என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா வைத்திருந்தவர் கைது
    X

    கஞ்சா வைத்திருந்தவர் கைது

    • போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
    • கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் ஆண்டிமடம், சிலம்பூர், ஓலையூர் ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெரியாத்துக்குறிச்சி சோதனை சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக நடந்து வந்த நபரை சோதனை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனையிட்டபோது அவர் சுமார் 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பாசிகுளம் கிராமம் புது காலனி தெருவை சேர்ந்த கருப்புசாமி(வயது 39) எனபது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, கருப்புசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


    Next Story
    ×