என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அரியலூரில் அனைத்து விரைவு ெரயில்களும் நின்று செல்ல தீர்மானம்
  X

  அரியலூரில் அனைத்து விரைவு ெரயில்களும் நின்று செல்ல தீர்மானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரியலூரில் அனைத்து விரைவு ெரயில்களும் நின்று செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
  • பேரூராட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

  அரியலூர்

  அரியலூரிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வட்டார, நகர மற்றும் பேரூராட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட பொருளாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் கர்ணன், பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு, அழகானந்தம், கங்காதுரை, சரவணன், சாமிநாதன், சக்திவேல், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் மாமு. சிவகுமார் வரவேற்றார்.

  இதில், கடந்த பல ஆண்டுகளாக அரியலூர் ெரயில் நிலையத்தில் சென்ற தூத்துக்குடி-சென்னை, ராமேஸ்வரம்- சென்னை அதி விரைவு ெரயில்கள் கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது. தொற்று குறைந்த பிறகு மேற்கண்ட ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரியலூர் ெரயில் நிலையத்தில் நிற்பதில்லை. எனவே மேற்கண்ட ரயில்கள் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாச்சலம்-திருச்சி(மறுமார்க்கமும்), திருப்பாப்புலியூர் -திருச்சி(மறுமார்க்கமும்), விழுப்புரம் -மதுரை போன்ற பயனிகள் ெரயில்கள் சாதாரண கட்டணத்திலேயே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடியினை ஏற்றுவது, இளைஞர்களை அதிகளவில் சேர்ப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

  Next Story
  ×