என் மலர்tooltip icon

    அரியலூர்

    • குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • பாலியல் வன்கொடுமை வழக்கில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தா.பொட்டகொல்லை வடக்குத் தெருவைச் சேர்ந்த மதியழகன் மகன் நாவரசு (வயது20). இவர் அப்பகுதியில் உள்ள சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அச்சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தில் நாவரசை கடந்த மாதம் 16 ஆம் தேதி கைது செய்து ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், நாவரசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து நாவரசு 

    • இறந்தவர்களின் உடலை இடுப்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.
    • கழுவந்தோண்டி கிராமத்தில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நைனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவை கொண்டது. உடையார் பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீரு வடிகால் மற்றும் காட்டு பகுதிகள் வழியாக சென்று இந்த ஏரியில் கலக்கிறது. பின்னர் இந்த ஏரி நிரம்பி வடிகால் மதகு வழியாக சென்று கொள்ளிடத்தில் கலக்கிறது.

    இந்த ஏரியின் கரையில் இடுகாடு அமைந்துள்ளது. இப்பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் ஏரிக்கரை வழியாக தூக்கி சென்று இடுகாட்டில் புதைக்கபடும். மழைக்காலங்களில் இறந்தவரின் உடலை கழுத்தளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம் தற்போதும் நீடிக்கிறது. எனவே இப்பகுதியில் பாலம் மற்றும் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் கழுவந்தோண்டி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரது மனைவி மின்னல்கொடி (65) என்பவர் நேற்று உடல்நிலை குறைவால் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் அவரது உடலை உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

    இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும் போது, எங்கள் அவலத்தை மனதில் வைத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு இன்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுனர்களும் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இம்முகாமில் கலந்து கொள்வதற்கு 18 வயது முதல் 35 வரையிலான ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணையும் அல்லது ariyalurjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
    • பாலியல் வன்கொடுமை வழக்கில்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடையார்பாளையம் அடுத்த கோடாலி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செல்வகணபதி (22). கூலித் தொழிலாளியான இவர், 12 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட ஜெய ங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர், செல்வகணபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளி க்கப்பட்டது. இதில் குற்றவாளி செல்வக ணபதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரமும் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து செல்வகணபதி திருச்சி மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • எரிபொருள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • சிறுவளூரில் அரசு பள்ளியில் நடந்தது

    அரியலூர்:

    தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேசுகையில், தற்போது தேவைக்காக பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு போன்றவைகள் உலகில் இருந்து விரைவில் தீர்ந்து விடும். எனவே மக்கள் அனைவரும் ஆற்றலை சேமிக்க வேண்டும். ஆற்றல் சேமிப்பு என்பது ஆற்றலை குறைவாக பயன்படுத்துவதை குறிக்கும்.

    தேவையற்ற இடங்களில் மின் சாதன பொருள்களை இயக்குவது, அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல பெட்ரோலிய வாகனங்களை பயன்படுத்துவது போ ன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் எரிபொருள் தேவையை குறைக்கலாம்.

    புதுப்பிக்க முடியாத ஆற்றல் வளங்களான பெட்ரோல் நிலக்கரி டீசல் போன்ற பொருள்களை அடுத்த தலைமுறை ளயினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும். மாணவர்கள் தங்கள் இல்லங்களிலும் பள்ளிகளிலும் தேவையற்ற மின்சார விளக்குகள் விசிறிகள் ஆகியவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து எரிசக்தி பாதுகாப்பு குறித்த மாணவர்களுக்கு இடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, தங்கபாண்டி, வீரபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

    • பெரியபாளையம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது
    • மக்களுடன் ஆலோசனை கலந்தாலோசிக்கப்பட்டது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய வளையம் கிராமத்தில் தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் தேர்வு செய்வது குறித்த கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வேம்பு சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வரும் 2023 -2024 ஆம் ஆண்டிற்கு தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்திற்கான பணிகள் தேர்வு செய்வது குறித்து கிராம மக்களுடன் ஆலோசனை கலந்து அலசிக்கப்பட்டது. தீர்மானத்தை ஊராட்சி செயலாளர் சோழன் வாசித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் மணிகண்டன், ராஜதுரை, கனிமொழி, சுசீலா, அன்புச்செல்வி உட்பட பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

    • 175 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • மக்கள் தொடர்பு முகாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த குருவாடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்ற கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, பல்வேறு துறைகள் சார்பில் 175 பயனாளிகளுக்கு ரூ.14,22,260 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசும்போது, இந்த நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தற்பொழுது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களிலிருந்து பெற்றோர் தங்களது குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.

    தங்களது வீட்டைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். மழைக்காலத்தில் குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும். இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

    இதன்படி, வீடு, தெரு, கிராமம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும்படி பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    முகாமில், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்த திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.

    இம்முகாமுக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் குமார், வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் சுப்புலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • சி., எம்.பி.சி., சீா்மரபினா் உயா்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
    • 31.01.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    அரியலூர்:

    மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உயா் கல்வி பயிலும் அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிறப்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ, மாணவிகள் நிகழாண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா் மரபினா் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகையாக அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-2023 ஆம் கல்வியாண்டில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ, மாணவிகள் சென்னை பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககத்தையோ அல்லது ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தையோ அணுகலாம் அல்லது இணையதள முகவரியிலிருந்தும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணபங்களில் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் சான்றொப்பம் அளித்து தகுதியான விண்ணப்பங்களைப் பரிந்துரை செய்து ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5, என்ற முகவரிக்கு 31.01.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    • சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டார அளவிலான சுகாதார பேரவை கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செந்தில்குமார் வரவேற்று பேசினார். ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி வீரமணிகண்டன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி, பள்ளி மாணவர்களுக்கான திட்ட மருத்துவர் புகழேந்தி ஆகியோர் சுகாதாரத்துறை சார்பில் பேரவையின் பணிகளையும், திட்டத்தையும் விளக்கி பேசினர்.

    சுகாதாரத்துறை சார்ந்த கல்வி, ஊரக வளர்ச்சித் துறை, குழந்தைகள் வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள், தா.பழூர் வட்டாரத்தில் சுகாதாரம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், அவற்றை செய்வதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், எதிர்கால சுகாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர்.

    • அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியை சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து வருகின்றனர். இதையொட்டி சித்தேரி கரையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடும், தினமும் இரவில் பஜனையும் மற்றும் கன்னி பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க கோரி மூதாட்டி மனு அளித்தார்.
    • கலெக்டரிடம் மனு அளித்தார்

    அரியலூர்

    உடையார்பாளையம் தாலுகா நடுவெளி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜெயலட்சுமி(வயது 70), உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். மேலும் அவர் கூறுகையில், எனக்கு வழங்கப்பட்டு வந்த மாற்றுத்திறனாளி உதவித்தொகை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. அதனை மீண்டும் வழங்கக்கோரி 3 முறை மனு அளித்துள்ளேன். ஆனால் உதவித்தொகையை மீண்டும் வழங்கவில்லை. ஒவ்வொரு முறை மனு அளிக்க வரும்போதும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் உதவித்ெதாகையை கொண்டே வாழ்க்கை நடத்தி வந்தேன். எனவே எனக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையை மாவட்ட கலெக்டர் மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக கண்ணீர் மல்க கூறினார். 

    • பலத்த மழையால் நடவு பணிகள் பாதிப்படைந்த
    • திருமானூரில் அதிகபட்சமாக 15.5செ.மீ.,

    அரியலூர்:

    வடக்கு கேரளம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை தொடங்கி இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்தது. குறிப்பாக பிற்பகலில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நிலவரப்படி, திருமானூரில் அதிகபட்சமாக 15.5செ.மீ., அரியலூர் 5.2 செ,மீ. மழை பதிவானது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் நடவு மற்றும் களை பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.

    ×