என் மலர்
செய்திகள்

தடுப்பணையில் மூழ்கி பலி
தடுப்பணையில் மூழ்கி அக்காள்-தம்பி உள்பட 3 பேர் பலி
செந்துறை அருகே விளையாடியபோது தடுப்பணையில் மூழ்கி அக்காள்- தம்பி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(வயது 33). இவருடைய தம்பி ஜெயசீலன்(30). சுதாகருக்கு 2 மகள்கள். இதில் 2-வது மகள் சுடர்விழி(7). இதேபோல் ஜெயசீலனுக்கு சுருதி(9) என்ற மகளும், ரோகித்(6) என்ற மகனும் இருந்தனர்.
சுருதி குழுமூரில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பும், சுடர்விழி, ரோகித் ஆகியோர் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 3 பேரும் வீட்டில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மணப்பத்தூர் பகுதியில் சுதாகரின் தாய் வளர்மதி மாடு மேய்த்து கொண்டிருந்தார். அங்கு சென்ற சுருதி, ரோகித், சுடர்விழி ஆகிய 3 பேரும் தங்களுடைய பாட்டி மாடு மேய்ப்பதை பார்த்துவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் அங்குள்ள சின்ன ஓடையில் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அந்த பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையின் ஒரு பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் அரிப்பு ஏற்பட்டதில், அங்கிருந்த மரம் விழுந்து தடுப்பணை சேதம் அடைந்தது. இதனால் தடுப்பணையையொட்டி உள்ள ஓடைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளமாக மாறியுள்ளது.
நேற்று ஓடையில் விளையாடிய சுருதி உள்ளிட்ட 3 பேரும் தடுப்பணையில் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தவறி விழுந்துள்ளனர். இதில் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து 3 பேரையும் பிணமாக மீட்டு வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
இதேபோல் தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த பனிமா சப்ரினா (14), சஞ்சனா (10) ஆகிய 2 சிறுமிகளும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

Next Story