என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- அரியலூர் பேருந்து நிலையம் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு அருகே மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், சொத்து வரி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- இதில் முன்னாள் எம்பி இளவரசன், முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையம் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு அருகே மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், சொத்து வரி உயர்வை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், மாவட்டச் செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை எஸ் ராஜேந்திரன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் எம்பி இளவரசன், முன்னாள் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலாளர் தங்க பிச்சமுத்து, வாசுகி,
கண்ணகி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரேம்குமார், செங்கமலை, கல்லங்குறிச்சி பாஸ்கர், நகரச் செயலாளர் செந்தில், மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் அனைத்து பிரிவு அணி செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






