என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூர் பேருந்து நிலையம் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு அருகே மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், சொத்து வரி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • இதில் முன்னாள் எம்பி இளவரசன், முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் பேருந்து நிலையம் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு அருகே மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், சொத்து வரி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், மாவட்டச் செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை எஸ் ராஜேந்திரன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முன்னாள் எம்பி இளவரசன், முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலாளர் தங்க பிச்சமுத்து, வாசுகி,

    கண்ணகி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரேம்குமார், செங்கமலை, கல்லங்குறிச்சி பாஸ்கர், நகரச் செயலாளர் செந்தில், மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் அனைத்து பிரிவு அணி செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
    • கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைத்து மணிமண்டபம் அமைக்க வேண்டும்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் காடுவெட்டி ரவிஷங்கர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் வரவேற்று பேசினார். ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தீர்மானங்களை எழுத்தர் வெங்கடாசலம் வாசித்தார். ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் நடைபெற உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் குறித்து கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பேசினர்.

    கூட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைத்து மணிமண்டபம் அமைக்க வேண்டும், ஆடி திருவாதிரை விழா நடத்த அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், தொடர்ந்து ஆடி திருவாதிரை திருவிழா நடத்த வேண்டும்,

    பெயர் மருவி ஜெயங்கொண்டம் என்று அழைக்கப்படுவதை மீண்டும் ஜெயங்கொண்ட சோழபுரம் என அனைத்து துறை அலுவலகம் பொதுமக்களிடத்தில் மீண்டும் அழைக்கப்பட வேண்டும் மற்றும் அலுவலக செலவினங்கள் என்பன உள்ளிட்ட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரித்திவிராஜன், நடராஜன், ராஜசேகர், சிவக்குமார், செந்தமிழ்ச்செல்வி, ராஜேஸ்வரி, சீதை உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் தாமோதரன், நடராஜன், குமார், சி பி ராஜா ஆகிய பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் ஒன்றிய மேலாளர் முருகானந்தம் நன்றி தெரிவித்தார்.

    • இருசக்கர வாகனத்தில் மது அருந்திவிட்டு 3 பேர் அல்லது 4 பேர் சாலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும், அதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.
    • மது போதை–யில் சென்றவர்கள், உரிய ஆவணம் இல்லாமல் சென்ற–வர், லைசென்ஸ் இல்லாமல் சென்றவர் என பல்வேறு வகையில் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகனத்தில் மது அருந்திவிட்டு 3 பேர் அல்லது 4 பேர் சாலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும், அதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.

    இதை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பெயரில்துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் தலைமையிலான காவல் ஆய்வாளர் சாஹிரா பானு மற்றும் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் தீவிர இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மது போதை–யில் சென்றவர்கள், உரிய ஆவணம் இல்லாமல் சென்ற–வர், லைசென்ஸ் இல்லாமல் சென்றவர் என பல்வேறு வகையில் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் வாகனங்களின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடை எடுக்கப்பட்டு வருகிறது.

    • போலீஸ் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    • 4 ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகிராபானு தலைமையிலான போலீசார் 4 ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், ஆவணங்கள் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் வந்தவர்களை பிடித்து ஆவணங்களை பரிசோதித்து, அறிவுரை வழங்கினர். மேலும் வாகனங்களில் காப்பீடு ஆவணங்கள் இல்லாதவர்களையும், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களையும் மறித்து வழக்குப்பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் போலீஸ் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் போலீஸ் அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்தவர்களை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது."

    • லாரியில் கடத்திவரப்பட்ட ரூ.25 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டன
    • டிரைவர், உதவியாளர் கைது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று மாலை போலீஸ்காரர் ராஜூ என்பவர் பணியில் இருந்தார். அப்போது கும்பகோணம் பகுதியை நோக்கி சென்ற ஒரு லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தபோது, அவர் கேரளாவில் இருந்து காபி கொட்டை தோலை ஏற்றிக்கொண்டு, கும்பகோணம் பகுதிக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீஸ்காரர் ராஜூ லாரியை சோதனை செய்தபோது, காபி கொட்டை தோல் மூட்டைகளுக்கு கீழே சாக்கு மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தார்.

    உடனடியாக இது பற்றி தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். லாரியில் இருந்த டிரைவர் மற்றும் அவருடன் இருந்த மற்றொருவரையும் சோதனைச்சாவடியில் போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜாலோ மாவட்டம் சாய்ராம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் பகிரத்சிங்(வயது 24), அதே மாவட்டத்தில் உள்ள ஒட்டாவாலா கிராமத்தை சேர்ந்த சோப்பாராம்(22) ஆகியோர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் விசாரித்தபோது கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள அத்திப்பள்ளி என்னும் இடத்தில் இருந்து இந்த லாரியை அவர்கள் கும்பகோணத்தில் உள்ள ஒரு நபரின் இடத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். கும்பகோணத்தில் யாருக்கு இந்த குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் குட்கா பொருட்கள் சட்டப்பூர்வமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் குட்கா பொருட்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு 3 முதல் 4 மடங்கு லாபத்துடன் விற்பனை செய்வதற்காக குட்கா பொருட்கள் கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த லாரியில் இருந்து 82 மூட்டைகள் குட்கா கைப்பற்றப்பட்டது. அவை சுமார் 2 டன் எடை இருக்கும் என்றும், அதன் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிடிபட்ட குட்கா பொருட்கள் தா.பழூர் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் முன்னிலையில் குட்கா மூட்டைகள் எடுத்து பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது.

    மேலும் டிரைவர்கள் பகிரத்சிங் மற்றும் சோப்பாராம் ஆகியோரை கைது செய்து, போலீஸ் நிலையம் கொண்டு வந்து, அவர்களிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க தேவையான ஆலோசனை வழங்கினார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 33 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அன்புசெல்வன் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செந்தில்குமார் தலைமை தாங்கினார். தா.பழூர் ஒன்றியத்துக்கான மண்டல அலுவலர் மற்றும் மாவட்ட ஊராட்சி செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களிடம் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், 15-வது நிதிக்குழு மானிய திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். வளர்ச்சி பணிகளை விரைவாக செய்து முடிக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • மின்கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்து மாடு-பன்றிகள் பலியாகின
    • மனித உயிர் பலி தவிர்க்கப்பட்டுள்ளது

    அரியலூர்:

    அரியலூரில் பெரம்பலூர் சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே ஒரு மின்கம்பம் உள்ளது. இந்நிலையில் இந்த மின் கம்பத்தை உரசிச்சென்ற ஒரு பசு மாடும், 2 பன்றிகளும் மின்சாரம் பாய்ந்து இறந்தன. அந்த வழியாக சென்றவர்கள், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசார் மற்றும் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து பார்த்தபோது, மின்கசிவு காரணமாக அந்த மின்கம்பம் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.அரியலூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். நேற்று முன்தினமும் அதே இடத்தில் ஒரு ஆடு இறந்ததால், மின்சாரம் பாய்ந்து அந்த ஆடு இறந்ததா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மனித உயிர் பலி தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அக்காளை தாக்கிய தங்கை கைது செய்யப்பட்டார்.
    • இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மேல கோவிந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா(வயது 55). இவரது தங்கை அதே பகுதியை சேர்ந்த வசந்தி(50). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று விஜயா தனது டீக்கடையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வசந்தி, விஜயாவிடம், தங்களது தாய்க்கு சொந்தமான இடத்தில் அவர் தங்கக்கூடாது என்று கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் விஜயாவை, வசந்தி திட்டி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த விஜயா அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் விஜயா அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்கு பதிவு செய்து வசந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆண்டிமடம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.

    அரியலூர்

    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;-ஆண்டிமடம், பாப்பாக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், பெரியதத்தூர், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிட நல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன் மற்றும் மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், குலோத்துங்க நல்லூர், தென்னவநல்லூர், வேம்புகுடி, அழகர்கோயில், சலுப்பை, வெட்டியார்வெட்டு, இருதயபுரம், இளைய பெருமாநல்லூர், கங்கை கொண்ட சோழபுரம், வீரபோகம், காட்டுக்கோல்லை, குறுக்கு ரோடு, தழுதாழை மேடு, வளவனேரி, வங்குடி, இறவாங்குடி, அய்யப்பநாயக்கன் பேட்டை, திருக்களப்பூர், கோவில் வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • கடையில் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ‘ஸ்பேனர்’களை திருடியதும் தெரியவந்தது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வி.கைகாட்டி நால்ரோடு பகுதியில் மெக்கானிக் கடை வைத்திருப்பவர் கார்த்திகேயன்(வயது 30). இவர் தனது சொந்த வேலை காரணமாக கடந்த 4 மாதமாக மெக்கானிக் கடையை நடத்தாமல் கடையை பூட்டிவிட்டு, தனது சொந்த ஊரில் இருந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அந்த கடைக்குள் புகுந்த 2 ேபர் அங்குள்ள பொருட்களை திருடிக் கொண்டிருந்தனர். இதையறிந்த அந்த இடத்தின் உரிமையாளர் சாமிதுரை, திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து விக்கிரமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,அவர்கள் சேலத்தார்காடு பகுதியை சேர்ந்த 16 மற்றும் 14 வயதுடைய 2 சிறுவர்கள் என்பதும், 'ஸ்பேனர்'களை திருடியதும் தெரியவந்தது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.

    • மணல் குவாரி அமைக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • மாட்டு வண்டி தொழிலாளர்கள் கொடுத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 351 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 1,500 மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தோம். தற்போது மணல் குவாரி செயல்படாததால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் மாடுகளுக்கு தீவனம் கூட வாங்கி போட முடியவில்லை. குடும்ப செலவிற்கு பெரிதும் அல்லாடும் சூழ்நிலை உள்ளது. எனவே எங்களது வாழ்வாதாரத்தை காக்க மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    இளைஞர்கள் சிலர் கொடுத்த மனுவில், குழுமூரில் நீட் தேர்வால் இறந்த அனிதாவின் நினைவாக நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் மாலை நேரத்தில் சிறுவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு அறிவு சார் திறன் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டித்தேர்வுகளுக்கு இங்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் தங்கி படித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி மற்றும் தெருவிளக்கு இல்லாததால் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே சாலை மற்றும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    கூட்டத்தில் மனு அளிக்க வந்த மக்களுக்கு ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு குறித்த மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.

    • நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
    • எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பிள்ளைபாளையம் மற்றும் சூசாழன்மாதேசி ஆகிய கிராமங்களில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வே தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    ×