என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழராயம்புரம் நல்லப்பா கோவில் ஊரணி திருவிழா
    X

    கீழராயம்புரம் நல்லப்பா கோவில் ஊரணி திருவிழா

    • கீழராயம்புரம் நல்லப்பா கோவில் ஊரணி திருவிழா நடைபெற்றது.
    • பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கீழராயம்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நல்லப்பா கோவில். இந்த கோவிலை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை அன்று ஊரணி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற்றது. முன்னதாக கிராமத்தின் எல்லையில் இருந்து குதிரையில் சக்தி அழைத்து கோவிலுக்கு வரப்பட்டது. பின்னர் பக்தர்கள் பொங்கலிட்டு சாமிக்கு படையல் செய்து வழிபட்டனர். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லப்பாவை வழிபாடு செய்து அருள் பெற்றனர். அதன் பின்னர் கரகாட்ட கலை நிகழ்ச்சியுடன் சாமி வீதிஉலா நடைபெற்றது.

    Next Story
    ×