என் மலர்tooltip icon

    அரியலூர்

    • கல்வி உதவித்தொகை பெற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 20-ந்தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அரியலூர்

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு நேற்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய இனங்களுக்கு இணையதளம் அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற அரசின் இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது"

    • அரசு பள்ளியில் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
    • சப்-இன்ஸ்பெக்டர்கள் தொடங்கி வைத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இதனை விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி வி.கைகாட்டி-முனியங்குறிச்சி பாதையில் ஆரம்பிக்கப்பட்டு விக்கிரமங்கலம் பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சென்றனர். இதில் வெற்றி பெற்ற 12 மாணவ-மாணவிகளுக்கு விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது."

    • தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
    • தமிழக அணி சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.

    அரியலூர்

    தேசிய அளவிலான மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள பீட் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் 9 மாநிலங்கள் பங்கு பெற்றன. அரியலூரை சேர்ந்த ராஜ்மகேஷ்வரன் தலைமையிலான தமிழக அணி இறுதிப்போட்டியில் பாண்டிச்சேரி அணியை வீழ்த்தி கோப்பை வென்று சாதனை படைத்தது. தமிழக மாற்றுத்திறனாளிகள் அணி 17 ஆண்டுகளாக விளையாடி வரும் நிலையில் முதன் முறையாக தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் சிறந்த மட்டை வீரராக அரியலூரை சேர்ந்த சன் மேக்கர் 258 ரன்கள், சிறந்த பந்துவீச்சாளராக கோபிநாத் 6 விக்கெட், முத்து ராசா 6 விக்கெட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தொடருக்கான நாயகன் விருதை சன் மேக்கர் பெற்றார். இதையடுத்து, வெற்றி பெற்ற வீரர்கள் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    • தனியார் நிறுவனங்கள் இணையத்தில் பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
    • வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்

    அரியலூர்:

    தகுதியான ஆள்களை தேர்வு செய்ய விரும்பும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனங்கள், தங்களது நிறுவன சார்ந்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர், வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும், தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதியான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளும் வகையிலும் அரியலூர மாவட்ட வேலைவாயப்பு அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய நகரங்களில் அவ்வப்போது பெரிய அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். அதுபோல தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான பணியாளர்கள், தொழிலாளர்களை எளிதாக தாங்களே நேரடியாக தேர்வு செய்து வருகின்றன.

    அரியலூர் மாவடடத்தினை சேர்ந்த தனியார் குறு, சிறு மற்றும் நடத்தர தொழில்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யும் பொருட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரியாக தொடர்பு கொள்ளலாம். அங்கு இணையதளத்தில் தங்களது நிறுவனங்கள் சார்ந்த விவரங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329 228641 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பணி நிரந்தரம் செய்ய கோரி நடைபெறுகிறது.

    அரியலூர்:

    பணி நிரந்தரம் செய்யக் கோரி அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

    தமிழகத்திலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், அவர்களைப் பணி நிரந்தரம் செய்யும் அரசாணை கடந்த 2019 - இல் வெளியானது. ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பலர் ஓய்வுப் பெற்றுவிட்டனர்.

    இந்நிலையில், பணிநிரந்தரம் செய்ய கோரி நவ.10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு கல்லூரி கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.

    அதன்படி அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள் 54 பேர், தங்களது பணியை புறக்கணித்து கல்லூரி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர்.

    இதுகுறித்து கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தது:

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். எங்களை பணிநிரந்தரம் செய்வோம் என கூறிவந்த அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள், இன்று அரசாணை எண் 246,247, 248 மூலம் எங்களை வெளியேற்றும் பணியை செய்ய முன்வந்துள்ளது. இந்த அரசாணைகளை காரணம் ஏதும் கூறாமல் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    ராஜஸ்தான், ஒடிசா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதாக அம்மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளார்கள். அது போல் தமிழகத்திலும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.

    • ஜெயங்கொண்டத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது

    அரியலூர்:

    பல்வேறு கோரிக்கை–களை வலியு–றுத்தி, ஜெயங்கொண்டம் நகராட்சி முன்பு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை–பெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி–களில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட பணியா––ளர்களை பணி மாறுதல் செய்வதை முற்றி–லும் தவிர்க்க வே–ண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை–பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் ஷோபா தலைமை தாங்கினார். மகளிர் அணி தலைவர் சரஸ்வதி வரவேற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுஊழியர் சங்க மாவட்ட செயலா–ளர் வேல்முருகன் சிறப்புரை–யாற்றினார்.

    வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் குமணன், சத்துணவு ஊழியர் சங்க இணை செயலாளர் ஷர்மிளா, சாலை பணியா–ளர்கள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் தர்மலிங்கம் ஒப்பந்த பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சசிகுமார் அரசு அலுவலர்கள் ஒன்றிய மாவட்டத் துணைச் செயலாளர் விஜயராகவன் உள்ளிட்ட பலர் 152 விதிப்படி ஏற்படும் விளை–வுகளைப் பற்றி பேசினர்.

    நகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

    • புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவடடம், தா.பழூர் கிராமத்தில் பகுதி நேர புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. ெஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர் குடும்ப அட்டைதாருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

    இந் நிகழ்ச்சியில் கூட்டுறவு துணைப் பதிவாளர் அறபளி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சார் பதிவாளர் சசிகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன், ஊராட்சித் தலைவர் கதிர்வேல், கூட்டுறவு சங்கத் தலைவர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது
    • காவல் துறையினர் சார்பில் நடந்தது

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த மணக்குடி கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் தலைமையிலான காவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும், அவசரகால உதவி எண்கள் 100,1098, 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • 356 பசுக்கள், 800 ஆடுகளுக்கு சிகிச்சை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த பூண்டி கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமை ஊராட்சி தலைவர் சுந்தராம்பாள் சாம்பசிவம் தொடக்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ஹமீதுஅலி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் அரியலூர் சொக்கலிங்கம் கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திகேயன், ராஜா, கார்த்திகேயன் , கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மாரிமுத்து, இளங்கோவன் , செல்வராஜ் மற்றும் நசீமா ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, 356 பசுக்கள், 620 வெள்ளாடுகள், 180 செம்மறியாடுகள், 250 கோழிகள் மற்றும் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

    200 கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மற்றும் 13 மாடுகளுக்கு சினை பரிசோதனையும் செய்யப்பட்டது.

    நீண்ட நாட்களாக சினைப் பருவ அறிகுறிகள் தென்படாமல் இருக்கும் கிடேரிகள் மற்றும் பலமுறை கருவூட்டல் செய்தும் சினை பிடிக்காத எட்டு மாடுகள் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு அவற்றிற்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • மதுபானம் விற்ற மூதாட்டி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசாருக்கு வந்த தகவலின்படி நடவடிக்கை

    அரியலூர்:

    அரியலூர் அருகே ஓட்டக்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளிமாநில மதுபானங்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஓட்டக்கோவில், காலனித் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மனைவி மதியழகி(வயது 60), இவரது மகன்கள் இனிக்கும் சேட்டு, கோல்டு வினோத், உறவினர்கள் ராயம்புரம் காலனித் தெருவைச் சேர்ந்த அர்ச்சுணன் மகன் பிரகஷ்பதி மற்றும் விஷ்ணு ஆகியோர் அப்பகுதிகளில் வெளிமாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து, கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 400 மதுபான பாட்டில்கள் மற்றும் கார், இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    • விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    • பாதை தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது

    அரியலூர் :

    உடையார்பாளையம் அருகே உள்ள செட்டிக்குழிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 67). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்(71) என்பவருக்கும் பாதை தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் கணேசனை வெங்கடேசன் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாசில்தாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்:

    செந்துறை தாசில்தாராக இருப்பவர் விக்டோரியா பாக்கியம். இவர் அரியலூரில் வசித்து வருகிறார். இவர் பணி முடிந்து அரசு காரில் அரியலூருக்கு வந்தார். அந்த வாகனத்தை டிரைவர் பழனிவேல் ஓட்டி வந்தார். அரியலூரில் உள்ள வீட்டில் தாசில்தார் இறங்கிய பின்னர், டிரைவர் பழனிவேல் அந்த காரை செந்துறை தாசில்தார் அலுவலகத்திற்கு ஓட்டிச்சென்று, அங்கு காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வழக்கம்போல் காலை அவர் வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின்பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தாரின் கண்டிப்பு காரணமாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரேனும் காரின் கண்ணாடியை உடைத்தார்களா? அல்லது வேறு யாரேனும் உடைத்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாசில்தாரின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் செந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×