என் மலர்
அரியலூர்
தா.பழூர் அருகே வியாபாரி வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கோடங்குடி கிராமத்தில் எலக்ட்ரிக்கல் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். ராஜ்குமாருக்கு உடல் நிலை சரியில்லாததால், தனது வீட்டை பூட்டிவிட்டு கடந்த 10 நாட்களாக அதே கிராமத்தில் உள்ள அவரது தந்தை ராமதாஸ் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் தங்கியிருந்தார்.
நேற்று காலை ராஜ்குமாரின் மனைவி ராஜேஸ்வரி, ஒரு சில பொருட்கள் எடுப்பதற்காக தனது வீட்டுக்கு சென்றார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, தனது மாமனார் ராமதாஸ் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து அழைத்துள்ளார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அரியலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் மீனா, சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. விரல்ரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, முக்கிய தடங்களை சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருமானூர் அருகே லாரி மோதி தாத்தா, பேத்தி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50). மாற்றுத்திறனாளியான இவர் மோட்டார் சைக்கிளில் தனது மகள் காயத்ரி (24), பேத்திகள் குணஸ்ரீ (5), சுபஸ்ரீ (3) ஆகியோருடன் திருமானூரில் இருந்து கல்லூருக்கு சென்றார்.
திருமானூர் பழைய போலீஸ் நிலையம் அருகில் உள்ள திருப்பத்தில் திரும்பும்போது அப்பகுதியில் லோடு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை திருப்பியபோது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சேகர், குணஸ்ரீ பலத்த காயமடைந்தனர். இதையடுத்து 4 பேரையும் பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சேகர் இறந்தார்.
குணஸ்ரீ சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை குணஸ்ரீயும் பரிதாபமாக இறந்தாள்.
இந்த விபத்து தொடர்பாக திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி லாரி டிரைவர் திருவாரூர் மாவட்டம், வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த சுலைமான் (42) என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்திற்கு காரணமான லோடு ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் போடங்குடி பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் ராஜ்குமாருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அருகில் வசித்து வரும் அவரது தந்தை ராமதாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அங்கு கடந்த 10 நாட்களாக இருந்து வரும் நிலையில், நேற்று ராஜ்குமாரின் மனைவி அவர் வசித்து வந்த வீட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததுடன், உள்ளே பல்வேறு பொருட்கள் சிதறிக் கிடந்தது.
மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ராஜ்குமார் ஹார்டுவேர் பொருட்கள் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.3.40 லட்சம் ஆகியவை கொள்ளை போயி ருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும்.
இது குறித்து தா.பழுர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
ராஜ்குமார் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் முககவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றப்படாத கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் அரியலூர் தாசில்தார் சந்திரசேகரன் அரியலூர் நகரில் மார்க்கெட் தெரு, எம்.பி. கோவில் தெரு, வெள்ளாளத் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கடைகளில் முககவசம் அணியாமல் இருந்த 9 கடை உரிமையாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளி பின்பற்றப்படாததால் 6 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.3 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் முறையாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், கடை உரிமையாளர்கள் மற்றும் கடையில் வேலை பார்ப்பவர்கள், கடைக்கு வருபவர்கள் என அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இதுபோன்று திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும், அவ்வாறு நடைபெற்றால் மட்டுமே விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
அரியலூர் அருகே, டாக்டருக்கு இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விஷால் நாராயண் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். அந்த வங்கியில் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 72) கணக்கு வைத்து வரவு-செலவு செய்து வருகிறார். இவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இந்நிலையில் பாலசுப்பிரமணியன் தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு, கடன் பெறுவதற்காக அந்த வங்கிக்கு சென்றார். அங்கு அவர் கிளை மேலாளர் விஷால் நாராயண் காம்ளேவை சந்தித்து, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காட்டி கடன் வழங்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது கிளை மேலாளர் இந்தியில் பேசியதோடு, பாலசுப்பிரமணியனுக்கு இந்தி தெரியுமா? என்று ஆங்கிலத்தில் கேட்டதாக தெரிகிறது. அதற்கு பாலசுப்பிரமணியன் தனக்கு இந்தி தெரியாது என கூறி உள்ளார். உடனே வங்கி மேலாளர் தனக்கு தமிழ் தெரியாது என்று கூறி கடன் வழங்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான டாக்டர் பாலசுப்பிரமணியன், மான நஷ்டஈடு கேட்டு வங்கி கிளை மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயண் காம்ளேவை திருச்சிக்கு இடமாற்றம் செய்து திருச்சி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே ஜெயங்கொண்டத்தில் டாக்டர் பாலசுப்பிரமணியன் நடத்தி வரும் கிளினிக்கிற்கு, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தன்னை ஒரு முதியவர் என்றும் பாராமல், அமரவும் சொல்லாமல் அலட்சியமாக வங்கி கிளை மேலாளர் செயல்பட்டார். அந்த பகுதியில் படிக்காத விவசாயிகள் உள்ளிட்ட பலர் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். என்னை போன்று அவர்களை கிளை மேலாளர் அலட்சியப்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். அவரை பணியிட மாற்றம் செய்ததில் எனக்கு உடன்பாடு கிடையாது, என்று தெரிவித்துள்ளார். வங்கி மேலாளர் மீது மேலும் சில வாடிக்கையாளர்களும் புகார் தெரிவித்து உள்ளனர்.

ஜெயங்கொண்டம் கடைவீதியில் முககவசம் அணியாமல் வந்த 32 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி அறிவுறுத்தலின்பேரில் சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பொதுமக்கள் முககவசம் அணிந்து வெளியில் வருகின்றனரா? என்று ஜெயங்கொண்டம் கடைவீதி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைவீதிகளில் முககவசம் அணியாமல் வந்த 32 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.6,400 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது நகராட்சி பணியாளர்கள் பாண்டியன், சம்பத் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
ஜெயங்கொண்டத்தில் ஆவேரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, சாலையோர பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு சென்னை, மதுரை, சேலம், திருப்பூர், திருச்சி, பழனி, கும்பகோணம், விருத்தாச்சலம், மயிலாடுதுறை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் பஸ் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
சில நேரங்களில் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் தாமதமாக வருவதால் தாய்மார்கள், குழந்தைகளுடன் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் சிரமப்படுகின்றனர். குழந்தைகளும் விளையாட முடியாமல் பயணிகளின் நெருக்கடியில் அழுது கொண்டிருக்கின்றன. முதியவர்கள் காற்றோட்டமாக அமர வழியின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பஸ் நிலையம் அருகே மக்களின் நீராதாரமாக விளங்கும் ஆவேரி உள்ளது. நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் வெட்டப்பட்டுள்ள ஆவேரியில் தற்போதும் சில கிணறுகளை காண முடிகிறது. ஏரியில் உள்ள கிணறுகளை மேலக்குடியிருப்பு, கீழக்குடியிருப்பு, கரடிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மக்கள் குடிநீருக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்படுத்தி வந்தனர். தற்போதும் ஒரு சிலர் அந்த கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கும் ஏரி தண்ணீர் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி என ஏற்படுத்தப்பட்ட பல மாற்றங்களால் நகராட்சி பகுதிகளில் ஒன்றியம் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் சாக்கடை கலக்கிறது. ஏரியை சுற்றி அசுத்தம் செய்யப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே நகரை சுற்றியுள்ள ஏரிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, தூய்மைப்படுத்தி ஜெயங்கொண்டம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
அதேபோல் ஆவேரியை தூர்வாரி, கரையை பலப்படுத்தி சுற்றி கம்பிவேலி அமைத்து, அப்பகுதியில் இயற்கை உபாதைகள் கழிக்க தடை விதித்து, கரையை சுற்றிலும் மரக்கன்றுகள் நட வேண்டும். மேலும் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பஸ்கள் வரும் வரை காத்திருந்து இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு சாலையோர பூங்கா அமைக்க வேண்டும் என்று பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுதநகரில் இருந்து பெரியவளையம் செல்லும் வழியில் பாப்பாங்குளம் செல்லும் பிரிவு ரோடு அருகில் (வாட்டர் டேங்க் அருகில்) ரோட்டில் 2 இடங்களில் பெரிய பள்ளங்கள் உள்ளன. கடந்த 1 ஆண்டுகளாக இது சரி செய்யப்படாமல் இருந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, நடந்து செல்பவர்களும் அதில் விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்ற வருகிறது.
மேலும் இரவு நேரங்களில் ஆடு, மாடுகள் செல்லும் போது தடுமாறி பள்ளத்தில் விழுகின்றன. எனவே விபத்து ஏற்படாத வண்ணம் பள்ளங்களை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டத்தில் வீட்டு வரி ரசீது கேட்டு வந்தவர்கள் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டிய வீடுகளுக்கு வீட்டு வரி ரசீது மற்றும் காலி மனைகளுக்கு செலுத்தப்பட்ட வரிக்கான ரசீது, புதிதாக வீடு கட்ட வரைபட அனுமதி போன்றவற்றுக்காக சம்பந்தப்பட்டவர்கள் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் மேலக் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த கணேசன், தியாக ராஜன், ஜெயங்கொண்டம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த ராமர், செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், யோக ராஜ், கவிதா, செல்வம் ஆகியோர் வீட்டு வரி ரசீது பெற சில மாதங்களுக்கு முன்பு நகராட்சியில் மனு அளித்திருந்தனர். இதையடுத்து அவர்கள் ரசீது பெற நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு ரசீது வழங்கப்படாததால் ஆத்திரமடைந்தனர்.
அப்போது வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லை. இந்நிலையில் ஆணையர்(பொறுப்பு) அறச்செல்வி காரில் வெளியே செல்வதற்காக வந்தார். அவர் ஏறியபின்னர், கார் செல்ல தொடங்கியபோது, அவர்கள் தங்களுக்கு ரசீது வழங்கும்படி அவரிடம் கேட்டனர். மேலும் தங்களுக்கு ரசீது வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறி நகராட்சி அலுவலக வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதில் அளிக்காத நிலையில் ஆணையர் காரில் இருந்து இறங்கி நடந்து வெளியில் சென்றுவிட்டார்.
இதையடுத்து அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து நுகர்வோர்கள் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே கும்பகோணம் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கூடுதல் பொறுப்பாக ஜெயங்கொண்டத்தையும் கவனித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக அவர் பெரும்பாலும் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு வருவதில்லை. மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகமான மனுக்கள் தேங்கியுள்ளன. உரிய பதில் அளிக்க அதிகாரிகள் இல்லாததால் நகராட்சிக்கு பல்வேறு பணிகள் காரணமாக வரும் நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரிகளிடையே உள்ள கருத்து மோதலும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஒருவர் இறந்து ஆறு மாதங்களாகியும், அரசு அறிவித்த இறுதிச்சடங்கு செலவு தொகையான ரூ.2,500 அவருடைய குடும்பத்திற்கு தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் பல கோரிக்கைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்களை காணவில்லை என்று அதிகாரி தரப்பில் கூறப்படுவ தாகவும், மீண்டும் மனு கொடுக்குமாறு கூறுவதாகவும் தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.200 வீதம் மொத்தம் 11 நபருக்கு ரூ.2,200 அபராதம் விதிக்கப்பட்டது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சியில் இருந்து தூத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக திடீர் ஆய்வு நடைபெற்றது. இதில் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.200 வீதம் மொத்தம் 11 நபருக்கு ரூ.2,200 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பலர் உடனிருந்தனர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் 4 ரோடு பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கின்றனரா? முககவசம் அணிந்து வருகின்றனரா? என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜெயங்கொண்டம் கடைவீதியில் மோட்டார் சைக்கிள்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து விதிமுறைகளை மீறியதாக கூறி 7 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.1400 அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சமூக இடைவெளி கடைபிடிக்கவும், முககவசம் அணியவும், கைகளைக் கிருமி நாசினி கொண்டு கழுவவும் அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3, 343 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 27 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், திருமானூர், செந்துறை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா 2 பேருக்கும், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும் என மொத்தம் 27 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3, 343 ஆக உயர்ந்துள்ளது.
2,470 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 37 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 344 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் நடுத்தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் புருஷோத்தமன்(வயது 22). பொறியியல் பட்டய படிப்பு படித்துள்ள இவர், நேற்று மதியம் வானதிரையன்பட்டினம் சாலையில் உள்ள தனது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தனது வீட்டின் அருகே வந்தபோது சாலையில் இருந்த மண்ணில் சறுக்கி மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில், அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தமனை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தா.பழூர் போலீசில் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.