என் மலர்
அரியலூர்
- செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
- மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது
அரியலூர்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
- பச்சிளம் பெண் குழந்தை ஏரியில் பிணமாக மீட்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் பச்சிளம் குழந்தையின் உடல் துணியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் கயல்விழிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த குழந்தையின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் அந்த குழந்தை பிறந்து ஒருவாரமேயான பச்சிளம் பெண் குழந்தை என்பதும், குளத்தில் வீசப்பட்டதால் அந்த குழந்தையின் தலை மற்றும் உடலை மீன்கள் தின்றது தெரியவந்தது. மேலும் குழந்தையை ஏரியில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?, தவறாக பிறந்த குழந்தையா? அல்லது முன் விரோதம் காரணமாக பிறந்த குழந்தையை ஏரியில் போட்டு யாரேனும் கொலை செய்துள்ளனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடந்தது
- 2-வது நாளாக நடந்தது
அரியலூர்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6-ம் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் நீக்கம் திருத்தத்திற்கு படிவம் 7-ம், திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-ம், இடமாற்றம் திருத்தத்திற்கு படிவம் 8 ஏ-ம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திருத்தத்திற்கு படிவம் 6 ஏ-ம் பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர்.
17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பங்களை அளித்து முன்பதிவு செய்தனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து கொள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் 2-ம் கட்டமாக வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் வாக்காளர்கள் சிறப்பு சுருக்க திருத்த முகாமிற்கான விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்திலோ பெற்றும் பூர்த்தி செய்து அளிக்கலாம்."
- இளம்பெண்ணை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
- சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேல சிந்தாமணி கிராமத்தில் வசித்து வருபவர் அய்யப்பன். இவருடைய மனைவி நித்யா (வயது 25). இவர் சமீபத்தில் அப்பகுதியில் வீட்டுமனை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதேபகுதியில் வசித்து வரும் அமிர்தலிங்கம் மனைவி கோசலை மற்றும் அவரது மகன் வீரமணி (42) ஆகியோர் வீட்டுமனை வாங்கிய நித்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரது வீட்டின் முன்பு கல்லை தூக்கி போட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நித்யா அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட வீரமணியை கைது செய்தார்.
- பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்ணன். இவரது மனைவி பானுப்பிரியா (வயது 28). இவர் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை ஜெயங்கொண்டத்தில் வாங்கிவிட்டு பஸ்சில் திரும்பினார். பின்னர் செங்குந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துவிட்டு புதுக்குடி கிராமத்திற்கு செல்வதற்காக மழையில் நனைந்தவாறு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் பானுப்பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பானுப்பிரியா சத்தம் போட்டார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த ஆசாமிகளை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பானுப்பிரியா அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்."
- கவிதா. சென்னை தாம்பரத்தில் இருந்து தனது மகன் மற்றும் மகள் ஆகியோருடன் குருவாயூர் விரைவு ெரயில் வண்டியில் பயணம் செய்தார்.
- கவிதா கையில் வைத்திருந்த கைப்பையை மறதியாக ெரயிலில் தவற விட்டார்.
அரியலூர் :
கடலூர் மாவட்டம், எறையூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கவிதா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், சனிக்கிழமை காலை சென்னை தாம்பரத்தில் இருந்து தனது மகன் மற்றும் மகள் ஆகியோருடன் குருவாயூர் விரைவு ெரயில் வண்டியில் பயணம் செய்தார்.
முற்பகல் 12.40 மணியளவில் பெண்ணடம் ெரயில் நிலையத்தை வந்தடைந்தவுடன் ெரயிலில் இருந்து கவிதா தனது மகன், மகளுடன் கீழே இறங்கினர். அப்போது கவிதா கையில் வைத்திருந்த கைப்பையை மறதியாக ெரயிலில் தவற விட்டார்.
அதில் 5 பவுன் சங்கிலி, ரூ.2,500 மற்றும் கைகெடிகாரம், அடையாள அட்டைகள் இருந்தது. ெரயில் புறப்பட்டு சென்றதும், கைப்பையை காணாததால் அதிர்ச்சி அடைந்த கவிதா, இதுகுறித்து அங்கு ெரயில்வே பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவித்தார்.
உடனே இதுதொடர்பாக அரியலூர் ெரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தயாராக காத்திருந்த அரியலூர் ெரயில்வே பாதுகாப்பு படையினர், குருவாயூர் விரைவு ெரயில் அரியலூர் ெரயில்நிலையத்தை வந்ததடைந்ததும், கவிதா பயணம் செய்த பெட்டியில் ஏறி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த கைப்பையை மீட்டனர். இதில், மேற்கண்ட பொருள்கள் இருந்தது. இதையடுத்து அரியலூர் ெரயில்வே நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட கவிதாவிடம், மேற்கண்ட பொருள்களுடன் கைப்பையை ெரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர்.
தனது நகைகள் மற்றும் பணம் கிடைத்த மகிழ்ச்சியடைந்த கவிதா ெரயில்வே பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தார்.
- பானுப்பிரியா ஜெயங்கொண்டம் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி செங்குந்தபுரத்திற்கு வந்தார்.
- பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பானுப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 4பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புது குடி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மணி கண்ணன். இவரது மனைவி பானுப்பிரியா (வயது 28).
இவர் நேற்று மதியம் ஜெயங்கொண்டம் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி செங்குந்தபுரத்திற்கு வந்தார். பின்னர் புதுகுடி கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பானுப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 4பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.
இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
- சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்
அரியலூர்:
கடலூர் மாவட்டம் கிளிமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அஞ்சப்பன் மகன் பிரகாஷ் ( வயது 22) பால்வண்டி டிரைவரான இவர், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதிகளில் தொடர்ந்து பால் சப்ளை செய்ய அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் பெரியாத்துக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை சென்னைக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து டிரைவர் பிரகாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளியை தாக்கியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- சாதி பெயரைச் சொல்லி தாக்கியதாக கூறப்படுகிறது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் காசிலிங்கம்(வயது 48). விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 8-ந் தேதி சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த அருள் என்பவரது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையில் ஈடுபட்டார். அப்போது அதே கிராமத்தில் வசித்து வரும் கண்ணுசாமியின் மகன் பூபாலன் என்பவர் தண்ணீர் சென்று கொண்டிருந்த மடையை அடைத்துவிட்டு அவரது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தொடங்கியுள்ளார். இது குறித்து பூபாலனிடம் காசிலிங்கம் கேட்டபோது, பூபாலன் சாதி பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி, காசிலிங்கத்தை தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காசிலிங்கம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து தா.பழூர் போலீசில் காசிலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- பலத்த மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன.
- இரவு வரை தொடர்ந்து மழை
அரியலூர்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்தவாறு இருந்தது.
இதில் உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கழுமங்கலம், முனியத்தரியன்பட்டி, தத்தனூர், மணகெதி, வெண்மாண்கொண்டான், சொழங்குறிச்சி, கச்சிப் பெருமாள், துளாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், ஏந்தல், அழிசுகுடி, பருக்கல், காடுவெட்டாங்குறிச்சி, சுத்தமல்லி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக உடையார்பாளையம் பகுதியில் உள்ள வேலப்பன் செட்டி ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. மேலும் மழையின் காரணமாக விவசாய்கள் ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமல் தவித்தனர்.
உடையார்பாளையம் கடைவீதியில் உள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டு, கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்கள் வெளியூர் சென்று வர முடியாமல் தவித்தனர்."
- 8 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கலெக்டரால் அமைத்த குழு நடவடிக்கை
அரியலூர்
மாவட்டத்தில் உர விற்பனை மற்றும் இருப்பு தொடர்பாக ஆய்வு செய்திட கலெக்டரால் குழு அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்த குழு வட்டார வாரியாக உர விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து வருகிறது. ஆய்வின்போது விலை பட்டியல் வைக்காதது, உரம் விற்பனை இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை முனை எந்திரத்தில் இருப்பு போன்றவற்றை முறையாக பராமரிக்காமலும், கட்டண ரசீது இன்றி உர விற்பனை செய்தது போன்ற காரணங்களுக்காகவும் 8 உரக்கடைகளில் விற்பனைக்கு இந்த குழு தடை விதித்துள்ளது. மேலும் அந்த கடைகளில் விற்பனை முனை கருவி முடக்கம் செய்யப்பட்டுள்ளது.உரக்கடைகளில்
உர இருப்பு மற்றும் புத்தக இருப்பை சரி செய்யாதது மற்றும் கடைகளை ஆய்வு தினத்தன்று மூடியது உள்ளிட்ட குறைபாடுகள் காரணமாக 9 உரக்கடைகளுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, பதுக்கினாலோ அல்லது மற்ற இடுபொருட்களை சேர்த்து வற்புறுத்தி விற்பனை செய்தாலோ, மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்."
- மரம் விழுந்து லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
- மரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த போது நடந்த சம்பவம்
அரியலூர்:
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டைச் சேர்ந்தவர் அரோக்கியம் மகன் செல்வம்(வயது54). இவர், திண்டுக்கல்லிலிருந்து அரியலூருக்கு லாரியில் ஜெனரேட்டர் ஏற்றி வந்துள்ளார்.ெஜயங்கொண்டம் சாலையில், ஜெனரேட்டரை பொக்லைன் இயந்திரம் மூலம் கீழே இறக்கும் போது, அருகிலிருந்து புளிய மரத்தில் பொக்லைன் இயந்திரம் எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில், புளியமரம் வேரோடு சாய்ந்தது. அப்போது, மரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த செல்வம் மரத்தின் இடிபாடுகளில் சிக்கி அதேயிடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அரியலூர் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் கயர்லாபாத் காவல் துறையினர், மரத்தை அகற்றி செல்வத்தின் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால், அரியலூர்} ஜயங்கொண்டம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






