என் மலர்
அரியலூர்
தனது மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. சோதனை நடத்தி வருவதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மகள் செந்தாமரை வீட்டில் ஐ.டி. சோதனை நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரசாரத்தில் அவர் கூறியதாவது:
* மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்.
* ஐடி.ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.
* ரெய்டு போன்ற சலசலப்புக்கு எல்லாம் திமுக அஞ்சாது. அதிமுகவை மிரட்டுவது போல் திமுகவை மிரட்ட முடியாது.
* மிசாவையே பார்த்த நான் ஐ.டி. ரெய்டுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்.
* ஐ.டி. ரெய்டு மூலம் வீட்டுக்குள் திமுகவினரை முடக்கி வைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் இருந்து கொல்லாபுரம் நோக்கி டிராக்டர் வந்தபோது நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியதில் சிறுவன் டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தான்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கொல்லாபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் ரஜினி மகன் சம்பத்குமார் (வயது 20). இவர் தனது புதிய டிராக்டரை ஓட்டிக்கொண்டு வந்த போது, அதே கிராமத்தை சேர்ந்த நவபாலன் மகன் சத்தியபாலன் (வயது 15) என்ற சிறுவன் அதில் வந்ததாக தெரிகிறது.
ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் இருந்து கொல்லாபுரம் நோக்கி டிராக்டர் வந்தபோது நிலைதடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியதில் சத்தியபாலன் டிராக்டர் டிப்பர் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தான். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
இதுகுறித்து சத்தியபாலனின் தாய் ரேகா கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து சம்பத்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 314 பேரும், 148 மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டுப்போட உள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
சட்டமன்ற தேர்தலையொட்டி ஜெயங்கொண்டம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் ஒட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடைபெற உள்ள தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவரவர் வீட்டில் இருந்தபடி தபால் வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 2 நாட்களாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தபால் வாக்கு செலுத்த முன்வந்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 மண்டல அலுவலர்கள் தபால் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 314 பேரும், 148 மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டுப்போட உள்ளனர். இன்று(புதன்கிழமை) மற்றும் நாளை(வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அவர்கள் தபால் வாக்குகள் செலுத்தலாம். இந்த பணியில் 10 மண்டலங்களுக்கு உட்பட்ட தேர்தல் நிலைய அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இன்றும், நாளையும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவரவர் வீட்டிலேயே வாக்களிப்பதற்கு தயாராக இருக்குமாறு ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.
அரியலூர்:
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ‘பானை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த சின்னத்துடன் 6 தொகுதிகளில் வேட்பாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி களம் இறக்கி உள்ளது.
இந்தநிலையில் மற்ற தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ‘பானை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது. இது ஒரு தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதிக்குட்பட்ட குன்னம் தொகுதியிலும் பானை சின்னம் வரையப்பட்டது.
இந்தநிலையில் தற்போது அந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதால், அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக இருப்பாரோ என்று மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
குன்னம் சட்டசபை தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் கணிசமான அளவுக்கு இருக்கின்றன. அவர்களது வாக்குகள் பானை சின்னத்துக்கு விழுந்து விடுமோ என்று தி.மு.க.வினர் இடையேஅச்சம் எழுந்துள்ளது.
அதுபோல அந்த தொகுதியில் போட்டியிடும் மற்றொரு சுயேட்சை வேட்பாளருக்கு ஒளிரும் பேனா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சின்னம் உதயசூரியன் சின்னம் போன்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலும் வாக்குகள் சிதறக்கூடும் என்று தி.மு.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ‘பானை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த சின்னத்துடன் 6 தொகுதிகளில் வேட்பாளர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி களம் இறக்கி உள்ளது.
இந்தநிலையில் மற்ற தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ‘பானை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது. இது ஒரு தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குன்னம் தொகுதியில் தி.மு.க. சார்பில் எஸ்.எஸ்.சிவக்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களில் சுயேட்சையாக ராவணன் என்பவரும் நிற்கிறார். அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தற்போது அந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதால், அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக இருப்பாரோ என்று மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
குன்னம் சட்டசபை தொகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் கணிசமான அளவுக்கு இருக்கின்றன. அவர்களது வாக்குகள் பானை சின்னத்துக்கு விழுந்து விடுமோ என்று தி.மு.க.வினர் இடையேஅச்சம் எழுந்துள்ளது.
அதுபோல அந்த தொகுதியில் போட்டியிடும் மற்றொரு சுயேட்சை வேட்பாளருக்கு ஒளிரும் பேனா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சின்னம் உதயசூரியன் சின்னம் போன்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலும் வாக்குகள் சிதறக்கூடும் என்று தி.மு.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் 315 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 169 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் வரவேண்டியுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று ஒருவர் மட்டும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் 315 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 169 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் வரவேண்டியுள்ளது.
முதல்-அமைச்சரின் தாய் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த ஆ.ராசாவை தி.மு.க.வை விட்டு நீக்காதது ஏன் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அரியலூர்:
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று அரியலூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். இந்த கூட்டணி சமூகநீதி அடிப்படையிலேயே சேர்ந்து இருக்கின்றோம். நம் பக்கம் இருப்பது 70 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விவசாயி தமிழகத்தின் முதல்-அமைச்சராக வந்திருக்கிறார். அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டும்.
தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, தி.மு.க.வின் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய மந்திரி, தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சரை பற்றி கொச்சையாக பேசியுள்ளார். முதல்-அமைச்சரின் தாயைப் பற்றி பேசியுள்ளார். ஒரு பெண்ணைப் பற்றிப் அதுவும் ஒரு தாயைப் பற்றி கொச்சையாக பேசும் நபர், இதை நிச்சயம் மன்னிக்க முடியாது.
அந்த தாயை பற்றி அவ்வளவு கொச்சையாக பச்சையாய் பேசிய ராசாவை அவங்க கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டிக்கக் கூட இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஸ்டாலினுக்கு பெண்களை பற்றியோ, தாயை பற்றியோ எந்த ஒரு மதிப்பும் மரியாதையும் கிடையாது. இதுவே நம்ம கட்சியில யாராவது பேசி இருந்தா இந்நேரம் அடிப்படை உறுப்பினர் மட்டுமில்ல உதைத்து அனுப்பி இருப்போம்.
தாயைப் பற்றி கொச்சையாக பேசுபவன் மனிதனே கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தாய்மார்கள், பெண்கள், இது ஏதோ இந்த தொகுதி பிரசாரம் கிடையாது இது தமிழ்நாட்டுப் பெண்களின் மானப் பிரச்சினை. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த தாய்மார்களும் அத்தனை பெண்களும், தி.மு.க.வை புறக்கணிக்க வேண்டும்.
தி.மு.க. பெண் விரோத கட்சி. பெண்களை அவமதிக்கும் கட்சி தி.மு.க. ஒரு பெண்கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடாது. காரணம் அந்தக் கட்சி அப்படிப்பட்டது. அந்த தலைவர் அப்படிப்பட்டவர். இதுவே நான் கேட்கிறேன், முன்பு சினிமா நடிகர் ராதாரவி தி.மு.க.வில் இருந்தார். அப்போ அவர் நயன்தாராவை பற்றி கொச்சையாக பேசினார்.
உடனடியாக ஸ்டாலின் என்ன செய்தார் என்றால் ராதாரவியை அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். தற்போது முதல்-அமைச்சரின் தாயை பற்றி கொச்சையாக பேசும் ஆ.ராசா மீது இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நயன்தாராவைப் பற்றி தவறாக பேசியபோது கட்சியை விட்டு நீக்கிய நீங்கள் ஏன் ஒரு தாயைப் பற்றி தவறாக பேசிய அந்த ராசாவை ஏன் இன்னும் விட்டு வைத்துள்ளீர்கள்? ஏன் நீங்கள் கட்சியை விட்டு நீக்கவில்லை? இதுதான் என்னுடைய கேள்வி.
கேட்டால், ஸ்டாலின், ராசா பதமாக பேசு ராசா, பார்த்து பத்திரமாக பேசு ராசா, இது தேர்தல் ராசா, அப்படின்னு சொல்லி இருக்காராம். இதை பத்திரிகையில் ஸ்டாலின் வந்து சொல்லிட்டாராம் ராசாவுக்கு. அடப் போங்கய்யா. என்ன சொல்றீங்க இதுதான் நீங்கள் பெண்களை மதிக்கிறதா? நிச்சயமாக சொல்கிறேன் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. ஏனென்றால் தி.மு.க.வின் கூட்டணி அப்படிப்பட்ட கூட்டணி.
ஆனால் இப்போது நடக்கின்ற ஆட்சியில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம், வரலாம். எல்லா பாதுகாப்பும் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அகரம் சீகூர் கிராமத்தில் மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் தடுப்பணையில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தான்.
மங்களமேடு:
அரியலூரை சேர்ந்த கவியரசனின் மகன் ஹரிரோஜன்(வயது 10). இவன் ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது தாய் கனிமொழியுடன், அகரம் சீகூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி மின்னல்கொடி வீட்டிற்கு ஹரிரோஜன் வந்தான்.
நேற்று மதியம் தனது நண்பன், அதே பகுதியை சேர்ந்த பூமாலை மகன் ரித்திக்குடன் (12) அருகில் உள்ள வெள்ளாறு தடுப்பணையில் மீன்பிடிக்க ஹரிரோஜன் சென்றான். அப்போது அங்கு தேங்கியிருந்த நீரில் ஹரிேராஜன் தவறி விழுந்தான்.
இதைக்கண்ட ரித்திக் கூச்சல் போட்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தான். இதையடுத்து அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் ஹரிரோஜனை மீட்டு பார்த்தபோது, அவன் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார், அங்கு விரைந்து வந்து ஹரிரோஜனின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பணையில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி ஸ்ரீபுரந்தான் மெயின்ரோட்டை சேர்ந்த கமலா(வயது 45) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனா். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கமலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 800 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 715 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று யாரும் புதிதாக கொரோனவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே 6 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், அந்த மாணவர்களை அழைத்து விசாரித்தார். அப்போது முககவசம் அணியாமல் வந்தது பற்றியும், தற்போது முககவசம் வாங்க செல்வதாகவும் மாணவர்கள் கூறினார்கள்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க பிளஸ்-1 வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டதால், இந்த பள்ளியில் பிளஸ்-2 மாணவா்களுக்கான வகுப்பு மட்டுமே நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதனை ஆசிரியர்கள் கண்டிப்புடன் கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முககவசம் அணியாமல் பள்ளிக்கு வந்த 5 மாணவர்களை, ஆசிரியர்கள் திருப்பி அனுப்பினர்.
அந்த நேரத்தில் அந்த வழியாக ரோந்து சென்ற அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், அந்த மாணவர்களை அழைத்து விசாரித்தார். அப்போது முககவசம் அணியாமல் வந்தது பற்றியும், தற்போது முககவசம் வாங்க செல்வதாகவும் மாணவர்கள் கூறினார்கள். இதைத்தொடர்ந்து துணை சூப்பிரண்டு தனது காரில் இருந்த ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் முககவசத்தை அவர்களிடம் கொடுத்து பள்ளிக்கு அனுப்பினார்.
மேலும் அவர், ரூ.6 ஆயிரத்துக்கு துவைத்து பயன்படுத்தும் வகையிலான 150 முககவசங்களை கடையில் இருந்து வாங்கிச்சென்று அந்த பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கி, நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். அவருடன் மாணவர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவி இருவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டனர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்காட்டுப்பள்ளி:
அரியலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 68). இவருடைய மனைவி பாஞ்சாலை(65). இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களில் ஒரு மகனுக்கு தண்டுவட பாதிப்பு காரணமாக படுத்த படுக்கையாக இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பாஞ்சாலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் முத்துசாமியும், பாஞ்சாலையும் கடந்த 21-ந் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தஞ்சைக்கு வந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புதுச்சத்திரம் பயணியர் விடுதி எதிரே உள்ள காவிரி ஆற்று படித்துறைக்கு வந்த கணவன்-மனைவி இருவரும் அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்து இறந்தனர். நேற்று மதியம் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் 2 பேர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவி இருவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டனர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செந்துறை அருகே விளையாடியபோது தடுப்பணையில் மூழ்கி அக்காள்- தம்பி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(வயது 33). இவருடைய தம்பி ஜெயசீலன்(30). சுதாகருக்கு 2 மகள்கள். இதில் 2-வது மகள் சுடர்விழி(7). இதேபோல் ஜெயசீலனுக்கு சுருதி(9) என்ற மகளும், ரோகித்(6) என்ற மகனும் இருந்தனர்.
சுருதி குழுமூரில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பும், சுடர்விழி, ரோகித் ஆகியோர் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 3 பேரும் வீட்டில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மணப்பத்தூர் பகுதியில் சுதாகரின் தாய் வளர்மதி மாடு மேய்த்து கொண்டிருந்தார். அங்கு சென்ற சுருதி, ரோகித், சுடர்விழி ஆகிய 3 பேரும் தங்களுடைய பாட்டி மாடு மேய்ப்பதை பார்த்துவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் அங்குள்ள சின்ன ஓடையில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அந்த பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையின் ஒரு பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் அரிப்பு ஏற்பட்டதில், அங்கிருந்த மரம் விழுந்து தடுப்பணை சேதம் அடைந்தது. இதனால் தடுப்பணையையொட்டி உள்ள ஓடைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக மாறியுள்ளது.
நேற்று ஓடையில் விளையாடிய சுருதி உள்ளிட்ட 3 பேரும் தடுப்பணையில் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தவறி விழுந்துள்ளனர். இதில் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து 3 பேரையும் பிணமாக மீட்டு வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
இதேபோல் தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த பனிமா சப்ரினா (14), சஞ்சனா (10) ஆகிய 2 சிறுமிகளும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.