என் மலர்
நீங்கள் தேடியது "ெரயில்வே பாதுகாப்பு படையினர். RAILWAY GUARDS"
- கவிதா. சென்னை தாம்பரத்தில் இருந்து தனது மகன் மற்றும் மகள் ஆகியோருடன் குருவாயூர் விரைவு ெரயில் வண்டியில் பயணம் செய்தார்.
- கவிதா கையில் வைத்திருந்த கைப்பையை மறதியாக ெரயிலில் தவற விட்டார்.
அரியலூர் :
கடலூர் மாவட்டம், எறையூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கவிதா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், சனிக்கிழமை காலை சென்னை தாம்பரத்தில் இருந்து தனது மகன் மற்றும் மகள் ஆகியோருடன் குருவாயூர் விரைவு ெரயில் வண்டியில் பயணம் செய்தார்.
முற்பகல் 12.40 மணியளவில் பெண்ணடம் ெரயில் நிலையத்தை வந்தடைந்தவுடன் ெரயிலில் இருந்து கவிதா தனது மகன், மகளுடன் கீழே இறங்கினர். அப்போது கவிதா கையில் வைத்திருந்த கைப்பையை மறதியாக ெரயிலில் தவற விட்டார்.
அதில் 5 பவுன் சங்கிலி, ரூ.2,500 மற்றும் கைகெடிகாரம், அடையாள அட்டைகள் இருந்தது. ெரயில் புறப்பட்டு சென்றதும், கைப்பையை காணாததால் அதிர்ச்சி அடைந்த கவிதா, இதுகுறித்து அங்கு ெரயில்வே பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவித்தார்.
உடனே இதுதொடர்பாக அரியலூர் ெரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தயாராக காத்திருந்த அரியலூர் ெரயில்வே பாதுகாப்பு படையினர், குருவாயூர் விரைவு ெரயில் அரியலூர் ெரயில்நிலையத்தை வந்ததடைந்ததும், கவிதா பயணம் செய்த பெட்டியில் ஏறி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த கைப்பையை மீட்டனர். இதில், மேற்கண்ட பொருள்கள் இருந்தது. இதையடுத்து அரியலூர் ெரயில்வே நிலையத்துக்கு வரவழைக்கப்பட்ட கவிதாவிடம், மேற்கண்ட பொருள்களுடன் கைப்பையை ெரயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர்.
தனது நகைகள் மற்றும் பணம் கிடைத்த மகிழ்ச்சியடைந்த கவிதா ெரயில்வே பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தார்.






