என் மலர்tooltip icon

    அரியலூர்

    • மக்கள் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது
    • ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதி லதா தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் நிலங்களை கையகப்படுத்தியது.இதையடுத்து நிலங்களை இழந்த விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமலும் வீடுகள் கட்ட முடியாமல் சில வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களுக்கு அந்தந்த நில உரிமையாளரிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென்று சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் 110 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் அனல் மின் திட்ட தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார். இந்த மக்கள் நீதிமன்றத்தினை ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி முத்து கிருஷ்ணன், ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (நிலம் எடுப்பு) வேலுமணி அரசு வழக்கறிஞர்கள் .மோகன் ராஜ் மற்றும் செந்தில்குமார், மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் முன்னின்று நடத்தினர்.




    • முதியவரை தாக்கிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    • சுரேஷை தட்டிக்கேட்டுள்ளார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் விளந்தை செங்குந்தர் காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது37). கார் டிரைவரான இவர் அதேபகுதியில் மது போதையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்றுகொண்டு அந்த வழியாக சென்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம்(70) என்பவர் சுரேஷை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், தர்மலிங்கத்தை உருட்டு கட்டையால் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தர்மலிங்கம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • உரிமையாளர் ெவளியூர் சென்றிருந்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், செந்துறை-உடையார்பாளையம் சாலையில் வசித்து வருபவர் ராமசாமி(வயது64). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று தனிமையில் வசித்து வருகிறார். கடந்த 16ந் தேதி தனது மகனை பார்க்க நாகர்கோவில் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை இவரது வீட்டின் முன் பகுதி விளக்கை அணைக்க பக்கத்தில் கடை வைத்திருக்கும் மெக்கானிக் சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் நிறுத்தியிருந்த ராமசாமியின் ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அவர் ஊரில் இருந்து வந்து விட்டாரா என்ற சந்தேகத்துடன் அவருக்கு போன் செய்து கேட்டுள்ளார். செல்போனில் பேசிய ராமசாமி தான் இன்னும் நாகர்கோவிலில் இருந்து வரவில்லை என்றும், வீட்டில் வேறு ஏதேனும் காணாமல் போய் உள்ளதா என்று பாருங்கள் என்று கூறினார். அதனை தொடர்ந்து வீட்டை பார்த்து போது வீட்டின் முன் பக்க பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்திருப்பதாக மெக்கானிக் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி செந்துறை போலீசார் மற்றும் அருகில் உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்த தனது உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். அதனை தொடர்ந்து உறவினர்கள் மற்றும் போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகளுக்கு இடையே வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் ஸ்கூட்டரையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தாலுகா அலுவலகம் அருகே ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


    • பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 481 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்று அதன் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பின்னர் அரியலூர் மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளை சிறப்பாக நிர்வகித்த கோடாலிக்கருப்பூர், அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி, பட்டதாரி காப்பாளர் சந்தோஷ் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.10,000ம், செந்துறை அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி, பட்டதாரி காப்பாளர், கல்யாணகுமார் என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.5,000ம், பொன்பரப்பி, அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி இடைநிலைக் காப்பாளர் சுப்பிரமணியன் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.3,000ம், பாராட்டு சான்று மற்றும் கேடயத்தினையும் கலெக்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


    • அனைவரும் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி மனு அளித்தனர்
    • அரியலூர் கோக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கோக்குடியில் அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்குமாறு கலெக்டர் ரமணசரஸ்வதியிடம் கிராம நாட்டாமைகள் செல்வராஜ், சவரிராஜ் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ஆண்டு தோறும் தைமாதம் 5-ந் தேதி அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு அரியலூர் கோக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெறும். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் காரணமாகவும், 2022 ஆண்டு முதல் மாடு யார் விடுவது என்பது காரணமாகவும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எங்களுக்குள் பிரிவிவாக பிரிந்திருக்கிறோம். கடந்த 5 தேதி அன்று ஒரு பிரிவினர் தாங்கள் தான் கோக்குடி என்று சொல்லி ஜல்லிக்கட்டு நடத்த மனு அளித்துள்ளார்கள். ஜல்லிக்கட்டு விழா ஒரு பிரிவினருக்கோ அல்லது இயக்கங்களுக்கோ வகையராகவுக்கோ கோக்குடி ஜல்லிக்கட்டு சொந்தமில்லை. எனவே அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் முதல் மாடு அல்லது பொது மாடு விட்டு ஜல்லிக்கட்டு நடத்த ஆவனம் செய்ய வேண்டும் அல்லது மனுவில் அளித்துள்ள விதிமுறைகளின் படி ஜல்லிக்கட்டு நடந்தால் நன்றாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • தங்கப் பதக்கத்தை வென்றார்
    • தங்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு தெரிவித்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர் அரியலூர் கோட்ட நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தங்கம் (வயது 19). இவர் சென்னை தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் கலந்துகொண்டு ஒரு மணி நேரம் 48 நிமிடம் 52 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் தங்கப்பதக்கத்தை வென்ற தங்கத்திற்கு மாநில நெடுஞ்சாலை துறை, சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சாலை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகராஜா ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றுள்ள தங்க மங்கையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சந்தித்து உலக அளவில் பல்வேறு பதக்கங்களையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அந்த வீராங்கனையை ஊக்கப்படுத்த வேண்டும். கல்வியிலும், பொருளாதாரத்திலும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என கூறினார்.


    • போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
    • கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் ஆண்டிமடம், சிலம்பூர், ஓலையூர் ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெரியாத்துக்குறிச்சி சோதனை சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக நடந்து வந்த நபரை சோதனை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனையிட்டபோது அவர் சுமார் 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பாசிகுளம் கிராமம் புது காலனி தெருவை சேர்ந்த கருப்புசாமி(வயது 39) எனபது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, கருப்புசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


    • பட்டு நூல்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பேரவை கூட்டம் நடைபெற்றது

    அரியலுார்:

    அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கை நெசவுத்தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் நெசவாளர்களுக்கு போனஸ் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். கல்வி, திருமணம், இயற்கை, மரணம் உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளை 2 மடங்காக உயர்த்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல அனைத்து சலுகைகளும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். பட்டு நுால்களுக்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும். கடந்தாண்டைப்போல நல வாரியம் மூலம் பொங்கல் பொருள் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.4,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி மாதம் ரூ.20 ஆயிரம் கிடைக்க சட்டத் திருத்தம் செய்து அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


    • ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், குண்டவெளி ஊராட்சி மீன்சுருட்டியில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் தெற்கு பகுதியில் ஒரு மயானம் உள்ளது. இந்த மயானத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் மயானத்தில் போதிய இட வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
    • கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்

    அரியலுார்:

    அரியலுார் ராஜாஜி நகரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் அலுவலத்தில், நாளை (செவ்வாய்கிழமை) முற்பகல் 11 மணியளவில் மாவட்ட அளவில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று, குறைகள் இருந்தால் மனுவாக அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


    • உடையார்பாளையத்தில் அரசு கல்லூரி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • தேசிய ஓய்வூதியர்கள் தின விழா

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் தேசிய ஓய்வூதியர்கள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நடேசன், சுந்தரேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உதவி சித்த மருத்துவ அலுவலர் சையதுகரீம், இந்தியன் வங்கி கிளை மேலாளர் வெங்கடேஷ், நல்லாசிரியர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நீத்தார் நிதி உதவி திட்ட செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விழாவில், ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு கலை கல்லூரியை உடையார்பாளையத்திற்கு மாற்ற வேண்டும். உடையார்பாளையத்தில் இயங்கி வந்த கல்வி மாவட்டத்தை மீண்டும் இங்கு செயல்படுத்த வேண்டும். புதிதாக கால்நடை மருத்துவமனை திறக்கப்படுவதற்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • காவல் நிலையத்தில் தூய்மை பணி நடைபெற்றது
    • வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று தூய்மை பணி மேற்கொள்வது வழக்கம் அந்த வகையில் நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார்கள் போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் தூய்மை பணி மேற்கொண்டனர். இதில் போலீஸ் நிலையம் உள்ளே ஒட்டடை அடிக்கப்பட்டு ஒழுங்கற்ற முறையில் இருந்த பொருட்களை ஒழுங்கு படுத்தப்பட்டதுடன் பெண்கள் மற்றும் ஆண்கள் கைது சிறையை தூய்மைப்படுத்தியும், புகார் அளிக்கப்படும் தாய்மார்களின் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருட்களை ஒழுங்குபடுத்தப்பட்டதுடன் தேவையற்ற பொருட்களை வெளியேற்றியும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    ×