊற்றி கொலை செய்ததது தெரியவந்தது. இதையடுத்து செல்வி, சுகுணா, ரவிவர்மன் ஆகிய 3 மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர்.

50 பேரப்பிள்ளைகள் இருந்தும் வறுமையில் வாடிய 105 வயது மூதாட்டிக்கு மளிகை பொருட்கள் தொகுப்பினை போலீசார் நிவாரணமாக வழங்கினர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள்(வயது 105). இவரது கணவர் தங்கவேல் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். காசியம்மாளுக்கு மொத்தம் 50 பேரப்பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் யாரும் இவரை கவனிப்பதில்லை என கூறப்படுகிறது.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோது மிகவும் வறுமையில் வாடியுள்ளார். இதனை அறிந்த ஆண்டிமடம் போலீசார் மற்றும் வணிகர்கள் நல சங்கம் சார்பாக வறுமையில் வாடிவந்த மூதாட்டிக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பினை கொரோனா நிவாரண உதவியாக ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது இத்ரீஸ் வழங்கினார். அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார், வணிகர்கள் நலசங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஆண்டிமடம் அருகே கொரோனா தடுப்பு சிறப்பு தனிமைப்படுத்தப்படும் முகாமை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த சூனாபுரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு தனிமைப்படுத்தப்படும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிமடம் போலீசார் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இந்த மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதில் 5 பெண்கள் உள்பட 37 பேரும், அருகே உள்ள ஆண்டிமடம் அரசு பள்ளியில் 5 பெண்கள் உள்பட 17 பேரும் தங்க வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளிவந்தன. அதில் சூரக்குழி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும், கோவில்வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது என்று கூறப்படுகிறது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகாம் எதிரே உள்ள தெருவை சேர்ந்த பொதுமக்கள் தடுப்பு முகாமில் உள்ளவர்கள் முகாமை விட்டு வெளியே வந்து திரும்ப முகாமிற்கு செல்லும் நிலை உள்ளதாகவும்.
முகாமில் உள்ளவர்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் ஆகவே சிறப்பு தனிமைப்படுத்தப்படும் முகாமை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி நேற்று முன்தினம் இரவு ஆண்டிமடம்- ஸ்ரீமுஷ்ணம் சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம் எதிரே மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முஹம்மது இத்ரீஸ், மலைச்சாமி, சந்திரகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் தாசில்தார் தேன்மொழி பொதுமக்களிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
விவசாயிகளுக்கு எதிர் பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் அரசு சார்பில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர் மற்றும் இதர காரீப் பருவ பயிர்களை பிரதமரின் திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்படுத்துகிறது. அரியலூர் மாவட்டத்தில் நெல் 74 வருவாய் கிராமங்களிலும், மக்காச்சோளம் 73 வருவாய் கிராமங்களிலும், துவரை 5 வருவாய் கிராமங்களிலும், உளுந்து 82 வருவாய் கிராமங்களிலும், கடலை 140 வருவாய் கிராமங்களிலும், வாழை 8 வருவாய் கிராமங்களிலும், வெங்காயம் 9 வருவாய் கிராமங்களிலும், மரவள்ளிக்கிழங்கு 9 வருவாய் கிராமங்களிலும், மஞ்சள் ஒரு வருவாய் கிராமத்திலும், சோளம் 7 குறுவட்டங்களிலும், கம்பு 4 குறுவட்டங்களிலும் மற்றும் எள் 5 குறுவட்டங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காரீப் பருவத்தில் குறுவை நெல் பயிரிடும் விவசாயிகள் மற்றும் இதர காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம், துவரை, உளுந்து, கடலை, சோளம், கம்பு, எள், வெங்காயம் மற்றும் மஞ்சள் பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அடுத்த மாதம் ஜூலை 31-ந் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையில் வேளாண் பயிர்களுக்கு 2 சதவீதம் மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. அந்த வகையில் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.655, இதர காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளத்திற்கு ரூ.380, துவரைக்கு ரூ.256, உளுந்துக்கு ரூ.256, கடலைக்கு ரூ.421, சோளத்திற்கு ரூ.217, கம்புக்கு ரூ.210 மற்றும் எள் பயிருக்கு ரூ.189-ம் காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகையில் 5 சதவீதம் மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. அந்த வகையில் வாழைக்கு ரூ.3 ஆயிரத்து 65, வெங்காயத்திற்கு ரூ.ஆயிரத்து 710, மரவள்ளிக்கிழங்கிற்கு ரூ.ஆயிரத்து 388 மற்றும் மஞ்சள் பயிருக்கு ரூ.3 ஆயிரத்து 175-ம் ஒரு ஏக்கருக்கு காப்பீடுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
காரீப் பருவம் 2020-ம் ஆண்டில் கடன் பெறும் விவசாயிகள் விருப்பக்கடிதம் அளித்து விருப்பத்தின் பெயரில் கடன் பெறும் வங்கியில் காப்பீடு செய்துகொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ முன்மொழிவு படிவம் அளித்து பயிருக்கான பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்துகொள்ளலாம்.
இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட திட்டங்கள் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

கல்லணையில் இருந்து இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அணைக்கரை கீழணைக்கு வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்சுருட்டி:
இந்த தண்ணீர் கடந்த 16-ந் தேதி கல்லணையை வந்தடைந்தது. அதை தொடர்ந்து கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடத்திலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை கீழணைக்கு நேற்று காலை வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகையில், அணைக்கரைக்கு மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது. இந்த தண்ணீரானது வடவாறு வழியாக சென்னை குடிநீருக்கும், விவசாயத்திற்கும், வீராணம் ஏரிக்கும் வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது என்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை. தாமதமாக கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் கடந்த 306 நாட்களாக 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து வைத்தார்.
இந்த தண்ணீர் கடந்த 16-ந் தேதி கல்லணையை வந்தடைந்தது. அதை தொடர்ந்து கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடத்திலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை கீழணைக்கு நேற்று காலை வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகையில், அணைக்கரைக்கு மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது. இந்த தண்ணீரானது வடவாறு வழியாக சென்னை குடிநீருக்கும், விவசாயத்திற்கும், வீராணம் ஏரிக்கும் வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது என்றனர்.
மணல் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தில் முன்பு இயங்கி வந்த மணல் இருப்பு வைப்பு இடத்தில் இருந்து மணல் கடத்தப்படுவதாக கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 2 டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் சிலர் மணல் கடத்திக்கொண்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை கைப்பற்றிய போலீசார் மணல் கடத்திய மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகன் உதயகுமார்(வயது 19), திருவையாறை சேர்ந்த சவுந்தர்ராஜன்(36) மற்றும் கள்ளூர் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார்(33) ஆகிய 3 பேரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று வி.களத்தூர் கல்லாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த வி.களத்தூரை சேர்ந்த ரமேஷ்(31), நடராஜ்(25), ராமையா(50), முத்துசாமி(53) ஆகிய 4 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மணல் அள்ள பயன்படுத்திய மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரச மரத்துடன் இணைந்த பனைமரத்தை வேருடன் பிடுங்கி சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நட்ட இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் 20 ஆண்டு கால அரச மரத்துடன் இணைந்த பனை மரம் இருந்தது. அவர் அந்த இடத்தில் வீடு கட்ட இருந்ததால் மரங்களை காப்பாற்றும் நோக்கத்துடன் சோலைவனத்தை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் தொடர்பு கொண்டு மரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நட்டுவைக்க அனுமதி பெற்றனர்.
அதன்படி நக்கம்பாடி ஊர் தலைவரின் உதவியோடு பொக்லைன் எந்திரத்தின் மூலம் மரங்களை வேரோடு பிடுங்கி அதிலுள்ள கிளைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு பொக்லைன் எந்திரம் மூலம் வாகனத்தில் ஏற்றி சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு அரியலூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மரத்தை நட்டனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை பாராட்டினர்.
பின்பு இதை பற்றி சோலைவனம் இளைஞர்கள் தெரிவிக்கையில், சாலை விரிவாக்கத்துக்காகவும், புதிய திட்டங்களுக்காகவும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து நிற்கும் மரங்கள் கொத்து கொத்தாக சர்வ சாதாரணமாக வேராடு வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அரை மணி நேரத்தில் அரை நூற்றாண்டு கால மரத்தை பொக்லைன் எந்திரங்கள் மூலம் வீழ்த்துவதை கண்டு இயற்கை ஆர்வலர்கள் வருத்தப்படுகின்றனர். அதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இந்த ‘சோலைவனம்’ இளைஞர்கள் ஒன்றிணைந்து குழுவை அமைத்து பெரிய மரங்களை வேரோடு அகற்றி, அவற்றை வேறு இடத்தில் நட்டுவருவதாக கூறினர்.
ஒரு கன்று மரமாகி நிற்க ஆண்டுக்கணக்கில் ஆகும்.
அதே நேரம் வெட்டப்படவிருக்கும் வளர்ந்த மரத்தின் உயிரை பறிபோகாமல் காத்து, அதை அப்படியே இடம்மாற்றி நட்டுவைத்து நன்கு பராமரித்து வளர்த்தெடுப்பது இங்கு புது முயற்சிதான். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அரியலூர் மாவட்டத்தில் சோலைவனம் இளைஞர்கள் இதுபோன்று பல்வேறு பகுதிகளில் கன்றுகள் நட்டு பராமரித்து வருவதை வெகுவாக பாராட்டியுள்ளார்.

கீழக்குளத்தூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்குளத்தூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்கள் கிராமத்திற்கு கொண்டு வரும் ராட்சத குடிநீர் குழாயில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோளாறு ஏற்பட்டு குடிநீர் வராமல் இருந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களாகவே கீழக்குளத்தூர் கிராம மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் கிராமத்தில் தற்போது குடிநீர் வராததால் அருகே உள்ள வடுகபாளையம் கிராமம் வரை நடந்தும், இருசக்கர வாகனத்தில் சென்றும் குடிநீர் கொண்டு வரும் நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் நாள்தோறும் பக்கத்து கிராமத்திற்கு சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை தொடர்ந்து கொண்டே இருப்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே காலிக்குடங்களை இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு வடுகபாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து கூடிய விரைவில் குடிநீர் வர ஏற்பாடு செய்யப்படும் என போலீசார் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீன்சுருட்டி அருகே உள்ள வங்குடி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை திறக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வங்குடி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பொதுமக்கள் அத்தியாவசிய மளிகை பொருட்கள் வாங்கி பயன் பெறுவதற்காக நரசிங்கபாளையம் கிராமத்தில் முழு நேர ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. வங்குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அங்கு சென்று தான் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில் நரசிங்கபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வந்த முழு நேர ரேஷன் கடையை, தற்போது வங்குடி கிராமத்தில் பகுதி நேர கடையாக மாற்றப்பட்டு அங்கு உள்ள சேவை மையத்தில் கடந்த ஒரு மாதமாக செயல்பட்டு வந்தது. தற்போது இந்த மாதம் அந்த பகுதி நேர ரேஷன் கடை செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது தொடர்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினர் வங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் இலக்கியதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் திருஞானம் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாரதி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வங்குடி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும். நரசிங்க பாளையத்திலும் ரேஷன் கடையை திறக்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு இல்லாமல் கடன் வழங்க நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் முககவசம் அணியாமல் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி ரூ.50 அபராதம் விதித்து அவர்களுக்கு இலவச முககவசம் வழங்கி கொரோனா வைரஸ் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
உடையார்பாளையம்:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின் பேரில், உடையார்பாளையம் ஜெ.தத்தனூர் ஊராட்சியில் சென்னையில் இருந்து வரும் நபர்களை தனிமைபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி ரூ.50 அபராதம் விதித்து அவர்களுக்கு இலவச முக கவசம் வழங்கி கொரோனா வைரஸ் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரெத்தினசாமி உள்பட பலர் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம் அருகே தந்தை திட்டியதால் எலி மருந்தை தின்று மாணவர் தற்கொலை செய்து கொண்டான்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன். இவருடைய மகன் பிரபாகரன்(வயது 18). இவர் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பிரபாகரனிடம், ‘எந்த நேரம் பார்த்தாலும் செல்போனை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டே இருக்கிறாய்‘ என்று கூறி, அவரது தந்தை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரபாகரன் நேற்று இலையூர் பேங்க் தெருவில் உள்ள ஒரு மளிகைக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட எலி மருந்தை(விஷம்) வாங்கி தின்றுள்ளார். இதையடுத்து அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட எலி மருந்தை விற்ற மளிகை கடைக்கு கிராம நிர்வாக அலுவலர் ராஜா ‘சீல்‘ வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.