search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    முககவசம் அணியாமல் வந்த 32 பேருக்கு அபராதம்

    ஜெயங்கொண்டம் கடைவீதியில் முககவசம் அணியாமல் வந்த 32 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி அறிவுறுத்தலின்பேரில் சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பொதுமக்கள் முககவசம் அணிந்து வெளியில் வருகின்றனரா? என்று ஜெயங்கொண்டம் கடைவீதி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைவீதிகளில் முககவசம் அணியாமல் வந்த 32 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.6,400 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது நகராட்சி பணியாளர்கள் பாண்டியன், சம்பத் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
    Next Story
    ×