இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
Published on

அரியலூர்:

அரியலூர் அண்ணாநகர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27) கூலித் தொழிலாளியான இவர் கடந்தாண்டு 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் கார்த்திக்கை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் சிறுமியை பாலியல் வன்கொடமை செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், கடத்தி சென்றதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தண்டனைகளை ஏக காலத்தில் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட கார்த்திக் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார். 

X

Maalai Malar
www.maalaimalar.com