என் மலர்tooltip icon

    அரியலூர்

    • தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்:

    ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தலித் கிறிஸ்தவர்கள் பேரவை சார்பில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பஸ்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஜெயங்கொண்டம் மறைவட்ட தலைவர் வின்சென்ட் ராஜ் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவர் பிரான்சினாள் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்."

    • ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
    • வாகன சோதனை நடத்தினர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், ஆய்வாளர் சரவணபவன் ஆகியோர் அரியலூர் நகரில் ரெயில் நிலையம், ராஜாஜி நகர், செந்துறை சாலை ஆகிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி வந்த ஆட்டோக்களை தடுத்து நிறுத்தினர். இதேபோல் ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் ஆகியவை இல்லாமல் ஓட்டிய 3 ஆட்டோ டிரைவர்களுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை ஆய்வு செய்தனர். அதில் பல ஆட்டோக்கள் இன்சூரன்ஸ் எடுக்கப்படாமலும், சிலர் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மேற்கண்ட குறைகளை உடனடியாக சரி செய்து அதன் பிறகு பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்று எச்சரித்தனர்.

    • டாஸ்மாக கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
    • சுதந்திர தின விழாவை முன்னிட்டு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவித்து–ள்ளதாவது:

    அரியலூர் மாவட்டத்தில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடை–கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடம் அனைத்திற்கும்,

    சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2022 (திங்கட்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர்தி–னமாக விடுமுறை அறிவிக்க–ப்படுகிறது.

    மீறி மதுபான சில்லறை விற்பனை கடைகளோ மதுபானக்கூடங்களோ செயல்பாட்டால் கடும் நடவடிக்கை மேற்கொ–ள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடு–த்து–ள்ளார்.

    • அரசு பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது
    • கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், காணொளி காட்சி வாயிலாக"போதைப் பழ–க்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கு–ம் நிக–ழ்ச்சி–" நடைபெற்றது.

    இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணி–ப்பாளர் ரவிசேகர் ஆகி–யோர் முன்னி–லையில் வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார துணை இயக்கு–னர் மரு.கீதாராணி, ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன், உடையா–ர்பாளையம் வருவாய் கோட்டாச்சியர் பரிமளம், வட்டாச்சியர் ஶ்ரீதர், உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி, ஜெய–ங்கொ–ண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வி, ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர்சுமதி சிவக்குமார் மற்றும் நகர்ம–ன்ற உறுப்பினர்கள்,

    வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலை–மையிலான மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன்உ ள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஜெயங்கொண்டம் மகளிர் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிஅன்னை தெரசா நர்சிங் கல்லூரி ஆகியவற்றை சேர்ந்த மாணவ மாணவிகள் பேராசி–ரியர்கள் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகி–யோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

    • முகாமுக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • முகாமில் 244 பயனாளிகளுக்கு, 30 லட்சத்து, 42 ஆயிரத்து 721 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள சன்னாவூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 244 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, அனைத்து துறைகள் சார்பில் 244 பயனாளிகளுக்கு, 30 லட்சத்து, 42 ஆயிரத்து 721 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    முகாமில், வட்டார வேளாண் உதவி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், ஜாகிர்உசேன், வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் ஜார்ஜ் வாஷிங்டன், ஒன்றியக் குழு தலைவர் அ.சுமதி, கவுன்சிலர் ச.ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறை அலுவலர்கள், தங்களது துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துரைத்தார். முன்னதாக வட்டாட்சியர் குமரையா வரவேற்றார். முடிவில், ஊராட்சித் தலைவர் நல்லுசாமி நன்றி தெரிவித்தார்

    • காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
    • பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில், தனியாரிடமிருந்து உணவு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.

    அரியலூர் :

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்திலுள்ள ஐந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில், தனியாரிடமிருந்து உணவு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இப்பணியை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் காந்தி தலைமை வகித்தார். மாநில செயற் குழு உறுப்பினர் செல்வி, ஊரக வளர்ச்சி அலுவர்கள் சங்கத்தின் மாவட்ட செயலர் பழனிவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் மற்றும் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டு முழக்கமிட்டனர்.

    இதே போல் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் ஒன்றியத் தலைவர் இளங்கோவன், திருமானூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலர் ஷீலா, ெஜயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் ஆனந்தவள்ளி, தா.பழூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியத்தலைவர் ஆரோக்கியமேரி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    • பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 47), விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமாகவே வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜேந்திரன் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு வயலில் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • வாலிபரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பட்ட காட்டாங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 22). மேல தெருவை சேர்ந்தவர் சேகர் (42). உறவினர்களான இவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் பட்ட காட்டங்குறிச்சியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே ரஞ்சித்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சேகர் மற்றும் அவரது நண்பர் சம்பந்தம் ஆகியோர் ரஞ்சித்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் ரஞ்சித்குமாரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரஞ்சித்குமார் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சேகர் மற்றும் சம்பந்தம் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்.

    • தபால்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்:

    நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், அஞ்சலக துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரியும், ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் துணை அஞ்சலக ஊழியர்கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் தபால் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்."

    • ஏரியில் குளிக்க சென்ற முதியவர் கீழே தவறி விழுந்து பலியானார்.
    • சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 70). இவர் அருகே உள்ள நயினார் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்."

    • திருமானூர் ஒன்றியத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேல ராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம், அரண்மனை குறிச்சி, சாத்தமங்களம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருமானூர் மின்உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

    • சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • பரோட்டா வாங்கி கொடுத்து கொடூரம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 75), கூலி தொழிலாளி. இவர் 12 வயது சிறுமிக்கு பரோட்டா வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து முதியவர் வைத்திலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்"

    ×