என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    அரியலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
    • பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில், தனியாரிடமிருந்து உணவு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.

    அரியலூர் :

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்திலுள்ள ஐந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில், தனியாரிடமிருந்து உணவு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இப்பணியை சத்துணவு ஊழியர்களிடமே ஒப்படைக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் காந்தி தலைமை வகித்தார். மாநில செயற் குழு உறுப்பினர் செல்வி, ஊரக வளர்ச்சி அலுவர்கள் சங்கத்தின் மாவட்ட செயலர் பழனிவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் மற்றும் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டு முழக்கமிட்டனர்.

    இதே போல் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் ஒன்றியத் தலைவர் இளங்கோவன், திருமானூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலர் ஷீலா, ெஜயங்கொண்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் ஆனந்தவள்ளி, தா.பழூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியத்தலைவர் ஆரோக்கியமேரி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    Next Story
    ×