என் மலர்
உள்ளூர் செய்திகள்

எரிபொருள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
- எரிபொருள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- சிறுவளூரில் அரசு பள்ளியில் நடந்தது
அரியலூர்:
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேசுகையில், தற்போது தேவைக்காக பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு போன்றவைகள் உலகில் இருந்து விரைவில் தீர்ந்து விடும். எனவே மக்கள் அனைவரும் ஆற்றலை சேமிக்க வேண்டும். ஆற்றல் சேமிப்பு என்பது ஆற்றலை குறைவாக பயன்படுத்துவதை குறிக்கும்.
தேவையற்ற இடங்களில் மின் சாதன பொருள்களை இயக்குவது, அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல பெட்ரோலிய வாகனங்களை பயன்படுத்துவது போ ன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் எரிபொருள் தேவையை குறைக்கலாம்.
புதுப்பிக்க முடியாத ஆற்றல் வளங்களான பெட்ரோல் நிலக்கரி டீசல் போன்ற பொருள்களை அடுத்த தலைமுறை ளயினருக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும். மாணவர்கள் தங்கள் இல்லங்களிலும் பள்ளிகளிலும் தேவையற்ற மின்சார விளக்குகள் விசிறிகள் ஆகியவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். தொடர்ந்து எரிசக்தி பாதுகாப்பு குறித்த மாணவர்களுக்கு இடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, தங்கபாண்டி, வீரபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.






