என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    X
    முககவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

    அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் முககவசம் அணியாமல் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி ரூ.50 அபராதம் விதித்து அவர்களுக்கு இலவச முககவசம் வழங்கி கொரோனா வைரஸ் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
    உடையார்பாளையம்:

    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின் பேரில், உடையார்பாளையம் ஜெ.தத்தனூர் ஊராட்சியில் சென்னையில் இருந்து வரும் நபர்களை தனிமைபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

    மேலும் அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் முக கவசம் அணியாமல் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி ரூ.50 அபராதம் விதித்து அவர்களுக்கு இலவச முக கவசம் வழங்கி கொரோனா வைரஸ் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரெத்தினசாமி உள்பட பலர் ஈடுபட்டனர். 
    Next Story
    ×