என் மலர்
அரியலூர்
- தொடர்வண்டி வேண்டுவோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கும்பகோணம்-ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்திற்கு ரெயில் இயக்க கோரிக்கை
அரியலூர்:
ஜெயங்கொண்டம் தொடர்வண்டி வேண்டு வோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, இணை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சாமிநாதன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், கும்பகோணம்-ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்திற்கு ரெயில் இயக்க வேண்டும் என்று கோரி வருகிற 15-ந் தேதி அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்ற முன் வடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த கோரிக்கைக்காக ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், ஆண்டிமடம் பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் நிறுவனர்கள், முதல்வர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து ரெயில் கோரிக்கைக்காக மக்களை சந்திக்கும் மாபெரும் பேரணி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தீர்மானங்களை கூட்டமைப்பின் நிறுவனர் திருக்குறள் பன்னீர்செல்வம் முன்மொழிந்து விளக்கி பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பழனிமுத்து, மருத்துவர் சமூக சங்கத்தின் மாநில தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்
- தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் பழனிராசு. இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி இளஞ்சியம். இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகளான நிவேதா, இந்தோ நேபாள் சர்வதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்று, 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இதையடுத்து ஊருக்கு திரும்பிய நிவேதிதாவை, போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவரை க.கொ.க.கண்ணன் எம்.எல்.ஏ.வும் பாராட்டினார். இது குறித்து நிவேதிதா கூறுகையில், இந்த போட்டியில் பங்கேற்க சென்ற போதுதான் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், போட்டியில் இலக்கை 12.58 வினாடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றதாகவும், இந்திய அணிக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம், என்றும் கூறினார்.
- ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
அரியலூர்:
ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்க சிறப்பு கூட்டம், மாநில தலைவர் லூயிஸ் பிரான்சிஸ் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தை ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சேமநல நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், சமூக நலத்துறை இயக்கத்திலேயே பணியாற்றக்கூடிய அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். சேமநல நிதியை உடனடியாக வழங்க வேண்டும். ரூ.72 ஆயிரத்திற்கு கீழ் ஆண்டு ஊதியம் பெறக்கூடிய அனைவரையும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்றார்.
- தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகிரா பானு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘சுதந்திர திருநாள் அமுத பெருவிழா’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறப்பு ரத்த தான முகாம், நடைபெற்றது
- முகாமில் 30 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'சுதந்திர திருநாள் அமுத பெருவிழா' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சிறப்பு ரத்த தான முகாம், கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ரத்த தான முகாமிற்கு கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ரத்த மைய மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, ரத்த வகை கண்டறிந்து குருதி தான சேகரிப்பில் ஈடுபட்டனர்.
முகாமில் 30 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்களது ரத்த வகையை அறிந்து கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கினைப்பாளர் ஆதிலட்சுமி செய்திருந்தார்.
- உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசாருக்கு, கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது, அவனிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசாருக்கு, கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மணகெதி சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 16 வயது சிறுவன் கஞ்சா விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது, அவனிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- நீதிபதிகள் ஏக்னஸ் ஜெபகிருபா, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்
- இது போன்று மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
நீதிபதிகள் ஏக்னஸ் ஜெபகிருபா, செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். இதில் குற்ற வழக்குகள் 54 மற்றும் உரிமையியல் வழக்குகள் 7 ஆகியவற்றுக்கு வழக்காடிகளின் சமரசத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.
இது போன்று மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திரளான வழக்காடிகளும், வக்கீல்களும் கலந்து கொண்டார்கள்.
- தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- 5 வயதில் பெண் குழந்தை உள்ளது
அரியலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியப்பனின் மகன் மாது(வயது 32). மனைவி செந்தமிழ்செல்வி(29). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, செந்தமிழ்செல்வி தனது தந்தையுடன் வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாது அங்கு வந்து செந்தமிழ்செல்வியை சமாதானப்படுத்தி, குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால் செந்தமிழ்செல்வி வர மருத்துள்ளார்.
இதில் மனமுடைந்த மாது யாரும் இல்லாத நேரத்தில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தாயை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
- 8 சென்ட் இடத்தை எழுதி கொடுக்க வற்புறுத்தியுள்ளார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கீழநெடுவாய் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி எமிலிமேரி(வயது 64). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரது கணவர் பெயரில் உள்ள 8 சென்ட் இடத்தை பெரிய மகனான ஞானசிகாமணிபுஷ்பராஜ், தனக்கு எழுதிக்கொடுக்க வற்புறுத்தி, எமிலிமேரியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஞானசிகாமணிபுஷ்பராஜின் மனைவி அற்புதம் மேரி, மகள் ஆகியோர் சேர்ந்து எமிலிமேரி, அவரது இளைய மகன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 2 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து எமிலிமேரி அளித்த புகாரின்பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஞானசிகாமணிபுஷ்பராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- பெண் மர்மமான முறையில் இறந்தார்.
- கவிதா தூக்கில் தொங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேலின் மகள் கவிதா(வயது 28). இவருக்கும், இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் மர்மமான முறையில் கவிதா தூக்கில் தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விரைந்து சென்று கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கவிதாவின் உடலில் காயங்கள் இருந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்பது குறித்து செந்துறை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்."
- திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயமானார்.
- 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
அரியலூர்
காரைக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் அண்ணாதுரை. இவரது மகன் பால்ராஜ்(வயது 30). இவருக்கும், ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரையின் மகள் கஸ்தூரிக்கும்(21) கடந்த மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்கள் காரைக்குறிச்சி கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். ேநற்று முன்தினம் இரவு திடீரென கஸ்தூரி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்
- லஞ்சம் வாங்கியதற்காக
அரியலூர்:
திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சியில் அரியலூர் அருகே, பட்டா மாற்ற விவசாயிடம் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், செங்கராயன்கட்டளை கிராமத்தை சேர்ந்வர் சச்சிதானந்தம், 1974 ம் வருடம் பட்டாவாக இருந்த இவரது நிலம் தவறுதலாக தரிசு நிலமாக மாறிவிட்டது. பட்டாவாக இருந்ததற்கு உரிய பத்திரங்களை வைத்து, மீண்டும் பட்டா நிலமாக மாற்றித்தர மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். மாவட்ட கலெக்டரும் பட்டா நிலமாக மாற்றுவதற்கு உத்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், அந்த நிலத்தை பட்டாவாக மாற்றித் தரக்கோரி, ஏலாக்குறிச்சி, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்ட போது, அதற்கு அவர்கள் சச்சிதானந்த்த்திடம் ஒரு லட்சம் கேட்டுள்ளனர்.
பணம் கொடுக்க மணம் இல்லாத, சச்சிதானந்நம் அரியலூர் லஞ்ச ஒழிப்பு துறையை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் உத்தரவின் பேரில், சச்சிதானந்தம் முன்பணமாக இருபதாயிரம் ரூபாயை வருவாய் ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்து இருந்த அரியலூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீசார், பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைதுநடவடிக்கையால் அப்பகுதிலில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது






