என் மலர்
அரியலூர்
- அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது
- நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம் முகாம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். நாம் தமிழர் கட்சி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நீல மகாலிங்கம் தலைமையில் ரத்த தானம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கப்பல் குமார், தொகுதி செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் மணிவண்ணன் நகர தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இதில் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் நசியாஹுசேன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவர் ரத்தங்களை சேகரித்தனர்.17 நபர்களிடமிருந்து 17 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட ரத்தம் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
- இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்று அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டதலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் முருகேசன் வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளர்கள் ஆடுதுறை உத்திராபதி, வேங்கை சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னாள் எம்.எல்.ஏ. பாளை.து.அமரமூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் பாலு உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:
இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். இவர் மட்டுமே தமிழகம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களுக்காகவும் போராடி வருகிறார். விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களுக்கும், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகவும் முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். காஷ்மீர் மக்கள் மீது மத்திய அரசு கொண்டு வந்த அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தவரும் மு.க.ஸ்டாலின். ஜனநாயகத்தின் குரல் வலை நெரிக்கப்படுகிறது. இது நாளை நமது மாநிலத்தையும் பாதிக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து தான் குரல் கொடுத்தார். உதயநிதி அமைச்சரானது குறித்து சசிகலாவும், தினகரனும் பேசுவது ஏனென்றால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்றி, அதன் மூலமாக ஆட்சியை கைப்பற்றி, தமிழகத்தை சுருட்டி வளைத்து விடலாம் என நினைத்தார்கள். அது நடக்கவில்லை என்பதால் அந்த வெறுப்பில் பேசுகிறார்கள். அதேபோல், ஒரு ஆட்சி எப்படி நடத்த கூடாது என உதாரணமாக நடத்தி காட்டியவர் தான் எடப்பாடி பழனிசாமி. இவர்களே கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், தற்காலிக ஒருங்கிணைப்பாளர் என புதிய புதிய பொறுப்புகளை வைத்துக்கொள்வர். தற்போது, அந்த சீட்டையும் நீதிமன்றம் பிடுங்கிவிட்டது. உங்களது சீட் எங்கு உள்ளது என கண்டுபிடியுங்கள்.
தற்போது பெயருக்கு முன்னாள் என்ன பொறுப்பு போடுவது என்றே தெரியாமல் பழனிசாமி குழம்பிபோய் உள்ளார். உங்களது விமர்சனங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய செயல்பாட்டின் மூலம் பதில் சொல்வார். காந்திருங்கள், காலம் இன்னும் உங்களுக்கு பல அதிர்ச்சிகளை தர காத்திருக்கிறது. தமிழக எம்எல்ஏக்களில் உதயநிதி ஸ்டாலின் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரது செயல்பாடு போகப்போக அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- அம்பேத்கருக்கு காவி உடை அணிந்ததை கண்டித்து நடந்தது
அரியலூர்:
அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதி அன்று கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஓட்டப்பட்டிருந்த போஸ்டரில் அம்பேத்கருக்கு காவி உடையுடன் பட்டையிடப்பட்டதை கண்டித்தும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அரியலூர் பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட செயலர் செல்வநம்பி தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு மாநிலச் செயலர் குணவழகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாநில பொருப்பாளர்கள் அன்பானந்தம், தனக்கோடி, கருப்புசாமி, ஆசிரியர் செல்வராஜ், தொகுதிச் செயலாளர்கள் மருதவாணன், இலக்கியதாசன், செய்தித் தொடர்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
- எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை கர்ப்பமாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.
- மாணவியை கர்ப்பமாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் கைது
அரியலூர் :
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறியதையடுத்து, அவரது பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அந்த மாணவி 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இது பற்றி மாணவியிடம் விசாரித்தபோது, பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன், அந்த மாணவியுடன் பழகியதும், வீட்டில் இருந்த மாணவியிடம் அப்பா, அம்மா விளையாட்டு விளையாடலாம் என்று கூறி கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் உறவு கொண்டதும், அதனை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை மேற்கொண்டார்.
மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவனை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் அந்த மாணவன் திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது."
- மாநில கபடி போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- கலெக்டரை சந்தித்து பாராட்டு பெற்றனர்
அரியலூர்:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் நடந்தது. இதில் அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையை வென்றனர். பின்னர் அந்த அணி வீராங்கனைகள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதியை சந்தித்து பாராட்டு பெற்றனர். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
- கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடந்தது
- திரளான பக்தர்கள் வழிபட்டனர்
அரியலூர்:
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பெருமாள் மற்றும் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாட்டிற்காக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி அரியலூர் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- பள்ளி எதிரே புகையிலை பொருள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே போதைப்பொருளான மாவா (குட்கா) விற்கப்படுவதாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் செந்துறை போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்துறை காலனி தெருவை சேர்ந்த குமரவேல் என்பவர் நடத்தி வரும் டீக்கடையுடன் கூடிய பெட்டிக்கடையில் மாவா விற்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து குமாரவேலை கைது செய்த போலீசார், அவரிடம் 7 பொட்டலங்களில் இருந்த மாவாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
- நீதிபதி வீ.ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர்:
தேசிய அளவில் நுகர்வோர் வழக்குகளை தீர்க்க சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள், நுகர்வோர் ஆணையங்களில் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நீதிபதி வீ.ராமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் விசாரிக்கப்பட்ட 2 புகார்களில், விற்கப்பட்ட பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனையாளர்கள் வசூலித்து உள்ளது தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் கூடுதலாக பெறப்பட்ட தொகை மற்றும் இழப்பீடாக ரூ.1 லட்சம் தருவதற்கு மக்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.
மற்றொரு வழக்கில் உற்பத்தி குறைபாடுள்ள செல்போனை விற்பனை செய்த கடைக்காரர் அதனை மாற்றி புதிய செல்போனை வழங்க மக்கள் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு தீர்வு ஏற்பட்டது. சூரிய மின்சக்தி உபகரணத்தின் குறைபாடு ஏற்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் அதனை வழங்கிய நிறுவனத்தினர் உபகரணத்தின் குறைபாடுள்ள பகுதிகளை மாற்றி இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக ஒப்புக்கொண்டனர்.
மேலும் வீடு தீப்பற்றியதால் ஏற்பட்ட இழப்புகளுக்கு கொடுக்க வேண்டிய காப்பீட்டுத்தொகையை கொடுக்கவில்லை என்று காப்பீட்டு நிறுவனம் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், உயரதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று இரண்டு வார காலத்திற்குள் ரூ.5 லட்சத்தை புகார்தாரருக்கு வழங்க காப்பீட்டு நிறுவன மேலாளர், மக்கள் நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளார்.
மேலும் சேவை குறைபாடு, கூடுதல் தொகை பெற்றது, நியாயமற்ற வணிக நடைமுறை, உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் குறைபாடு தொடர்புடைய 55 நுகர்வோர் புகார்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்கு மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த மக்கள் நீதிமன்ற அமர்வில் உறுப்பினராக வீரம் லாவண்யா பங்கேற்றார். இதில் அரசு வக்கீல் கதிரவன் உள்ளிட்ட வக்கீல்களும், புகார்தாரர்களும், எதிர் தரப்பினரும் என பலர் கலந்து கொண்டனர்.
- ஜெயங்கொண்டம் அய்யப்பசாமி திருவீதியுலா நடந்தது
- திரளான இருமுடி பக்தர்கள் பங்கேற்பு
அரியலூர்:
அரியலூர் மாவட்டம். ஜெயங்கொண்டத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி அய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து அய்யப்பனை வழிபடுவது வழக்கம். ஜெயங்கொண்டம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அய்யப்பனை வழிபடுவார்கள்.
சுவாமிக்கு மார்கழி மாதம் முதல் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.அதனை முன்னிட்டு சுவாமிக்கு கச்சேரி நாதஸ்வரம் முழங்க சிறப்பு நெய் அபிஷேகம் மற்றும் மஞ்சள், சந்தனம் பால், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து முக்கிய வீதிகள் வழியாக அய்யப்பன் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் கேரளம் செண்டை மேளம் முழங்க, வாணவேடிக்கையுடன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அம்மன், அய்யப்பன், சிவன், பார்வதி உள்ளிட்ட சாமிகள் வேடம் அணிந்து வேடதாரிகள் நடனம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் காலை மதியம் என அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த வீதி உலாவில் ஜெயங்கொண்டம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து அய்யப்பனை வணங்கி சென்றனர்.
- அரியலூரில் அனைத்து விரைவு ெரயில்களும் நின்று செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- பேரூராட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூரிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வட்டார, நகர மற்றும் பேரூராட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட பொருளாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் கர்ணன், பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு, அழகானந்தம், கங்காதுரை, சரவணன், சாமிநாதன், சக்திவேல், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் மாமு. சிவகுமார் வரவேற்றார்.
இதில், கடந்த பல ஆண்டுகளாக அரியலூர் ெரயில் நிலையத்தில் சென்ற தூத்துக்குடி-சென்னை, ராமேஸ்வரம்- சென்னை அதி விரைவு ெரயில்கள் கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது. தொற்று குறைந்த பிறகு மேற்கண்ட ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரியலூர் ெரயில் நிலையத்தில் நிற்பதில்லை. எனவே மேற்கண்ட ரயில்கள் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாச்சலம்-திருச்சி(மறுமார்க்கமும்), திருப்பாப்புலியூர் -திருச்சி(மறுமார்க்கமும்), விழுப்புரம் -மதுரை போன்ற பயனிகள் ெரயில்கள் சாதாரண கட்டணத்திலேயே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடியினை ஏற்றுவது, இளைஞர்களை அதிகளவில் சேர்ப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
- செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- கலெக்டர் அலுவலகம் முன்பு
அரியலூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி.செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி எம்.ஆர்.பி.செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். முறையான போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்தும், 7 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐபிஎச்எஸ் மற்றும் எம்சிஐ பரிந்துரையின் படி நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை கொரோனா காலக் கட்டத்தில் சிகிச்சை அளித்த செவிலியர்களைக் கொண்டு நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு, கோரிக்கை மனுக்களை கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூங்கோதையிடம் வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராகவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மகேஸ்வரி கோரிக்கை குறித்து விளக்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன், மாவட்டச் செயலர் என்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
- தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது
- மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் குறித்து
அரியலூர்:
அரியலூர் பேருந்து நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கலெகடர் பெ.ரமணசரஸ்வதி தொடக்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், இன்று ஆண்டிமடம் பேருந்து நிலையம், மீன்சுருட்டி பேருந்துநிலையம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் மற்றும் தா.பழூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியிகள் நடைபெறுகிறது. இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து மாற்றுத்திறனாளிகள் தெரிந்து பயன்பெற வேண்டும் என்றார்.
பின்னர், அவர் அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், வருவாய் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






