என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டு நூல்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய நெசவாளர்கள் கோரிக்கை
- பட்டு நூல்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பேரவை கூட்டம் நடைபெற்றது
அரியலுார்:
அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கை நெசவுத்தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 10 சதவீத கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் நெசவாளர்களுக்கு போனஸ் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். கல்வி, திருமணம், இயற்கை, மரணம் உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளை 2 மடங்காக உயர்த்த வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல அனைத்து சலுகைகளும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். பட்டு நுால்களுக்களுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும். கடந்தாண்டைப்போல நல வாரியம் மூலம் பொங்கல் பொருள் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.4,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி மாதம் ரூ.20 ஆயிரம் கிடைக்க சட்டத் திருத்தம் செய்து அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






