search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தபால் வாக்கு பெட்டி
    X
    தபால் வாக்கு பெட்டி

    ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று முதல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துகின்றனர்

    ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 314 பேரும், 148 மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டுப்போட உள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    சட்டமன்ற தேர்தலையொட்டி ஜெயங்கொண்டம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் ஒட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடைபெற உள்ள தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவரவர் வீட்டில் இருந்தபடி தபால் வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி கடந்த 2 நாட்களாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தபால் வாக்கு செலுத்த முன்வந்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 மண்டல அலுவலர்கள் தபால் இந்த பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 314 பேரும், 148 மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டுப்போட உள்ளனர். இன்று(புதன்கிழமை) மற்றும் நாளை(வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அவர்கள் தபால் வாக்குகள் செலுத்தலாம். இந்த பணியில் 10 மண்டலங்களுக்கு உட்பட்ட தேர்தல் நிலைய அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இன்றும், நாளையும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவரவர் வீட்டிலேயே வாக்களிப்பதற்கு தயாராக இருக்குமாறு ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×