என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவனங்கள் இணையத்தில் பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு
- தனியார் நிறுவனங்கள் இணையத்தில் பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
- வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்
அரியலூர்:
தகுதியான ஆள்களை தேர்வு செய்ய விரும்பும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனங்கள், தங்களது நிறுவன சார்ந்த விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும், தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதியான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளும் வகையிலும் அரியலூர மாவட்ட வேலைவாயப்பு அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய நகரங்களில் அவ்வப்போது பெரிய அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். அதுபோல தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான பணியாளர்கள், தொழிலாளர்களை எளிதாக தாங்களே நேரடியாக தேர்வு செய்து வருகின்றன.
அரியலூர் மாவடடத்தினை சேர்ந்த தனியார் குறு, சிறு மற்றும் நடத்தர தொழில்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யும் பொருட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரியாக தொடர்பு கொள்ளலாம். அங்கு இணையதளத்தில் தங்களது நிறுவனங்கள் சார்ந்த விவரங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329 228641 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.






