என் மலர்
அரியலூர்
- மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். விக்கிரமங்கலம்-அரியலூர் சாலையில் பாப்பாத்தி ஏரி அருகே அவர்கள் சென்றபோது எதிரே வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் அந்த மினி லாரியில் மணல் ஏற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கோவிந்தபுத்தூர் பகுதியில் இருந்து வி.கைகாட்டி பகுதிக்கு மணல் கடத்தப்பட்டதும், அந்த மினி லாரியை டிரைவர் கோவிந்தபுத்தூர் கீழத்தெருவை சேர்ந்த சிவராஜ்(வயது 32) ஓட்டி வந்ததும், மினி லாரியில் மணலை ஏற்றி அனுப்பி வைத்தது கோவிந்தபுத்தூர் பகுதியை சேர்ந்த கருப்பையன் மற்றும் ராமச்சந்திரன் என்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு சிவராஜை கைது செய்து, மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
- அகவிலைப்படி உயர்வை ஜனவரி முதல் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் வலியுறுத்தல்
அரியலூர்:
தமிழக அரசு அறி வித்து ள்ள 3 சதவீத அகவிலை ப்படியை ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரி வித்தார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் செய்தியாள ர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தமிழக அரசு ஊழிய ர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயரவு ஜூலை 1-ம் தேதி முதல் வழ்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் அரசு ஊழியர்கள் ஏற்கனவே விடுத்த கோரிக்கைப்படி ஜனவரி -ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
அரசு பணியாளர் சங்கம் ஏற்கனவே அறிவி த்தது போல 7 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வருகிற 28-ந்தேதி அன்று ஆர்ப்பா ட்டம் நடத்தப்படும். துப்பு ரவுப் பணியாளர்கள் தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்ப டுவது இல்லை.
எனவே அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அகவிலைப்படியாக வழங்க அரசு முன்வர வேண்டும்.
மேலும் அகவிலைப்படி உயர்வு பற்றி சங்கங்களை அழைத்து தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. சங்கங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு களுக்கு எந்த காலத்திலும் நிதி சுமை இருந்து கொண்டு தான் இருக்கும். நிதியை வளப்படுத்துவதற்கு அதிக ப்படுத்துவதற்கு ஏாளமான வழிமுறைகள் உள்ளன என்றார்.
- ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் வழங்கினார்.
- ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, உதயநத்தம், கோடாலி கருப்பூர், காரைக்குறிச்சி, தா.பழூர் உள்ளிட்ட பள்ளிமாணவர்களுக்கு இலவச மிதிவண்டியினை வழங்கப்பட்டது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் வழங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
முதல் கட்டமாக ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, உதயநத்தம், கோடாலி கருப்பூர், காரைக்குறிச்சி, தா.பழூர் உள்ளிட்ட பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் கட்சியின் மாவட்ட ஒன்றிய கிளை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் அண்ணாநகர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27) கூலித் தொழிலாளியான இவர் கடந்தாண்டு 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் கார்த்திக்கை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் சிறுமியை பாலியல் வன்கொடமை செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், கடத்தி சென்றதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தண்டனைகளை ஏக காலத்தில் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட கார்த்திக் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார்.
- உயிரிழந்த ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும்
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
அரியலூர்:
கடலூர் மாவட்டம் திட்டகுடி அருகேயுள்ள திருவட்ட துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் மகன் செல்வம் (வயது 41) இவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த ஆலத்தியூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் பிட்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த செல்வம் திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதையடுத்து செல்வத்தின் குடுத்தினர் மற்றும் கிராம மக்கள் இழப்பீடு கேட்டு தனியார் சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டனர். அப்போது உரிய இழப்பீடு தரப்படும் என ஆலை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இது குறித்து தளவாய் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
- சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் நகரின் தென்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த ஜூலை மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கிருஷ்ணன் பிறப்பு, அம்மன் பிறப்பு, வில் வளைப்பு, அம்மன் திருக்கல்யாணம், நாககன்னி கல்யாணம், அல்லி கல்யாணம், கிருஷ்ணன் தூது என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. மேலும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில் முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சக்தி கரகம் அழைத்து, தீமிதி திடலுக்கு திரவுபதி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரித்து கொண்டு வரப்பட்டார். பின்னர் பக்தர்கள் ஏராளமானோர் தீமித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
- வருவாய் கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தனியார் அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. பயிற்சி வகுப்பினை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். இதில் ஜெயங்கொண்டம் துணை வட்டாட்சியர், ஜெயங்கொண்டம் மற்றும் உடையார்பாளையம், பாப்பாகுடி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
- கீழராயம்புரம் நல்லப்பா கோவில் ஊரணி திருவிழா நடைபெற்றது.
- பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கீழராயம்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நல்லப்பா கோவில். இந்த கோவிலை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை அன்று ஊரணி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற்றது. முன்னதாக கிராமத்தின் எல்லையில் இருந்து குதிரையில் சக்தி அழைத்து கோவிலுக்கு வரப்பட்டது. பின்னர் பக்தர்கள் பொங்கலிட்டு சாமிக்கு படையல் செய்து வழிபட்டனர். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லப்பாவை வழிபாடு செய்து அருள் பெற்றனர். அதன் பின்னர் கரகாட்ட கலை நிகழ்ச்சியுடன் சாமி வீதிஉலா நடைபெற்றது.
- மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
- சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் காங்கேயம்பேட்டை முனியப்பா கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஒருவர், போலீசாரை கண்டதும் டிராக்டரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
- மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அரியலூர்:
மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கணக்க விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உட்கோட்டை, குருவாலப்பர்கோவில், சுண்ணாம்பு குழி, சம்போடை, குறுக்கு ரோடு, பள்ளிவிடை, பாகல்மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- சுதந்திரதின அமுதபெருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
- திறந்த வெளி ஜீப்பில் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, மாவட்ட போலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான்அப்துல்லா ஆகியோர் சென்று போலீ–சாரின் அணிவகுப்பு மரி–யாதையை ஏற்றுக் கொண்டனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 75-வது சுதந்திரதின அமுதபெருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். உலக சமாதானம் விரும்பும் பொருட்டு வெண்புறாக்களை பறக்க விட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். திறந்த வெளி ஜீப்பில் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, மாவட்ட போலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான்அப்துல்லா ஆகியோர் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 258 பேரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 90 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை, கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலெட்சுமி, மாவட்ட வழங்கல்அலுவலர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் சிவக் குமார் உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், மக்கள்பிரதிகளும் கலந்துகொண்டனர்.
- அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி துவக்கி வைத்தார்,
- அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரத்து 748 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது,
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி துவக்கி வைத்தார்,
அமர்வு நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா, நீதித்துறை நடுவர்கள் அரியலூர் செந்தில்குமார், கற்பகவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டத்தில் சார்பு நீதிபதி லதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ், நீதித்துறை நடுவர் ராஜசேகர் ஆகியோரும், செந்துறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி அக்னேஷ்ஜெயாகிருபா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், முதுநிலை நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, மற்றும் வக்கீல் சங்க பிரதிநிதிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5 ஆயிரத்து 748 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, 21 சிவில் வழக்குகளும், 6 மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், 445 சிவில் குற்ற வழக்குகளும், 4 செக் வழக்குகளும், 1 பண மீட்பு வழக்கும், 12 நகராட்சி சம்பந்தப்பட்ட வழக்குகளும், 85 வங்கிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது.
மேலும் 14,815 போக்குவரத்து காவல்துறை விதிமீறல் வழக்குகளுக்கும், கொரோனா காலத்தில் அரசு விதிமுறைகளை மீறிய 2587 வழக்குகளும், ஆக மொத்தம் 17 ஆயிரத்து 976 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.






